உலக தடகள போட்டியில் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் CRYSBRO

Share with your friend

இலங்கையின் முன்னணி கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான CRYSBRO, இந்த வாரம் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் உலக கனிஷ்ட மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் மூன்று இளம் விளையாட்டு வீரர்களுக்கு தமது ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளது.

இந்த விளையாட்டு வீர வீராங்கனைகள் மூவரும், ஸ்ரீலங்கா ஒலிம்பிக் கமிட்டியின் (NOCSL) CRYSBRO Next Champ புலமைப்பரிசில் திட்டத்தில் உதவிகளைப் பெற்றுக்கொள்வதனால் CRYSBRO நிர்வகிப்பின் வெற்றியானது புலப்படும் வெற்றியாக இருப்பதுடன் அனைத்து புலமைப்பரிசில் பெறுபவர்களுக்காகவும் CRYSBRO தமது உச்ச அளவிலான ஒத்துழைப்புக்களை வழங்கும்.

CRYSBRO மற்றும் இலங்கை தேசிய ஒலிம்பிக் கமிட்டி (NOCSL) இலங்கையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 20 திறமையான இளம் விளையாட்டு வீர வீராங்கனைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக NOCSL-CRYSBRO Next Champ திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

‘கடின உழைப்பால் தங்கள் இலக்குகளை அடைந்த இந்த இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்பதில் அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் எங்கள் மூன்று விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதைப் பார்த்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்கள் இலங்கை அன்னைக்கு வெற்றியைத் தேடித் தருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.’ என CRYSBRO சிரேஷ்ட முகாமையாளர் – சந்தைப்படுத்தல் – அமோரஸ் செலர் தெரிவித்தார்.

உலக கனிஷ்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தருஷி கருணாரத்ன மற்றும் ரவிந்து சித்தும் ஜயசுந்தர ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

கண்டியில் வசிக்கும் தருஷி, தற்போது தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை விளையாட்டு வீரர்களுடன் திகன மாகாண விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறார். விமானியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் தடகளம் மற்றும் உயர் படிப்பைத் தொடர்வதே அவரது எதிர்கால குறிக்கோள் ஆகும்.

ரவிந்து குருநாகல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவலா கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தற்போது வெலகெதரா மைதானத்தில் பயிற்சி பெறுகிறார், ஒரு சிறந்த மற்றும் தகுதி வாய்ந்த நபராக இருக்க வேண்டும் என்பதே அவரது லட்சியம்.

நெத்மி அகின்சா பெர்னாண்டோ உலக கனிஷ்ட மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். நெத்மி உள்ளுர் போட்டிகளில் முதல் இடங்களை வென்று மிகவும் பாராட்டப்பட்டார். அவர் சர்வதேச அளவில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

பொது மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக உள்ளுர் மற்றும் சர்வதேச சாதனைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 இளம் விளையாட்டு வீர வீராங்கனைகளை, Next Champ புலமைப்பரிசில் திட்டத்தின் விரிவாக்கமான ‘Next Olympic Hope’ திட்டத்தை தொடங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.

‘Next Olympic Hope’ ஊடாக நாட்டிற்குள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு www.nextolympichope.com மூலம் இந்த இளம் மற்றும் முன்னேரி வரும் வீர வீராங்கனைகளுக்காக உதவிகளை செய்து இலங்கை கொடியை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியும்.

1972ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக் குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கி நிற்கவேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும். இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி (vertically integrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தாரக மந்திரமான ஷபண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.


Share with your friend