உள்நாட்டு திறமையை சர்வதேச மட்டத்தில் கொண்டும் செல்லும் வகையில் இலங்கையில் Sotheby இன்டர்நஷனல் முன்னெடுக்கும் முதலாலவது ஏலமாக அமைந்திருக்கும்
அலங்கார கலை, ஆபரணம் மற்றும் சேகரிப்புப் பொருட்கள் தொடர்பில் உலகின் முன்னணி ஏல விற்பனை அமைப்புகளில் ஒன்றான Sotheby இன்டர்நஷனலுடன், George Keyt மையம் கைகோர்த்துள்ளது. அதனூடாக இலங்கையின் புத்தாக்க கலை தொடர்பில் புதிய அத்தியாயத்தை எழுத முன்வந்துள்ளது. இலங்கையில் Sotheby முன்னெடுக்கும் முதலாவது ஏலமாக இது அமைந்திருக்கும் என்பதுடன், உள்நாட்டு கலைஞர்களின் ஆக்கங்களை காண்பித்து, அவற்றை விற்பனை செய்யும் நிகழ்வாக அமைந்திருக்கும்.
மூன்று நாள் நிகழ்வு 2024 டிசம்பர் 7 – 9 வரை கொழும்பு Cinnamon Life இல் நடைபெறும். இலங்கையின் கலைஞர்களின் ஆக்கங்களை சர்வதேச கட்டமைப்பில் பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்படும். அதனூடாக இலங்கையின் கலைத்திறமைகளுக்கு சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் ஈடுபாடு பிரதிபலிக்கப்படும்.
Sotheby இன் பணிப்பாளர், விசேட நிபுணர் மற்றும் தெற்காசிய கலையின் நவீன மற்றும் இணை உலகளாவிய பரப்புகை தலைமை செயற்பாட்டாளரான இஷ்ரத் கன்கா அவர்களின் வழிநடத்தலுடன் நிகழ்வு 07 ஆம் ஆரம்பமாகும். ஆரம்ப இரவு நிகழ்வைத் தொடர்ந்து, டிசம்பர் 8 ஆம் திகதி இஷ்ரத் கன்கா அவர்களுடன் தொடர்பை பேணும் நிகழ்வு நடைபெறும். இதன் போது, வளர்ந்து வரும் இலங்கையின் கலைஞர்கள் மற்றும் கலை மாணவர்கள் தொடர்பான பெறுமதி வாய்ந்த தகவல்களை கன்கா வழங்கவுள்ளதுடன், சர்வதேச கொள்வனவாளர்களின் தெரிவுகளை புரிந்து கொள்வது மற்றும் அவர்களின் தொழில் நிலைகளை மேம்படுத்திக் கொள்வது பற்றிய விளக்கங்களையும் வழங்குவார். பொது மக்கள் இலவசமாக இந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியும் என்ற போதிலும் முற்பதிவு அவசியமாகும்.
அன்றைய தினம் மாலைப் பொழுதில் நடைபெறும் பிரத்தியேக இராப்போசண நிகழ்வில், கலையை முதலீடு/சொத்து பிரிவாக கலை வளர்ச்சியடைந்துள்ளமை மற்றும் ஆக்கம் சார் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் தொடர்பில் கன்கா விளக்கமளிப்பார். பிரதான ஏலம் டிசம்பர் 9 ஆம் திகதி நடைபெறும், இதில் George Keyt மையத்தின் நோக்கத்துக்கு ஆதரவளிக்கும் கலை அம்சங்களின் சேகரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் பங்கேற்பர்.
கொடை ஏலத்தில் இலங்கையின் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட ஆக்கங்களிலிருந்து கவனமாக தெரிவு செய்யப்பட்ட சுமார் 40 அம்சங்கள் அடங்கியிருக்கும். அதனூடாக, கலை ஆர்வலர்களுக்கு சிறந்த தயாரிப்புகளை கையகப்படுத்த வாய்ப்பு கிடைப்பதுடன், George Keyt மையத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கவும் வாய்ப்பாக அமைந்திருக்கும்.
ஏலத்தின் பிரதான இலக்குகளாக, George Keyt மையத்தினால் பொறுப்பேற்கப்படும் பிரதான திட்டங்களுக்கு நிதி திரட்டிக் கொள்ளவதாக அமைந்துள்ளதுடன், கோதமி விஹாரையின் அடுக்கு துளைகளை மீள நிறுவுவது, George Keyt இன் பணிகள் தொடர்பான கையேட்டை தயாரித்தல், அவர்களின் வாழ்க்கை மற்றும் கலை தொடர்பில் ஆவண திரைப்படமொன்றை தயாரித்தல் மற்றும் கலா பொல மற்றும் ஆண்டின் சிறந்த கலைஞர் போன்ற மையத்தினால் முன்னெடுக்கப்படும் பிரதான செயற்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்தல் போன்றன அடங்கியுள்ளன.
இந்தப் பங்காண்மையின் முக்கியத்துவம் தொடர்பில் George Keyt மையத்தின் தலைமை அதிகாரி மாலக தல்வத்த கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் கலைத் துறைக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகும். Sotheby உடன் கைகோர்த்துள்ளதனூடாக, உள்நாட்டு கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த சர்வதேச களம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் கலை அம்சங்களின் கொண்டாட்டமாக மாத்திரம் இந்நிகழ்வு அமைந்திருக்காமல், எமது கலாசார பாரம்பரியத்தை பேணுவதற்கான அர்த்தமுள்ள பங்களிப்பாகவும் அமைந்துள்ளது. இலங்கையில் கலைப் பகுதியை ஜனநாயகப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பையும், George Keyt இன் பெருமையை கௌரவிப்பதிலும் George Keyt மையம் தன்னை அர்ப்பணித்துள்ளது.” என்றார்.
பிரதான அனுசரணையாளராக Cinnamon Life இணைந்துள்ளதுடன், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி இணை-அனுசரணையாளராக இணைந்துள்ளது. இந்த கொடை ஏலத்துக்கு Colombo Jewellery Stores, MA Lanka Rockland மற்றும் Calcey ஆகியனவும் ஆதரவளிக்கின்றன.
மேலதிக தகவல்கள் மற்றும் முன்-பதிவு விபரங்களுக்கு தொடர்புகளுக்கு: info@georgekeytfoundation.com