தெற்காசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனமான MAS Holdingsன் இலாப நோக்கற்ற பிரிவான MAS Foundation for Change, அண்மையில் ஆரம்பித்த சதுப்புநில மறுசீரமைப்புக்கான நிதி பங்குதாரராக B Corporation™ சான்றளிக்கப்பட்ட நேரடி-நுகர்வோருக்கு நெருக்கமான ஆடை வர்த்தக நாமமான Adore Me உடன் கைகோர்க்கப் போவதாக அறிவித்துள்ளது.
MAS Foundation for Change இன் தலைமையகத்தைக் கொண்டுள்ள இலங்கை, 22 வகையான சதுப்பு நிலங்களைக் கொண்டுள்ளது. ஆனால் சில அறிக்கைகளின்படி, விவசாயம், சுற்றுலா, குடியிருப்பு விரிவாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக நாட்டின் 50% சதுப்புநிலங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகத் அறியப்படுகிறது.
MAS Foundation for Change என்பது பல்லுயிர் இழப்பு, கடல் மாசுபாடு மற்றும் சுத்தமான நீர் பற்றாக்குறை போன்ற சமூக மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை சமாளிக்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சுயாதீனமான இலாப நோக்கற்ற அமைப்பாகும். தூய்மையான கடல் சூழலை உருவாக்குதல், பூவியைப் பாதுகாத்தல் மற்றும் சுத்தமான நீரைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளை வழங்குதல் உள்ளிட்ட மூன்று பகுதிகளில் இந்த அறக்கட்டளை கவனம் செலுத்துகிறது. சதுப்புநில மறுசீரமைப்பு நமது கிரகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியின் மற்றொரு படியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், தாவர வேர்களுக்கு இடையே வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பது உட்பட கடலோரப் பகுதிகளில் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
MAS Foundation for Change இன் பணிப்பாளர் திருமதி ஷரிகா சேனாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “MAS Foundation for Change இந்த சதுப்புநில மறுசீரமைப்பு திட்டத்தில் Adpre Me உடன் பங்காளியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளில் சதுப்பு நிலங்கள் ஒரு முக்கிய அங்கமாகும். அவை கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன, இயற்கை பேரழிவுகளிலிருந்து பாதுகாக்கின்றன, நிலப்பரப்பு காடுகளை விட 3-4 மடங்கு அதிக கார்பனை சேமித்து கடலோர சமூகங்களுக்கு உயிர் வழங்குகின்றன. இந்த கூட்டாண்மை மூலம், இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் 2.5 ஹெக்டேயர் சதுப்புநிலங்களை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. MAS Foundation for Change எங்கள் புவிக்கு சுவாசத்தை வழங்க அயராது உழைக்கிறது, மேலும் Adore Me வழங்கிய ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என தெரிவித்தார்.
“சதுப்புநிலங்கள் கடலில் பரவி இயற்கை சீற்றங்களிலிருந்து நம்மைக் காக்கும் பாதுகாவலனாகச் செயல்படும் தாவரமாகும். ஆனால் இலங்கையின் சதுப்புநிலங்கள் மாசுபாடு, சுற்றுலா மற்றும் விவசாயம் ஆகியவற்றால் அழிக்கப்பட்டுள்ளன. எனவே MAS Foundation for Change உடன் கைகோர்த்து, இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 2,500 க்கும் மேற்பட்ட சதுப்புநில மரங்களை மீண்டும் நடுவதற்கு Adore Me அனுசரணை வழங்கி வருகிறது.” என Adore Meஇல் வர்த்தக நாமம் மற்றும் நுகர்வோர் நுண்ணறிவுகளின் VP, Alix Coucardon கூறினார்.
2019 ஆம் ஆண்டில், Adore Me Cars திட்டம் முறையாகத் ஆரம்பிக்கப்பட்டு, அதன் முதல் ESG அறிக்கையை ஜூலை 2022 இல் வெளியிட்டதுடன், மேலும் B Corp சான்றிதழை செப்டம்பர் 2022 இல் அடைந்து, அதன் செயல்பாடுகளின் ஒவ்வொரு பகுதியிலும் நீடித்து நிலைத்திருக்கும்.
சதுப்புநில மறுசீரமைப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை செயல்படும். முதற்கட்டமாக அந்த இடத்தில் தற்காலிக சதுப்புநில நாற்றங்காலை அமைப்பது, ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலத்தை அளந்து, நிலத்தை தயார் செய்து, செடிகளைக் கையால் தளத்திற்குக் கொண்டு சென்று, மரக்கன்றுகளை நடுவது. பராமரிப்பு கட்டத்தில் வருடாந்தர மீள் நடுகை மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு நாற்றுகளை பராமரித்தல் ஆகியவை அடங்கும். தாவரங்களின் உயிர்வாழ்வு விகிதத்தை அளவிடுவதற்கு இரு வருட திட்ட மதிப்பீடும் நடத்தப்படவுள்ளது.
MAS Foundation for Change இந்த திட்டத்தை முடிக்க வனவியல் துறையுடன் கூட்டு சேர்ந்துள்ளது மேலும் பாதிப்பை அளவிடுவதற்கான ஆராய்ச்சி திட்டங்களுக்கு வசதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்பைப் பெறவுள்ளது. இந்தத் திட்டங்களில் வருடாந்திர பல்லுயிர் ஆய்வு மற்றும் கார்பன் வரிசைப்படுத்தல் ஆகியவை அடங்கும்.
திட்டத்தில் Adore Meஇன் பங்களிப்பு, நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புக்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மேலும் பிரதிபலிக்கிறது. MAS Foundation for Change உடன் கூட்டுசேர்வதன் மூலம், இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுப்பதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை Adore Me ஏற்படுத்துகிறது.
இலங்கையில் சதுப்புநில மறுசீரமைப்பு திட்டம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, MAS Foundation for Change ஐ தொடர்பு கொள்ளவும்.
MAS Holdings தொடர்பாக
தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப நிறுவனமான MAS Holdings, ஆடைகள் மற்றும் ஜவுளிகளின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்பு-விநியோகஸ்தர் ஆகும். 118,000 க்கும் மேற்பட்டோர் இங்கு வேலை செய்கின்றனர். தற்போது MAS 17 நாடுகளில் பரந்து விரிந்துள்ளது, உலகெங்கிலும் உள்ள முன்னணி நவநாகரீக மையங்களில் நிறுவப்பட்ட வடிவமைப்பு இடங்கள் உள்ளன. MAS போர்ட்ஃபோலியோ அதிவேகமாக விரிவடைந்துள்ளது; உலகளவில் அணியக்கூடிய தொழில்நுட்பம், ஃபெம்டெக், ஸ்டார்ட்-அப்கள், ஏற்றி இறக்கல்கள் மற்றும் ஆடை பேட்டைகள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, MAS அதன் நெறிமுறை மற்றும் நிலையான பணிச்சூழலுக்காகவும், அதன் கைவினைத்திறன் மற்றும் தயாரிப்பு சிறப்பிற்காகவும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. மாற்றத்திற்கான MAS திட்டம், பொருட்கள், உயிரினங்கள் மற்றும் பிரபஞ்சம் ஆகிய மூன்று தூண்களின் கீழ் நிலையான மாற்றத்தை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை கோடிட்டுக் காட்டுகிறது. இதன் மூலம், MAS அதன் அனைத்து ஊழியர்களையும் மாற்றங்களை உருவாக்குபவர்களாக இருக்க ஊக்குவிக்கிறது, கனவுகளை செயல்படுத்துகிறது மற்றும் நமது கிரகத்தில் வாழ்க்கையின் கட்டமைப்பை வளப்படுத்துகிறது.