சிறுவர்களுக்காக ஒன்றிணைந்து செயலாற்றுவது: ரொஷான் மஹாநாம மற்றும் உமாரியா சின்ஹவன்ஸ ஆகியோர் உலக சிறுவர் தினத்தில் SOS சிறுவர் கிராமங்களின் தூதுவர்களாக கைகோர்ப்பு

Share with your friend

இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் தூதுவர் – ரொஷான் மஹாநாம, இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் தேசிய பணிப்பாளர் திவாகர் ரட்னதுரை மற்றும் இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் தூதுவர் உமாரியா சின்ஹவன்ஸ ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திடுகின்றனர்.

இலங்கை SOS சிறுவர் கிராமங்கள், உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு “Together for Children – Ambassador Signing & Partnership Summit” எனும் நிகழ்வை கொழும்பு Radisson ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில், தொடர்ச்சியாக பத்து வருடங்களாக SOS சிறுவர் கிராமங்களுடன் கைகோர்த்து செயலாற்றும் முன்னாள் சர்வதேச கிரிக்கட் நட்சத்திரமும், நன்மதிப்பைப் பெற்ற ICC போட்டி மத்தியஸ்தருமான ரொஷான் மஹாநாம மற்றும் புதிதாக கைகோர்த்துள்ள விருது வென்ற பாடகியான உமாரியா சின்ஹவன்ஸ ஆகியோர் SOS சிறுவர் கிராமங்களின் உத்தியோகபூர்வ தூதுவர்களாக வரவேற்கப்பட்டனர்.

ஒன்றுகூடியுள்ளவர்கள் மத்தியில் இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் தூதுவர் உமாரியா சின்ஹவன்ஸ உரையாற்றுகிறார்.

தொண்டாற்றும் அடிப்படையில் ரொஷான் மற்றும் உமாரியா ஆகியோர் செயலாற்றவுள்ளதுடன், பொது சேவை மற்றும் இளைஞர் வலுவூட்டல் தொடர்பில் பெருமளவு அனுபவத்தைக் கொண்டுள்ளனர். சிறுவர் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் இளைஞர் வலுவூட்டல் தொடர்பில் விழிப்புணர்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக அவர்களின் நிலை அமைந்திருக்கும் என்பதுடன், பெற்றோரின் பராமரிப்பை இழந்த சிறுவர்களுக்காக முன்னெடுக்கப்படும் நிதி திரட்டும் செயற்பாடுகளுக்கு ஆதரவை வழங்குவர்.

இலங்கை SOS சிறுவர் கிராமங்களின் தேசிய பணிப்பாளர் திவாகர் ரட்னதுரை கருத்துத் தெரிவிக்கையில், “ஒவ்வொரு பிள்ளையும் அன்பு, பாதுகாப்பு மற்றும் மதிப்புடன் வளர்வதை உறுதி செய்யும் எமது நோக்கை இந்த மைல்கல் உறுதி செய்வதாக அமைந்துள்ளது. ரொஷான் மஹாநாம மற்றும் உமாரியா சிங்ஹவன்ஸ ஆகியோரை எமது தூதுவர்களாக இணைத்துக் கொண்டுள்ளமையினூடாக, அதிகளவு சமூகங்களை சென்றடைந்து, தேவையுடைய சிறுவர்களுக்கு அவசியமான ஆதரவை திரட்டிக் கொள்வதற்கு எமக்கு மேலும் வலிமை சேர்க்கப்பட்டுள்ளது. எமது பங்காளர்களுடன் இணைந்து, இலங்கையைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் திரண்ட பொறுப்பைக் கொண்ட நகர்வொன்றை கட்டியெழுப்புகிறோம்.” என்றார்.


ஒன்றுகூடியுள்ளவர்கள் மத்தியில் இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் தூதுவர் ரொஷான் மஹாநாம உரையாற்றுகிறார்.

கொண்டாட்டத்தில் மேலும் அம்சங்களை சேர்க்கும் வகையில், சிறுவர்களுக்காக விசேடமாக அர்ப்பணிக்கப்பட்ட புதிய பாடல் ஒன்றை SOS சிறுவர் கிராமங்கள் அறிமுகம் செய்திருந்தது. இந்தப் பாடலை சகோதரிகளாக உமாரியா சிங்ஹவன்ஸ மற்றும் உமாரா சிங்ஹவன்ஸ ஆகியோர் பாடியிருந்தனர். இது SOS சிறுவர் கிராமங்களின் தயாரிப்பாகும். இந்த பாடல் வீடியோ நிகழ்வின் போது காட்சிப்படுத்தப்பட்டதுடன், பார்வையாளர்களுக்கு அன்பு, ஒற்றுமை மற்றும் ஒவ்வொரு பிள்ளைக்குமான எதிர்பார்ப்பு ஆகியவற்றை அனுபவிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் அமைந்திருந்தது.

இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் தூதுவர் தேசிய பணிப்பாளர் திவாகர் ரட்னதுரை வாழ்த்துச் செய்தி வழங்குகிறார்.

கொழும்பு Radisson ஹோட்டலின் ஆதரவுடன் இந்த நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது. சிறுவர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்துவதில் கூட்டாண்மை பங்காண்மைகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அவர்களின் பங்களிப்பு அமைந்திருந்ததுடன், தூதுவர்கள், கூட்டாண்மை பங்காளர்கள், பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதிகள் ஆகியோரை ஒன்றிணைத்து நிகழ்வை முன்னெடுக்க முடிந்தது. பங்காளர்களிடமிருந்தான உறுதியான ஆதரவு மற்றும் தூதுவர்களின் அர்ப்பணிப்பு போன்றவற்றுடன், இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் அதன் நோக்கான ஒவ்வொரு பிள்ளையும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தது. ஒவ்வொரு குடும்பமும் அன்பு, பாதுகாப்பு மற்றும் நன்மதிப்புடன் வளர்ச்சியடையும் என்பதை தொடர்ந்தும் உறுதி செய்ய முடிந்துள்ளது.

இலங்கை SOS சிறுவர் கிராமங்கள், பெற்றோரின் பராமரிப்பை இழந்த மற்றும் பெற்றோரின் அரவணைப்பை இழக்கும் இடரிலுள்ள சிறுவர்களுக்கு குடும்பசார் அரவணைப்பை வழங்குகிறது. நாடு முழுவதிலும் 6 பகுதிகளில் 72 குடும்ப இல்லங்களினூடாக இந்த பணிகளை மேற்கொள்கிறது. மேலதிக தகவல்களுக்கு பார்வையிடவும் www.soschildrensvillages.lk


Share with your friend