இலங்கையின் முன்னணி பல்துறை வணிகக் குழுமமான சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சி., தனது பிரபலமான உணவு மற்றும் பான ஸ்கேன் (SCAN) வர்த்தகநாமத்தின் கீழ், புதிய கசாவா சிப்ஸ் (Cassava Chips) வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது.

பல்வேறு வணிகப் பாதைகளிலும் சந்தைப் பிரிவுகளில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி செயற்பட்டு வரும் சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சிஇ நிறுவனம், ஸ்கேன் உற்பத்திப் பிரிவுகளின் கீழ் உற்பத்தி செய்யப்படும் அதன் முன்னணி வர்த்தகநாமங்களான சன்குயிக், ஸ்கேன் ஜம்போ பீனட் போன்றவற்றின் மூலம் சந்தையில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. 2018 இல், ஸ்நேக்ஸ் (Snacks) பிரிவை மேம்படுத்தும் நோக்கில் ஹொரணையில் அதன் உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய தொழிற்சாலையை நிறுவி, உள்ளூர் வயல்களில் விளைந்த நிலக்கடலையை (Peanuts) உரிய முறையில் பதப்படுத்தி, நிலைபேறான விவசாய மற்றும் உணவு கட்டமைப்பை உருவாக்க நிறுவனம் முன்வந்தது.
இன்று, ஸ்கேன் ஜம்போ பீனட் ஆனது இந்த சந்தைப் பிரிவில் 70% இற்கு மேற்பட்ட பங்குகளுடன் முன்னணியில் உள்ள வர்த்தகநாமம் ஆகும். அதிக பருமன் கொண்ட நிலக் கடலைகளை கவனமாக தெரிவு செய்து, நவீன தூய்மையான சூழலில் பதப்படுத்தப்படுத்தி ஸ்கேன் வர்த்தகநாமத்தின் கீழ் பொதியிடப்பட்டு சந்தைக்கு வழங்கப்படுகின்றன.
உள்ளூர் உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கும் நுகர்வோரின் செயற்பாடுகளின் வெற்றியைத் தொடர்ந்து, இத்தயாரிப்புக்கான கேள்வி தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை காணக் கூடியதாக உள்ளது. சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சி. நிறுவனம் தற்போது தனது ஸ்னேக்ஸ் வரிசை கசாவா சிப்ஸ் வகைகளை, ஹொட் என்ட் ஸ்பைசி, உப்பு சேர்க்கப்பட்ட (Salted), சீஸ் என்ட் அனியன் மற்றும் புதிதாக அறிமுகமான கொச்சி சுவை ஆகிய நான்கு சுவைகளில், கட்டுப்படியான விலையில் சந்தைக்கு விரிவுபடுத்தியுள்ளது. இந்த கசாவா சிப்ஸ், நாட்டின் அனைத்து முக்கிய சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் வணிக நிலையங்களில் கிடைக்கின்றன. இவை 50g, 30g போன்ற பொதிகளில் வடிவமைக்கப்பட்டு, பொதுவான நுகர்வோர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்கேன் ஆய்வுகூடங்கள் உலகத் தரம்வாய்ந்த உபகரணங்களுடன், அனுபவமிக்க நிபுணர்களால் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. உள்ளூர் மற்றும் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப உற்பத்திகள் சோதிக்கப்படுவதால், ஸ்கேன் வர்த்தகநாமம் மீதான நுகர்வோர்களின் நம்பிக்கையையும் அதன் பிரபலத்தையும் மேலும் உறுதியாக்குகின்றன. தரம், உரிய கவனம் செலுத்தப்பட்ட பதப்படுத்தல் செயன்முறை மற்றும் இறுக்கமான சுகாதாரத் தரங்களை கடைபிடிப்பதில் கவனம் செலுத்தும் நிறுவனத்தின் செயற்பாடுகளே இதன் வெற்றிக்குக் காரணமாகும். தனது தயாரிப்புகளை தொடர்ச்சியாக மேம்படுத்தவும் மற்றும் விரிவுபடுத்தவுமான நோக்குடன், அதே வேளையில் உள்ளூர் நுகர்வோரின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்யவும் உயர்தரமான தயாரிப்புகளை வழங்குவதில் நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.
இந்த புதிய அறிமுகம் தொடர்பான ஆரம்ப வைபவத்தில், சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சி. குழுமத்தின் பணிப்பாளரும் அதன் குழும பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான மங்கள பெரேரா கருத்து வெளியிடுகையில், “எமது Snacks வரிசை, குறிப்பாக ஜம்போ பீனட் மற்றும் கசாவா சிப்ஸ், உள்ளூர் விவசாயத்தை ஊக்குவிப்பதோடு, விவசாயிகளுக்கு ஆதரவாகவும் செயற்படுகிறது என்பதில் நாம் மிகவும் பெருமைப்படுகிறோம். இது நிலைபேறான விவசாயத்தை ஊக்குவிப்பதோடு, உற்பத்தியின் சுற்றுச்சூழல் நடைமுறைகளை மதிப்பிடுவதற்காக எமது விநியோகச் சங்கிலியை அதன் தோற்றப் புள்ளி வரை கண்காணிக்க உதவுகிறது.” என்றார்.
சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சி. குழுமத்தின் தலைவரும் அதன் பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான ஹேமக அமரசூரிய இங்கு தெரிவிக்கையில், “இந்த வெற்றியை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். எமது விசுவாசம் மிகுந்த வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவு மற்றும் நம்பிக்கை காரணமாக, எமது தயாரிப்புகள் மீதான நிலையான நம்பிக்கையை உருவாக்கி, சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சி. நிறுவனத்தை இன்று இத்தகைய உயரத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.” என்றார்.
125 வருட பாரம்பரியம் கொண்ட சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சி. நிறுவனம், கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதன்மையான நிறுவனமாகும். இது உணவு மற்றும் பானங்கள் ஆகியவை தொடர்பான பரந்துபட்ட தயாரிப்பு வகைகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்தல் ஆகிய நடவடிக்கைகளில் விசேடத்துவம் கொண்டதாகும். பங்குதாரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். பல்துறை வணிகக் குழுமமான சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சி. நிறுவனத்தின் மிக வேகமாக வளர்ந்து வரும் கிளையே அதன் ஸ்கேன் தயாரிப்புப் பிரிவாகும். இது FMCG (வேகமாக நுகரப்படும் பாவனைப் பொருட்கள்) துறையில் செயற்பட்டு வருவதுடன், ஹைபிரிட் வகையான செங்குத்து வணிக மற்றும் விநியோக பாதைகள் ஊடாக பாரம்பரிய வணிகம், நவீன வணிகம், HORECA (ஹோட்டல், உணவகங்கள், கேட்டரிங்) உணவுச்சேவை பிரிவுகள் மற்றும் நிறுவன விநியோகம் போன்ற நடவடிக்கைகள் மூலம் பல்வேறு சந்தைகளில் நிலை கொண்டுள்ளது. இதன் பிரபலமான தயாரிப்பு வகைகளில், சன்குயிக், ஜம்போ பீனட், கொட்டகல கஹட்ட, KVC பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் மரக்கறிகள், ஸ்கேன் குடிநீர் போத்தல், N-Joy தேங்காய் எண்ணெய், Star Brand எசன்ஸ் மற்றும் கலரிங் உள்ளிட்டவை அடங்குகின்றன. இத்தயாரிப்புகள் யாவும் இலங்கையர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதோடு, அந்தந்த பிரிவுகளில் சந்தையில் முன்னணியில் திகழ்கின்றன. புத்தாக்கம் மிக்க தயாரிப்புகளை கண்டுபிடித்து உருவாக்குவதன் மூலம் தமது தயாரிப்புகளை விரிவாக்குவதற்காக நிறுவனத்தின் முகாமைத்துவம் முழுமையாக தன்னை அர்ப்பணித்து செயற்பட்டு வருகின்றது.