கொழும்பு நகரின் மையத்தில் நவீன வசதிகளைக் கொண்ட, நாட்டிலுள்ள முன்னணி உயர் கல்வி நிலையங்களில் ஒன்றான Saegis கம்பஸ், டிஜிட்டல் புத்தாக்க பொறியியல் முன்னோடியான Virtusa பிரைவட் லிமிடெட் உடன் அண்மையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டிருந்தது. அதனூடாக, பட்டதாரிகளுக்கு எதிர்காலத்தில் பரந்தளவு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்பது பெருமளவு வளர்ச்சியைப் பதிவு செய்த வண்ணமுள்ளதுடன், இந்த ஆண்டின் இறுதியின் துறையின் வருமானம் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை எய்தும் என JLL ஸ்ரீ லங்கா மற்றும் ICTA ஆகியன எதிர்வுகூரியுள்ளன. 2024 ஆம் ஆண்டளவில் இந்தப் பெறுமதி 3 பில்லியன் அமெரிக்க டெலர்களாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளன. 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தத் துறை 7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்ததுடன், 150,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டிருந்ததாக இலங்கை IT-BPM தொழிற்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
அதிகரித்துச் செல்லும் இன்றைய தொழில்நுட்ப உலகில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு பட்டதாரிகளுக்கு உதவும் வகையில் Saegis கம்பஸ் அமைந்திருப்பதுடன், திறன்களில் காணப்படும் இடைவெளியை நிவர்த்தி செய்து கொள்ள உதவுவதுடன், ஒன்றிணைந்து துறையை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுத்து, உலகளாவிய ரீதியில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அதிகளவில் நாடும் பகுதியாக திகழச் செய்யும் முயற்சிகளை மேற்கொள்கின்றது. Saegis கம்பஸ் உப வேந்தர் பேராசிரியர் நாலக ஜயகொடி, Virtusa சிரேஷ்ட பணிப்பாளர் சம்பத் திரிமாவிதான இடையே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
BSc (Hons) in Computer Science, BSc (Hons) in Software Engineering, BSc (Hons) in Information Technology மற்றும் Bachelor of Information Technology போன்ற கற்கைகளை Saegis கம்பஸ் வழங்குகின்றது. இவற்றை கல்வி அமைச்சு அனுமதியளித்துள்ளதுடன், பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளன.
தமது க.பொ.த உயர் தர பரீட்சையை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கு இந்தக் கற்கைகளை தொடர்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதுடன், உயர் கல்விக்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. Saegis Campus இனால் Pearson BTEC இன் Software Engineering இல் விசேடத்துவத்தைக் கொண்ட Higher National Diploma in Computing கற்கையும் வழங்கப்படுகின்றது.
Saegis கம்பஸைச் சேர்ந்த மாணவர்களுக்கு புகழ்பெற்ற கல்விமான்கள் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட விரிவுரையாளர் குழுவினூடாக ஒப்பற்ற பயிலும் அனுபவம் வழங்கப்படுகின்றது. கம்பஸ் வளாகம் முழுவதும் பரந்த இலவச WiFi, நவீன IT ஆய்வுகூடம், மொழி ஆய்வுகூடம், நூலகம், ஓய்வெடுக்கும் பகுதி, அதிக இடவசதி நிறைந்த வாயு குளிரூட்டப்பட்ட டிஜிட்டல் விரிவுரை அறைகள், அதிகளவு இடவசதி நிறைந்த உணவகப் பகுதி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு செயற்பாடுகள், லியோ கழகம் மற்றும் ரொட்ராக்ட் கழகம் போன்ற வசதிகளினூடாக, சிறந்த பயிலல் சூழல் வழங்கப்படுவதுடன், வளர்ச்சி மற்றும் பிரத்தியேக வளர்ச்சி நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதற்கான வசதிகளையும் வழங்குகின்றது.