பன்முகப்படுத்தப்பட்ட நிதிச் சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப, HNB FINANCE PLC தனது கல்முனை கிளையை இல. 114, பிரதான வீதி, கல்முனை (பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில்) என்ற விலாசத்திற்கு இடம்மாறியுள்ளது. இதனூடாக அம்பாறை மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவைகள் விரிவுபடுத்தப்படுவதுடன் அதிகமான மக்கள் தமது சேவை வலையமைப்பை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அனைத்து சேவைகளுடன் கூடிய விசாலமான இடத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்காக இந்த புதிய கட்டிடத்திற்குள் பிரவேசித்துள்ளதுடன், இதன்மூலம், வாடிக்கையாளர்கள் லீசிங் வசதிகள், சேமிப்பு மற்றும் நிலையான வைப்புகள், வணிகக் கடன்கள் மற்றும் வீட்டுக் கடன்கள் போன்ற பல சேவைகளைப் பெற முடியும், மேலும் இந்தத் துறையில் முன்னணியில் உள்ள தங்கக் கடன் சேவைகள் போன்ற நிதிச் சேவைகளையும் இங்கு பெற்றுக் கொள்ளமுடியும்.
இந்த புதிய கிளை திறப்பு நிகழ்வு HNB FINANCE PLC முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் தலைமையில் நடைபெற்றதுடன், சிரேஷ்ட முகாமைத்துவம் பிரிவு மற்றும் கல்முனை கிளை ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
“HNB FINANCE இல் எங்களின் முக்கிய குறிக்கோள் அனைத்து வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிதிச் சேவைத் துறையில் முன்னணியில் இருப்பதே ஆகும். அங்கு, ஒரு முக்கியமான நடவடிக்கையாக, நாங்கள் எங்கள் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தி, வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை இலகுவாக அணுகுவதற்கான வாய்ப்பை வழங்குவோம், புதிய கிளையின் மூலம், கல்முனை மக்கள் எங்கள் சேவைகளை மிகவும் நம்பிக்கையுடன் அனுபவிக்க முடியும்.” என HNB FINANCE PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் கூறினார்.