களுத்துறை மாவட்டத்தில் பசுமையால் நிறைந்த பாரம்பரியமிக்க தோட்டங்களில், நியூஷட்டல் தோட்டம் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. 1904 ஆம் ஆண்டில், பிரித்தானியாவைச் சேர்ந்த Colin Cowper Mee என்பவர், தாம் கற்ற சுவிட்சர்லாந்துப் பாடசாலையின் நினைவாக இந்தத் தோட்டத்திற்கு “நியூஷட்டல்” என்ற பெயரைச் சூட்டினார். இந்தத் தோட்டத்தின் நிறுவுனராக, அதன் முன்னேற்றத்திற்காக அவர் பெரும் பணியாற்றினார்.



திறமையான தோட்டக்காரராக மட்டுமல்லாமல், Cowper Mee ஒரு சிறந்த குதிரை ஓட்டக்காரராகவும் இருந்தார். இலங்கை குதிரைப்பந்தய சங்கத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்த முன்னணி உறுப்பினராகவும், இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் முக்கிய உறுப்பினராகவும் இருந்த அவரது தூரநோக்குப் பார்வை, பல தசாப்தங்களாக முன்னேறி வருகிறது. 1909இல் அவர் காலமான பிறகு, இந்த தோட்டத்தின் நிர்வாகம் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அது காலனித்துவ நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டது. 1942இல், இதன் உரிமை Aitkenspence நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 1975இல் அப்போதைய அரசாங்கம் கொண்டு வந்த தோட்டங்களை தேசியமயமாக்கல் மூலம் இந்த எஸ்டேட் அரசிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் 1992இல் தனியார்மயமாக்கல் செயல்பாட்டின் போது, ஹொரண பெருந்தோட்ட நிறுவனம் இதை கையகப்படுத்தியது. இன்று 121 ஆண்டுகள் நிறைவடைந்த இந்த எஸ்டேட், அதன் பழமையான வரலாற்று மரபை பாதுகாத்து வருகிறது. Colin Cowper Mee பயன்படுத்திய குதிரை பயிற்சி மைதானம் இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது, அது வருங்கால தலைமுறைகளுக்கும் காணக்கூடியதாக உள்ளது.


இந்த எஸ்டேட்டின் மற்றொரு முக்கியமான திருப்புமுனை, தேயிலை செய்கையிலிருந்து ரப்பர் செய்கைக்கு மாறிய நிகழ்வாகும். 1928 ஆம் ஆண்டுக்குள், களுத்துறை மாவட்டத்தில் ரப்பர் செய்கை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்தது. இந்த மாற்றத்திற்கு இணங்க, நியூஷட்டல் தோட்டமும் 2,200 ஹெக்டேயர் பரப்பளவில் ரப்பர் செய்கையைத் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டுக்குள், தோட்டம் முழுவதுமாக தேயிலையிலிருந்து ரப்பருக்கு மாற்றப்பட்டு, ரப்பர் உற்பத்திக்காக முழு தோட்டமும் ஒதுக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டில், மற்றொரு புதிய திருப்புமுனையைக் குறிக்கும் வகையில், நியூஷட்டல் எஸ்டேட் ஃபாம் ஒயில் செய்கைக்கு திசைதிருப்பப்பட்டது. தற்போது, 124 ஹெக்டேயர் பரப்பளவில் ஃபாம் ஒயில் செய்கை நடைபெறுகிறது, இது இந்த எஸ்டேட்டின் இரண்டாவது பெரிய பயிராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது, நியூஷட்டல் எஸ்டேட் இலங்கையின் பல்வகைப்படுத்தப்பட்ட பயிர்ச்செய்கையைக் கொண்ட முன்னணி தோட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது. 902 ஹெக்டேயர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த எஸ்டேட்டில் ரப்பர், ஃபாம் ஒயில், தென்னை, கிராம்பு மற்றும் வெப்பமண்டல பழங்களான ரம்புட்டான் போன்றவை பயிரிடப்படுகின்றன. 2018 ஆம் ஆண்டில், நியூஷட்டல் எஸ்டேட்டின் பயிர் பல்வகைப்படுத்தல் கொள்கையின் (Crop Diversification Policy) கீழ் கிராம்பு மற்றும் தென்னை செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பல்வகைப்படுத்தல் ஹோம் டிவிசன், ஹொரண டிவிசன், திக்ஹேன டிவிசன், கொக்கேன மற்றும் டெம்போ டிவிசன் போன்ற விவசாய மண்டலங்களில் பரவியுள்ளது. இதன் விளைவாக, தோட்டத்தில் 93 ஏக்கர் தென்னை செய்கை மற்றும் 30 ஏக்கர் கிராம்பு செய்கை காணப்படுகிறது. இந்த புதிய உத்தியின் மூலம், நியூஷட்டல் எஸ்டேட் பல புதிய வருமான வாய்ப்புகளை ஈட்டியுள்ளது.
தோட்ட நிர்வாகத்தில் புத்தாக்கமும் நிலைத்தன்மையும்
நியூஷட்டல் எஸ்டேட் தனது பாரம்பரியத்தைப் பேணிக்கொண்டே, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புத்தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் துல்லியம் மற்றும் செயல்திறன் அடிப்படையில் நிலைத்தன்மை வாய்ந்த எஸ்டேட் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. மேலும் தொழில்நுட்ப முன்னேற்றங்களான நீண்டகாலம் பயன்படுத்தக்கூடிய ரப்பரின் எடை அளவீட்டில், பாரம்பரிய முறைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் அளவீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ரப்பர் பதப்படுத்தலில், முன்பு பயன்படுத்தப்பட்ட இயற்கை உலர்த்தும் முறைகளுடன், இயந்திர ரப்பர் உலர்த்தும் முறைகளும் (mechanical rubber drying) சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தொழில்நுட்ப மேம்பாடுகள், உற்பத்தியின் தரத்தை உயர்த்துவதில் வெற்றிகரமாக உள்ளமை விசேட அம்சமாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இயற்கை ரப்பர் நிலைத்தன்மை சான்றிதழைப் பெற்ற முதல் தோட்டம் நியூஷட்டல் எஸ்டேட்டாகும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இயற்கை ரப்பர் நிலைத்தன்மை விதிமுறைகளுக்கான சான்றிதழை பெற்ற முதல் தோட்டமாக திகழ்கிறது. இது சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பேணுவதில் தோட்டத்தின் உச்ச முயற்சிகளை வெளிப்படுத்துகிறது. சுற்றுச்சூழல் சமநிலையை பேணும் நடவடிக்கைகளான, குளவி காப்பு நிர்வகிப்பு, மழைநீர் நிர்வகிப்பு, மண் அரிப்புத் தடுப்பு முறைகள், ஆகியனவாகும். இந்த முயற்சிகள், தோட்டத்தின் சுற்றுச்சூழல் சமநிலையை பேணவும், பசுமை உற்பத்தி முறைகளை ஊக்குவிக்கவும் உதவுகின்றன.
சமூக நலன் மற்றும் தொழிலாளர் வளர்ச்சி
நியூஷட்டல் எஸ்டேட், ஒரு பாரம்பரிய தேயிலைத் தோட்டமாக இருப்பதோடு, சமூக பங்களிப்பு மற்றும் பங்கேற்பு நிர்வகிப்பு முறையை கொண்டுள்ளது. இங்கு 2,140 தொழிலாளர்களில் பெரும்பாலோர் பெண்களாக உள்ளனர். தொழிலாளர் நலனை மேம்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகள் செயல்பாட்டில் உள்ளன. தொழிலாளர் நலன் மேம்பாட்டு நடவடிக்கைகளான, வருமானப் பகிர்வு முறை, மதிய உணவு வழங்குதல், செயல்திறன் ஊக்குவிப்பு கொடுப்பனவு திட்டம் ஆகியன அடங்கும்.
நியூஷட்டல் எஸ்டேட்டில் அமைந்துள்ள நியூஷட்டல் கிராமப்புற மருத்துவமனை, தொடர்ச்சியாக நோய்த்தடுப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பயிற்சித் திட்டங்களை நடத்தி வருகிறது. இதன் மூலம், தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது. தோட்டத்தில் உள்ள குழந்தை வளர்ச்சி மையம், இப்பகுதியில் உள்ள மிக உயர்ந்த தரம் வாய்ந்த ஆரம்பப் பள்ளி கல்வி மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மையம், வளரும் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. எதிர்கால தலைமுறைகளின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
நிலைத்தன்மை வாய்ந்த விவசாயத்திற்கான எதிர்காலத் திட்டம்
நாம் வாழும் இந்தக் காலகட்டம், நிலைத்தன்மை வாய்ந்த வாழ்வாதாரம் மிகுந்த முக்கியத்துவம் பெறும் ஒரு காலம். நியூஷட்டல் எஸ்டேட், விவசாயத் துறையின் புத்தாக்கங்களை ஏற்று, அதற்கேற்ப, மண்ணின் வளத்தை பேணுதல், நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல், ஆகியவற்றில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நடைமுறைப்படுத்தப்படும் நிலைத்தன்மை நடவடிக்கைகளாக மழைநீரை விவசாய நடவடிக்கைகளுக்கான முதன்மை நீர்மூலமாகப் பயன்படுத்துதல், மண் அரிப்புத் தடுப்பு நுட்பங்களை கடைப்பிடித்தல், ஃபாம் ஒயில் செய்கையில் மண்ணின் அரிப்பைத் தடுக்கும் சிறப்பு முயற்சிகள் ஆகியவற்றை மேற்கொள்ளுதல் போன்றமை ஆகும்.
சமீபத்திய ஆண்டுகளில், தோட்டம் புத்தாக்கங்களில் கவனம் செலுத்தி வருகிறது, மேலும் தோட்டம் முழுவதும் தேனீ வளர்ப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி பயிர் விளைச்சலை அதிகரித்து மகரந்தச் சேர்க்கையை அதிகரித்துள்ளது, இதனால் ஊழியர்கள் மற்றும் சமூகத்திற்கு மேலதிக வருமானம் கிடைக்கிறது. நியூஷட்டல் எஸ்டேட் கடந்த கால மதிப்புகளைப் பாதுகாத்து எதிர்காலத்திற்காக அவற்றை மேம்படுத்துவதன் மூலம், புத்தாக்கம் மற்றும் சிறப்பைப் பேணுவதன் மூலம் அதன் பணியை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.