புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் HNB ஊடாக அனுப்பும் பணத்தால் அவர்களது குடும்பங்களுக்கு பணப் பரிசில்கள்

Share with your friend

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) வழிநடத்தலின் கீழ் வெளிநாடுகளில் உள்நோக்கிய பணப் பரிமாற்றங்களை ஊக்குவிப்பதை ஆதரிக்கும் வகையில் இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, தொழில் நிமித்தமாக புலம்பெயர்ந்து சென்றுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பல மதிப்பு மிக்க நன்மைகளை வழங்குவதற்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மன்னார் கிளை முகாமையாளர் திரு. கந்தையா வடிவழகன் திருமதி எஸ். மரியைக்கு பணப்பரிசிலை வழங்கும் போது, வடமாகாண பிராந்திய வர்த்தக பிரதானி திரு. நிஷாந்தன் கருணைராஜா, மன்னார் கிளை செயற்பாட்டு முகாமையாளர் திரு. சந்திரகுமார் மயூரன் ஆகியோர் அருகில் இருப்பதை படத்தில் காணலாம்.

தொழில் நிமித்தமாக புலம்பெயர்ந்து வெளிநாடு சென்றுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நிதி மற்றும் சமூகத் தேவைகள் குறித்த வங்கியின் விரிவான புரிதலின் மூலம், புலம்பெயர்ந்த இலங்கையர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நிலையான வாழ்வாதார மேம்பாடு மற்றும் நல்வாழ்வை ஆதரிக்கும் வகையில் வங்கி பல திட்டங்களை வடிவமைத்துள்ளது.

இந்தவகையல், HNB PLCஇனால் அண்மையில் HNB Adhishtana திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சேமிப்புக் கணக்கின் ஊடாக, உலகெங்கிலும் உள்ள இலங்கையர்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் செலவு குறைந்த முறையில் தமது சொந்த நாட்டிலுள்ள தங்கள் அன்புக்குரியவர்களுக்கு பணத்தை அனுப்புவதற்கான நேரடி வசதிகளை வழங்குகிறது.

புலம்பெயர்ந்துள்ள இலங்கை தொழிலாளர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அனுப்பும் பணம் அவர்களின் இலக்குகளை அடைவதற்கு மட்டுமல்ல நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவசியமாக இருப்பதால் அவர்களின் சேவையை இலங்கை மத்திய வங்கி பெரிதும் அங்கீகரித்து பாராட்டுகிறது. அத்துடன் அவர்கள் வகிக்கும் முக்கியப் பங்கைக் கருத்தில் கொண்டு. பணத்தை அனுப்புவதற்கு வசதியான மற்றும் பாதுகாப்பான ஒழுங்குமுறைகள் இருக்கின்றனவா எனவும் உறுதி செய்யுமாறு மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

HNB Adhishtana சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களை தனியாக அடையாளம் காணும் வகையில் அவர்களுக்கு தனித்துவமான Debit Card உட்பட பல பெறுமதி சேர்ப்பு சலுகைகளையும் HNB தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.

புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள் தமது வருமானத்தை சொந்த ஊருக்கு  அனுப்புவது இலங்கையின் பொருளாதாரத்தின் இன்றியமையாத அங்கம் என்பதை நீண்டகாலமாக புரிந்துகொண்டுள்ள HNB, பணம் அனுப்புபவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் அபிலாஷைகளுக்கு நன்மை பயக்கும் விதமாக ஒரு தயாரிப்பை உருவாக்குவதில் ஈடுபடுமாறு மத்திய வங்கியின் ஆளுநர் HNBயிடம் கேட்டுக் கொண்டதற்கு அமைவாகவே HNB Adhishtana சேமிப்புக் கணக்கு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவசமாக நிதி திட்டமிடலில் உதவிகளை வழங்குவதற்காக வங்கியானது, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் (SLBFE) கூட்டு சேர்ந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் அவர்களின் குழந்தைகளுக்காக கலை, பாடல், நடனம் மற்றும் கட்டுரை எழுதுதல் ஆகிய அம்சங்களைக் கொண்ட “Rata Dinana Singiththo” என்ற போட்டியையும் வங்கி ஆரம்பித்துள்ளது.

புலம்பெயர்ந்துள்ள இருவர் இலங்கையிலுள்ள தங்களது தாய்க்கு கடந்த பத்து வருடங்களாக வெளிநாட்டிலிருந்து HNBக்கு பணம் அனுப்பியதன் ஊடாக வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டு 100,000 ரூபாவை பணப் பரிசாக பெற்றுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

“எனது பெயர் திருமதி எஸ். மரியை. நான் மன்னாரில் வசிக்கிறேன். என்னுடைய இரு பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் கடந்த 10 வருடங்களாக HNB ஊடாக தான் எனக்கு பணம் அனுப்புவார்கள். அதை வைத்து தான் நானும் எனது மற்ற பிள்ளைகளும் எங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றோம். எனக்கு திடீரென்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அது HNBஇல் இருந்துதான் வந்தது. அங்கு ஒரு அதிகாரி எனக்கு பணப்பரிசு கிடைத்திருப்பதாக கூறினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் விபரங்களை கேட்டறிந்துகொண்டேன். நான் நம்பவில்லை. நேரில் வந்து பார்த்தபோது உண்மையில் எனக்கு 100,000 ரூபா பணப் பரிசு கிடைத்திருப்பதை உறுதி செய்து அந்தப் பரிசை பெற்றுக் கொண்டேன். இந்த 100,000 ரூபா பணப் பரிசை வழங்கிய HNBக்கு கோடான கோடி நன்றிகள்.”

வெளிநாட்டிலிருந்து உள்நோக்கி பணம் அனுப்புவதற்கான முறையான வசதிகளை மேலும் ஊக்குவிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியினால் (CBSL) ஆரம்பிக்கப்பட்ட ‘Lanka Remit’ மொபைல் Appல் HNB ஒரு பங்காளியாக அண்மையில், கைச்சாத்திட்டது. இந்த Appஆனது வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முறையான பணம் அனுப்பும் நேரடி வசதிகளை வழங்குகிறது. பாதுகாப்பான, வசதியான மற்றும் குறைந்த செலவில் பணத்தை வீட்டிற்கு அனுப்பும் வசதிகளை இதனூடாக பெற்றுக் கொள்ள முடியும்.

HNB, அவ்வப்போது வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பும் போது அதனைப் பெற்றுக் கொள்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வெகுமதி அளிக்கும் வகையில், பணப் பரிசில்களை வழங்கும் திட்டத்தையும் வங்கி அறிமுகப்படுத்தியது. இதன்படி வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதோடு வெற்றியாளர்களுக்கு வாரந்தோறும் 100,000 ரூபா பணப்பரிசில்களும் வழங்கப்படும். இதன்படி 2022ஆம் ஆண்டில் 52 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share with your friend