மத்தியஸ்தம் என்றால் என்ன?
‘மத்தியஸ்தம்’ என்ற சொல்லின் நேரடிப் பொருள் ஒரு உடன்பாட்டிற்கு வருவது என்பதாகும். பழங்காலத்திலிருந்தே பிணக்குகளுக்குத் தீர்வு காணும் முறை பின்பற்றப்பட்டு வந்ததற்கான ஆதாரங்களை வரலாறு சான்று பகிர்கின்றது. பிணக்குகளை உரையாடல் மூலம் தீர்த்து வைப்பதே மத்தியஸ்தத்தின் முக்கிய நோக்கமாகும். இதில் பங்குபெறும் மதியஸ்தர்கள் பக்கச்சார்பற்றவர்கள், அவர்கள் எந்தத் தரப்பினருக்கும் சார்பானவர்கள் அல்ல. மேலும், எந்தவொரு பிணக்குத் தொடர்பாகவும் அவர்கள் முன்கூட்டியே முடிவுகளைத் தீர்மானிப்பதில்லை. ஏனெனில் அவ்வாறான முடிவுகள் சமூகத்தில் பிரச்சனைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது. மத்தியஸ்த சபைகள் அதிகாரிகள், அதிகார மேலாதிக்கம் இல்லாமல் மனிதாபிமானமாக நடப்பவர்கள்.
மோதலுக்கான மூலக் காரணத்திற்கும் இளைய தலைமுறையினருக்கும் இடையிலான தொடர்பு.
இளைய சந்ததியினருக்கு ‘பிணக்குகள்’ பற்றிய விழிப்புணர்வு என்பது தற்போதைய சமூகத்தில் வாழ்வதற்கும் மிகவும் அவசியமான ஒன்று. சமூகம் பெரும்பாலும் ஒரு பிணக்கினை இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெறும் தர்க்கமாகவே அடையாளம் காட்டுகின்றது. ஆனால் பிணக்கு என்ற சொல் பரந்த கருத்தினைக் கொண்டது.இளம் தலைமுறையினர் பிணக்கின் தன்மையைப் புரிந்துகொள்வதில் ‘வேறுபாடு’என்ற காரணியைக் கருத்தில் கொள்வது அவசியமாகும். பிணக்கு என்பது வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ஒன்று.நாம் வாழும் சூழலில் உள்ள மனிதர்களும் அவர்களின் சமூக நிலைகளும் ஆளுக்காள் வேறுபட்டவை. அந்த வேறுபாடு தனித்தன்மை என்று அழைக்கப்படுகின்றது, பிறப்பிலான இயல்புகளும் வாழும் சூழலும் அவ் வேறுபாட்டை ஏற்படுத்துகின்றது. மரபுரிமையாக தொடர்ந்து வரும் பிறவிப் பண்புகள் தொடர்ந்து காணப்பட்டாலும் கூட, சுற்றுச்சூழல் காரணியைப் பொறுத்து தனிமனிதன் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகின்றான்.
சுற்றுச்சூழல் காரணிகளால் மட்டுமல்லாமல், கல்வி, அனுபவம், மதம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையிலும் தனிமனிதன் ஒருவன் மாற்றமடைகின்றான்.
கல்வியின் முக்கியக் குறிக்கோள் மற்றும் உணர்வு சார்ந்த நிர்வாகம்
தொழில் ஒன்றைப் பெற்று வாழ்வை நிலைநிறுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட இலங்கையின் கல்வித் துறையில், கல்வியின் அத்தியாவசிய அடிப்படைப் பணிகளின் அளவு மிகவும் அரிதாகவே உள்ளன. அதுதான் மன உணர்வுகளை நிர்வகித்தல்.எதிர்காலத்தில் பொறியாளர், மருத்துவர், போன்ற தொழில் முறை நிபுணத்துவம் வாய்ந்த இலக்குகளை மட்டுமே கொண்ட சமூகத்தில், ஒரே கட்டமைப்பில் சிக்கி வாழ வேண்டிய நிலை காரணமாக இளம் தலைமுறையினரின் சமூக ஆளுமை மழுங்கடிக்கப்படுகின்றது. மேலும், பாடசாலைக் காலத்திலேயே துன்பம், வலி, மகிழ்ச்சி, உற்சாகம், கோபம் போன்ற எந்த ஒரு உணர்வு பூர்வமான சூழ்நிலையையும் சரியாக நிர்வகிப்பது எப்படி என்பதைக் கற்பிப்பதன் மூலம், பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து வாழ்நாள் முழுவதும் பிணக்குகளை எதிர்கொண்டு அவற்றை வினைத்திறனாக நிர்வகிப்பதற்கு இது பெரும் உதவியாக அமையும். இன்றைய காலகட்டத்தினை நோக்கும்போது பல்கலைக்கழக மட்டத்தில் இருந்தும் கூட ஒரு பிணக்கினை நிர்வகிப்பதில் இளைய தலைமுறையினர் நடந்துகொள்ளும் விதம் மிகவும் வருத்தமளிக்கின்றது. சொந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இளைஞர்களின் உணர்வு ரீதியான பலவீனமான நிர்வாங்கம் எதற்கும் பயன்படாத ஒன்றகவே உள்ளது.
இளைய தலைமுறையினராகிய, உங்களால் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ள முடியுமா?
பன்முகத்தன்மையை முதலில் எதிர்கொள்ளும் இடமாக பாடசாலையைக் கருதலாம். எந்தவொரு எதிர்கால சூழலிலும் பன்முகத்தன்மையை பொறுத்துக்கொள்ளக்கூடிய ஒரு ஒழுக்கமான தனிநபரை பாடசாலை மூலம் உருவாக்க முடியும். பிறருடைய துக்கம், வேதனை, வலி, சந்தோசம், போன்றவற்றை தன்னுடைய துக்கம், வேதனை, வலி, சந்தோஷம் போல உணரும் ‘அனுதாபம்’ உள்ளவர் சமுதாயத்தில் பிணக்குகள் இல்லாமல் வாழ முடியும். பெரும்பாலும், தவறான அணுகுமுறைகள், தவறான தகவல்கள் மற்றும் மற்றவரைப் பற்றிய தவறான கருத்துக்கள் போன்றவற்றால் ஒரு பிணக்கு நீண்டகாலமாகவும், வெறுப்பாகவும் மாற்றமடைகின்றது. குறிப்பிட்ட சம்பவத்துடன் , தொடர்புடைய நபருடன் வெறுப்பு அதிகரிப்பதால் பிணக்கு மேலும் தீவிரமடைகின்றது.
இளைய தலைமுறையினராகிய உங்களை ‘மத்தியஸ்தம்’ செய்வதற்கு அவர்கள் எவ்வளவு தூரம் பொருத்தமானவர்கள்?
இலங்கையில் தற்போது 329 மத்தியஸ்த சபைகள் குழாம்கள் செயற்படுகின்றன.ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் மத்தியஸ்த சபைகள் குழாம்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், மத்தியஸ்த சபைக் குழாம்களின் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆகும். ஒவ்வொரு மத்தியஸ்தரும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்தியஸ்தம் மற்றும் தகவல் தொடர்பாடல் நுட்பங்கள் குறித்த 40 மணி நேரப் பயிற்சியை பூர்த்திசெய்து. அதன் பிறகு, ஒரு மணி நேரத் தேர்வில் அவர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் மத்தியஸ்தர்களாகத் தேர்வு செய்யப்படுகின்றார்கள். மத்தியஸ்த சபைகளின் மூலம் எந்த வயதிலும் உள்ள இளைஞர்கள் தங்கள் பிணக்குகளைத் தீர்க்க முடியும்.
மத்தியஸ்தம் பற்றி இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
முதலில் மத்தியஸ்த செயற்பாட்டில் , பிணக்குடன் தொடர்புடைய மற்ற தரப்பினரை எதிரியாகக் கருதக்கூடாது. மத்தியஸ்த செயற்பாட்டில், உங்கள் பிணக்கினைத் தீர்க்க சிறந்த நபர் உங்கள் எதிரி என்று நீங்கள் கருதும் நபர் என்று நினைக்க நீங்கள் பயிற்றுவிக்கப்படுகிறீர்கள். இது தொடர்பாடல் செயற்பாடுகளை மேலும் வெற்றிகரமாக்குகின்றது.
பாடசாலையில் மத்தியஸ்த செயற்பாடுகளை நிறுவுதல்.
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மத்தியஸ்தம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்றாகும். அதன் அடிப்படையில், மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு மற்றும் நீதி அமைச்சும் ஒன்றிணைந்து ஒரு திட்டத்தினை ஆரம்பித்து, 2004 முதல் பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து பாடசாலைகளில் மத்தியஸ்த சபைப் பிரிவுகளை நிறுவுவதற்கான திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது. அடிப்படையில், இங்கு என்ன செயற்பாடு நடக்கின்றது என்றால், பாடசாலை மாணவர்களிடையே தேர்ந்தெடுக்கப்பட்ட பிணக்குகள் பாடசாலையில் நிறுவப்பட்ட மூத்த மாணவர்களைக் கொண்ட பாடசாலை சமரசப் பிரிவுக்கு அனுப்பப்படுகின்றன. அதற்காக 25 மாணவர்கள் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் அடங்கிய மத்தியஸ்த பிரிவு பாடசாலையில் நிறுவப்படும். அங்கு, மத்தியஸ்தச் செயற்பாட்டில் பங்குபெறும் மூத்த மாணவர்கள் ஒரு பிணக்கினைத் தீர்க்க மத்தியஸ்தம் செய்கின்றார்கள்.
தற்போதைய சூழ்நிலையில் பாடசாலைகளில் மட்டும் அல்ல, பல்கலைகழக அளவிலும் மத்தியஸ்த செயற்பாட்டினை அமல்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
பல்கலைக் கழகங்களில் பாட அறிவுக்கு மேலதிகமாக சமூக அறிவைக் கொண்ட ஒரு சரியான குழுவை உருவாக்குவதுநிம் ஒரு சமூகப் பொறுப்பாகும். சுற்றியுள்ள சூழலைப் புரிந்துகொண்டு, உலகின் உயர்தர இசையைக் கேட்கும், ரசிக்கும் திறனும், நல்ல இலக்கிய அறிவும் கொண்ட ஒரு பிரிவு சமூகமயமாக்கப்பட வேண்டும்.
இளைய தலைமுறையினராகிய உங்கள் பிணக்குகளின் ரகசியத் தன்மையை சிறந்த வகையில் பாதுகாக்கும் அமைப்பு!
மத்தியஸ்த சபைகளின் முதன்மையான கடமை நீங்கள் முன்வைக்கும் பிணக்குகளின் இரகசியத் தன்மையைப் பேணுவதாகும். காதல் உறவு தொடர்பான பிணக்காக இருந்தாலும் அல்லது வேறு ஏதேனும் பிணக்காக இருந்தாலும் பெரியவர்களுடன் சுதந்திரமாக விவாதிக்க இங்கே வாய்ப்பு அளிக்கப்படும். அதன் பின்னர் அவர்கள் பிணக்கினைத் தீர்க்க தேவையான, சரியான வழிகாட்டுதலை வழங்குவார்கள். மத்தியஸ்தத்தில், சொந்த பிரச்சனையை தொடர்புடைய தரப்பினரின் விருப்பின்படி கையாளவும், விரும்பியபடி அதைத் வாய்ப்பு வழங்கப்படும்.
மத்தியஸ்த சபைகள், தற்கால இளைஞர்கள் தங்கள் பிணக்குகளை பயமின்றி எடுத்துச் செல்வதற்கான சிறந்த இடம், அங்கு அவர்கள் தங்கள் பிணக்குகளை ஒரு விவாத அடிப்படையில் சரியான வழிகாட்டுதல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். நாட்டின் எதிர்காலத்திற்காக இளைய தலைமுறையினரின் கருத்துக்களை கேட்க மத்தியஸ்த சபைகள் எப்பொழுதும் கடமைப்பட்டுள்ளது என்பதைக் கூற வேண்டிய அவசியமில்லை.