முன்மாதிரியாகவுள்ள இலங்கைப் பெண்களை கௌரவித்து மதிப்பளித்தல் 

Share with your friend

பிரிட்டிஷ் கவுன்சில், Child Fund ஸ்ரீலங்காவுடன் இணைந்து உள்ளுர் இலங்கைப் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடும் முகமாக ஒரு உற்சாகமான போட்டியை சமீபத்தில் நடத்தி முடித்தது. அந்த வகையில் அவர்கள் நடத்திய She-roes போட்டியானது, இலங்கையில் முன்மாதிரிகளாகவுள்ள பெண் சாதனையாளர்களை அங்கீகரித்து மதிப்பளிப்பதோடு, பெண்களை பாராட்டி ஊக்குவிக்கிறது. பெண்கள் கல்விக்கான ஆங்கிலம் மற்றும் டிஜிட்டல் (EDGE) திட்டம், சக குழுத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இந்த முன்மாதிரிப் போட்டி அதன் கழக உறுப்பினர்களுக்கு உத்வேகமாக அமைந்ததுடன் அவர்களை கனவு காணவும் மேலும் உயரத்திற்குச் செல்லவும் தூண்டியது.

இதன் பரிசளிப்பு விழா 22 மார்ச் 2024 அன்று கொழும்பில் உள்ள டவர் ஹால் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு இலங்கை முழுவதிலும் உள்ள EDGE கழக உறுப்பினர்களின் திறமைகள் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தியதோடு, உள்ளுரில் முன்மாதிரியாகவுள்ள பெண்களின் சாதனைகள் மற்றும் அவர்களின் சமூகங்களில் அவர்கள் ஏற்படுத்தும் சிறந்த செயற்பாடுகளையும் அங்கீகரித்தது. இலங்கையின் முதல் பார்வை குறைபாடுடைய ஆடை வடிவமைப்பாளர் எனப் புகழப்படும் நயனா ஆஷ்சார்யா இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பெண்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்மாதிரிகள் தாய்மார்கள், சகோதரிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் என மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. ஒவ்வொரு பெண்ணும் தங்களின் முன்மாதிரியைத் தேர்ந்தெடுத்து சித்தரிக்கும் பணியை மேற்கொண்டனர். பின்னர், அவர்கள் நான்கு பேர் கொண்ட குழுக்களாக ஒன்றிணைந்து, அவர்களின் அனைத்து முன்மாதிரிகளையும் காண்பிக்கும் ஒரு சுவரொட்டியை வடிவமைத்தனர். இந்த சுவரொட்டிகள் பின்னர் உள்ளுர் கழக நிலை, மாவட்டம் மற்றும் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்டது.

‘இந்தப் போட்டியின் மூலம் பாராட்டி கௌரவிக்கப்பட்ட பெண் முன்மாதிரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்கள் செய்த பணிகளை அங்கீகரிப்பது மற்றும் அவர்களின் உள்ளுர் சமூகங்களில் அவர்கள் வைத்திருக்கும் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது மகத்தானதாகும். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான நேர்மறையான முன்மாதிரிகளை முன்னிலைப்படுத்துவது மற்றும் அவர்களின் திறனை உணர அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது இன்றியமையாதது, அதே நேரத்தில் பாலின சேர்க்கை மற்றும் அணுகலை அவர்களின் சமூகங்களின் மையத்தில் வைக்கிறது. EDGE திட்டம் பெண்கள் தங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு பாதுகாப்பான இடத்தை வழங்கியுள்ளது, மேலும் தகவலறிந்த வாழ்க்கைத் தேர்வுகளைச் செய்ய அவர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளதுடன் அவர்கள் தாம் கனவு காணும் எதிர்காலத்தை உருவாக்க அவர்களுக்கு துணைபுரிகிறது ‘என்று பிரிட்டிஷ் கவுன்சிலின் வதிவிடப் பணிப்பாளர் ஆர்லாண்டோ எட்வர்ட்ஸ் கூறினார்.

‘ஆங்கிலம் மற்றும் டிஜிட்டல் கல்விக்கான (EDGE) திட்டத்திற்காக பிரிட்டிஷ் கவுன்சிலுடன் ஒத்துழைப்பதில் Child Fund மகிழ்ச்சியடைகிறது, இது பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த இளம்பெண்களின் ஆங்கில புலமை, டிஜிட்டல் மற்றும் சமூக திறன்களை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். EDGE சமூகம் சார்ந்த பெண்கள் கழகத்தை நிறுவவும் பெண்களின் கற்றலை எளிதாக்குவதற்கும், சக தலைவர்களை உள்ளடக்கியது. வாரந்தோறும் இந்தப் பெண்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஆங்கிலம், டிஜிட்டல் மற்றும் சமூக திறன்களைக் கொண்ட பெண்களை மேம்படுத்துவது, எல்லைகளைத் தாண்டி உயரப் பறந்து நட்சத்திரங்களை அடைய அவர்களுக்கு இறக்கைகளைக் கொடுப்பதைப் போன்றது. அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று Child Fund ஸ்ரீலங்காவின் வதிவிடப் பணிப்பாளர் அதிதி கோஷ் தெரிவித்தார்.

2023 முதல், EDGE திட்டம் இலங்கையில் சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களில் உள்ள இளம்பெண்களின் (வயது 13-19) வாழ்க்கை வாய்ப்புகளை மேம்படுத்த முயல்கிறது. கூட்டாண்மை நிறுவனங்கள் மூலம், பிரிட்டிஷ் கவுன்சில் தடைகளை குறைத்து, பெண்களின் ஆங்கிலம் மற்றும் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தவும், கல்வி, சமூக மற்றும் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கவும், முறைசாரா சமூக அடிப்படையிலான பெண்கள் கழகத்தை நிறுவியுள்ளது. அதே சமூகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சக குழு தலைவர்களின் தலைமைத்துவ திறன்களையும், இளம் பருவப் பெண்களை மேம்படுத்துவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. EDGE திட்டம் நுவரெலியா, புத்தளம், கொழும்பு (ஸ்லேவ் ஐலன்ட்), மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களை உள்ளடக்கியது. சமூகம் சார்ந்த கழகங்கள் மூலம், இலங்கையில் உள்ள 720 பெண்கள் மற்றும் 60 சக குழு தலைவர்களின் ஆங்கிலப் புலமை, டிஜிட்டல் திறன்கள், சமூக விழிப்புணர்வு மற்றும் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் கவுன்சில் பற்றி

பிரிட்டிஷ் கவுன்சில் என்பது இங்கிலாந்தின் கலாச்சார உறவுகள் மற்றும் கல்வி வாய்ப்புகளுக்கான சர்வதேச அமைப்பாகும். இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு இடையே தொடர்புகள், புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை உருவாக்குவதன் மூலம் அமைதி மற்றும் செழுமையை நாங்கள் ஆதரிக்கிறோம். கலை மற்றும் கலாச்சாரம், கல்வி மற்றும் ஆங்கில மொழி ஆகியவற்றில் எங்கள் பணி மூலம் இதைச் செய்கிறோம். நாங்கள் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள மக்களுடன் பணிபுரிகிறோம், மேலும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் நிலை கொண்டுள்ளோம். 2022-23ல் 600 மில்லியன் மக்களை எட்டியுள்ளோம்..


Share with your friend