உலகின் முன்னணி மாற்று சக்தி வாகனங்களின் (New Energy Vehicle) உற்பத்தியாளரான BYD நிறுவனம் மற்றும் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து, அண்மையில் மொறட்டுவையில் தனது ஆறாவது காட்சியறையை திறந்துள்ளது.



அதேவேளையில், புதிய BYD SEALION 5 என்ற plug-in hybrid SUV வாகனத்தையும் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரட்டை முன்முயற்சியானது BYD நிறுவனம் இலங்கையில் தனது வர்த்தக விரிவாக்கத்தை தொடர்ந்து வலுப்படுத்துவதைக் காட்டுகிறது.
மொறட்டுவையில் அமைந்துள்ள இப்புதிய BYD காட்சியறை, கொழும்பு மற்றும் குருநாகலைக்குப் பின் நிறுவனத்தின் மூன்றாவது சொந்த மையமாக திகழ்கிறது. இந்த விரிவாக்கம் கொழும்பின் தெற்குப் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மாற்று சக்தி வாகனங்களை எளிதில் அணுகுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மேலும், கொழும்பு மற்றும் வத்தளையில் உள்ள முழுமையான சேவை நிலையங்கள் மூலம், வாடிக்கையாளர்கள் நம்பகமான விற்பனைக்குப் பின்னரான பராமரிப்பைப் பெற்று, புதிய மாற்று சக்தி வாகனங்களை நம்பிக்கையுடன் பயன்படுத்த முடிகிறது.
BYD SEALION 5 என்ற புதிய சிறிய அளவிலான plug-in hybrid SUV வாகனம் இலங்கை சந்தையில் அறிமுகமாகியுள்ளது. Super DM-i தொழில்நுட்ப தளத்தில் உருவாக்கப்பட்ட இந்த வாகனம், 1.5 லீட்டர் Xiaoyun எஞ்சினுடன் BYD இன் Blade பேட்டரியை இணைத்து, ஒரே நிரப்புதலில் 1,030 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டது. எரிபொருள் சேமிப்புடன், ஆடம்பரமான உட்புற வடிவமைப்பு, நவீன ஓட்டுநர் உதவி அமைப்புகள் மற்றும் Ocean Aesthetics வடிவமைப்பு கொண்ட இந்த வாகனம், நகர்ப்புற பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்கள் இரண்டிற்கும் ஏற்றதாக உள்ளது.
இப்புதிய காட்சியறை தொடர்பில் John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரத்ன கருத்து தெரிவிக்கையில், “கொழும்பின் தெற்கு பகுதி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கவே மொரட்டுவையில் புதிய BYD காட்சியறை திறக்கப்பட்டுள்ளது. இது BYD-இன் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். மேலும், நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, Super DM-i தொழில்நுட்பத்தில் இயங்கும் BYD SEALION 5 வாகனத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த வாகனம் இலங்கையில் நிலையேறான போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதில் எங்களது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் காட்டுவதுடன், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த செயல்திறன், எரிபொருள் சேமிப்பு மற்றும் நீண்ட தூர பயணத் திறன் கொண்ட மாற்று சக்தி வாகனங்களை வழங்குவதை உறுதி செய்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.
BYD SEALION 5 வாகனம் தற்போது இலங்கை முழுவதும் உள்ள அனைத்து BYD காட்சியறைகளிலும் கிடைக்கிறது மற்றும் முன்பதிவிற்காகவும் திறக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் Cosmos Black, Atlantis Gray, Aurora White மற்றும் Harbour Grey ஆகிய நான்கு நிறங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. BYD நிறுவனம் தனது வாகனங்களில் உயர்தர செயல்திறன் மற்றும் புத்தாக்கத்துடன், 5-நட்சத்திர NCAP பாதுகாப்பு மதிப்பீட்டைக் கொண்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, நிலையேறான போக்குவரத்து தீர்வுகளை முன்னெடுக்கிறது.