ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனியுடன் கைகோர்த்து அமெரிக்க உறக்கம்சார் தீர்வுகள் வழங்குனரான Englander இலங்கையில் பிரவேசம்

Share with your friend

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் Englander International தலைவர் லூ பேஜ் ஆகியோர் இலங்கையின் Englander காட்சியறையை திறந்து வைக்கின்றனர். 

இலங்கையின் மாபெரும் மற்றும் பரந்தளவு பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற மெத்தை தொழினுட்ப நிறுவனமான Englander International உடன் இணைந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற மெத்தைகளை இலங்கை சந்தையில், இல. 69, ஹைட் பார்க் கோனர், கொழும்பு-02 இல் புதிய Englander காட்சியறையின் ஊடாக அங்குரார்ப்பணம் செய்தது.

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகப் பிரிவின் முகாமைத்துவ பணிப்பாளர் லலித் விஜேசிங்க, மங்கல விளக்கேற்றி, காட்சியறையை திறந்து வைக்கிறார்.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் பங்கேற்றதுடன், Englander International இன் தலைவர் லூ பேஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். வாடிக்கையாளர்களுக்கு நவீன புத்தாக்கம், சௌகரியம் மற்றும் சிறந்த வடிவமைப்பு ஆகியவற்றை பெற்றுக் கொடுப்பதற்கான ரிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் அர்ப்பணிப்பை இந்த காட்சியறை மீள உறுதி செய்துள்ளது. இலங்கையில் Englander மெத்தை வகைகளை உற்பத்தி செய்வதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இந்தக் குழுமத்துக்கு, நவீன ஹயிபிரிட் தொழினுட்பங்களைப் பயன்படுத்தி, memory foam முதல் latex மற்றும் Inner Spring ஆகியவற்றைக் கொண்டு உயர் தர மெத்தைகளை தயாரித்து வழங்கக்கூடியதாக இருக்கிறது.

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் பணிப்பாளர் சபை இயக்குனர் ஷிரோன் குணரட்ன ஒன்றுகூடியிருப்பவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

1894 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Englander International தொடர்ச்சியாக விசேடத்துவம் வாய்ந்த உறங்கல்சார் தயாரிப்பு தீர்வுகளை தயாரித்து விநியோகிக்கிறது. சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், நிலைபேறான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் Englander மெத்தைகள், சிறந்த சௌகரியம் மற்றும் மேம்படுத்தப்பட்ட குளிர்மைத் தன்மையை வழங்குவதுடன், நவீன ஆய்வுகளையும், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பையும் ஒன்றிணைத்து பிரத்தியேகமான உறங்கல் அனுபவங்களை வழங்கிய வண்ணமுள்ளது. உயர் தரம் வாய்ந்த உறங்கல் தீர்வுகளை விநியோகிப்பதில் கவனம் செலுத்தும் Englander மெத்தைகள், நீடித்த உழைப்பு, சிறந்த வடிவமைப்பு மற்றும் thermal comfort தொழினுட்பத்தையும் கொண்டுள்ளதால், எந்தவொரு நபருக்கும் புத்துணர்வான உறக்க அனுபவத்தை வழங்கும்.

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் பணிப்பாளர் சபை இயக்குனர் ஷிரோன் குணரட்ன, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் அவர்களிடம் நினைவுச்சுவடொன்றை கையளிப்பதையும், அருகில் ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகப் பிரிவின் முகாமைத்துவ பணிப்பாளர் லலித் விஜேசிங்க காணப்படுவதையும் காணலாம். 

இலங்கையில் Englander இன் பிரவேசம் தொடர்பில் Englander International இன் தலைவர் லூ பேஜ் குறிப்பிடுகையில், “எமது நோக்கத்தினூடாக எமது செயற்பாடுகள் வலுவூட்டப்படுவதுடன், அதனூடாக நவீன வினைத்திறனைக் கொண்ட தயாரிப்புகள் உருவாக்கப்படுகின்றன. பெருமளவான மக்களுக்கு இயலுமானவரை நுணுக்கமான ரீதியில் வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளை வழங்கி எமது நீண்ட பயணத்தை தொடர முடிந்துள்ளது. இலங்கையில் எமது புதிய காட்சியறையினூடாக, எமது பயணத்தில் புதிய அத்தியாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்துக்காக எமது புகழ்பெற்ற நாமத்தினூடாக சிறந்த உறக்க அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

From left to right – இடமிருந்து – ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி குழும பிரதம நிதி அதிகாரி சுதீர எபிடகும்புர, ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் பணிப்பாளர் சபை இயக்குனர் ஷிரோன் குணரட்ன, Englander International தலைவர் லூ பேஜ், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகப் பிரிவின் முகாமைத்துவ பணிப்பாளர் லலித் விஜேசிங்க ஆகியோர் உயர்தர Englander மெத்தை ஒன்றுடன் காணப்படுகின்றனர்.

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் பணிப்பாளர் சபை இயக்குனர் ஷிரோன் குணரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “Englander International உடன் கைகோர்த்து, எமது வாடிக்கையாளர்களுக்கு எதிர்கால வாய்ப்புகளை எய்துவதற்கு அவசியமான வலுவூட்டலை பெற்றுக் கொடுக்கும் சிறந்த உறக்கம் மற்றும் ஓய்வை வழங்கும் எமது முயற்சியின் விரிவாக்கமாக Englander International உடனான எமது செயற்பாடுகள் அமைந்துள்ளன. எமது தவிசாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி/முகாமைத்துவ பணிப்பாளரான கலாநிதி. சேன யத்தெஹிகே அவர்களின் மூலோபாய வழிகாட்டலினூடாக வழிநடத்தப்படும் நாம், இலங்கையில் உலகத் தரம் வாய்ந்த உறங்கல்சார் தொழினுட்பத்தை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம். புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழினுட்பங்களினூடாக உள்நாட்டு சந்தையை மேலும் நவீன மயப்படுத்தி, சிறந்த உறக்கம், ஆரோக்கியம் மற்றும் சௌகரியத்தை மேம்படுத்துகிறோம்.” என்றார்.

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகப் பிரிவின் முகாமைத்துவ பணிப்பாளர் லலித் விஜேசிங்க இந்த பங்காண்மையை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியிருந்ததுடன், அவர் குறிப்பிடுகையில், “Englander International உடனான செயற்பாடுகளினூடாக எமக்கு உறுதியான அடித்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், துறையினுள் புதிய வாய்ப்புகளை நோக்கி நகர்வதற்கு துரிதமாகவும், மூலோபாய ரீதியிலும் வாய்ப்புகளை வழங்குவதாக அமையும். இலங்கையர்களுக்கு உள்நாட்டு சிறப்புடன், உயர்தரமான உறங்கல்சார் தொழினுட்பத்தை பெற்றுக் கொடுப்பதற்காக, புத்தாக்கமான அம்சங்களை ஏற்படுத்துவதற்கு ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனியைச் சேர்ந்த நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

1932 ஆம் ஆண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்துடன் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி, தொடர்ச்சியாக பெருமளவு வளர்ச்சியைப் பதிவு செய்து, இலங்கையின் சிறந்த பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரங்களில் ஒன்றாக திகழ்கிறது. விற்பனை, பெருந்தோட்டங்கள், இறப்பர், தளபாடங்கள், டயர்கள், பிளாஸ்ரிக், காப்புறுதி, பங்கு முகவராண்மை, நிதிச் சேவைகள் மற்றும் சரக்குக் கையாளல் போன்ற துறைகளில் ஈடுபாட்டைக் கொண்டுள்ளது. பெருமளவு வருடாந்த புரள்வைப் பதிவு செய்து, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள மாபெரும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.


Share with your friend