அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் இலங்கையின் நம்பர்.1 வாழ்க்கைமுறை சேமிப்பு App ஆன SLASH இல் பிரத்தியேகமான 20% சேமிப்பை அனுபவிக்கும் வாய்ப்பு

Home » அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் இலங்கையின் நம்பர்.1 வாழ்க்கைமுறை சேமிப்பு App ஆன SLASH இல் பிரத்தியேகமான 20% சேமிப்பை அனுபவிக்கும் வாய்ப்பு
Share with your friend

தனது வாடிக்கையாளர்களுக்கு இன்னும் கூடுதலான மதிப்பை உருவாக்கும் முயற்சியில், அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வருடாந்த மற்றும் மாதாந்த SLASH திட்டங்களில் பிரத்தியேகமான 20% தள்ளுபடியை வழங்க இலங்கையின் நம்பர்.1 வாழ்க்கை முறை சேமிப்பு App ஆன, SLASH உடன் கைகோர்த்துள்ளது. SLASH என்பது இலங்கையின் முதன்முதல் மற்றும் முன்னணி வாழ்க்கை முறை சேமிப்பு App ஆகும். இது வாடிக்கையாளர்களுக்கு 8 வாழ்க்கை முறை பிரிவுகளில், 120 இற்கும் மேற்பட்ட இடங்களில் மற்றும் 300 க்கும் மேற்பட்ட சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் ஆகியவற்றில் 1 க்கு 1 என்ற அடிப்படையில் சேமிப்புக்கள் மற்றும் தள்ளுபடிகளை பெற்றுக்கொள்ள இடமளிக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் இரு தரப்பினரும் கைச்சாத்திட்ட உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் இரு நிறுவனங்களும் இந்த கூட்டாண்மைக்குள் காலடியெடுத்து வைத்துள்ளன.

அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பாடல் துறைக்கு தலைமை வகிக்கும் ஷாமில் அக்பர் அவர்கள், இக்கூட்டாண்மை தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “SLASH இன் இணை ஸ்தாபகர்கள் SLASH app ஐ உருவாக்க எங்களைச் சந்தித்தபோது, அது மிகவும் புதுமையானதாகவும், உற்சாகமூட்டுவதாகவும், மக்களுக்கு ஏற்றதாகவும் இருந்தது. அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நாம் பின்பற்றும் முக்கிய விழுமியங்களாக அவை உள்ளமையால் எமது ஆர்வம் அதிகரித்தது. எனவே, இந்த சலுகையை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முதலாவது நிறுவனமாக நாங்கள் இருக்க வேண்டுமென விரும்பினோம், அது இன்று நனவாகியுள்ளது. அமானா இன்சூரன்ஸின் அனைத்து ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அனுபவிக்கக்கூடிய SLASH திட்டத்தை செயல்படுத்தும் செலவில் 20% தள்ளுபடியை வழங்குவதன் மூலம் SLASH அணி தனது மகிழ்ச்சியை எம்முடன் பரிமாறிக்கொண்டது,” என்று குறிப்பிட்டார்.

இக்கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த SLASH இன் இணை ஸ்தாபகர்களான உசைன் மற்றும் தஸ்னீம் துராபலி ஆகியோர், “மக்கள் அதிகமாகச் சேமிக்கவும், அதிகமானவற்றை அனுபவிக்கவும், வாழ்க்கையை இன்னும் சிறப்பாக வாழவும் நாங்கள் விரும்புகிறோம். பரிமாணம் மற்றும் எண்ணிக்கையைப் பயன்படுத்துவதன் மூலம் வங்கியில் உள்ளதை எடுக்காமல் நீங்கள் விரும்பும் வாழ்க்கை முறையை அனுபவிக்க முடியும் என்பதை நாங்கள் விளங்கிக்கொண்டோம். குறிப்பாக தொற்றுநோய்க்குப் பிறகு, மக்கள் தங்கள் வாழ்வை அனுபவிக்க முடியாத அளவுக்கு விலைகள் உயர்ந்ததைக் கண்டோம். அதை மாற்றவே நாங்கள் இப்பயணத்தில் கால்பதித்தோம். இது எங்களின் தொடக்க வணிக முயற்சியாக அமைந்துள்ள, SLASH க்கான சிந்தனைக்கு எமக்கு வழிவகுத்தது. இது பிரபலமடைந்து வருவதுடன், மிகுந்த வெற்றியையும் அனுபவித்து வருகிறது. பலருக்கு அவர்களின் கனவு வாழ்க்கை முறையை நனவாக்கிக் கொள்ள உதவுகிறது. அமானா உடனான இந்த கூட்டாண்மையையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், ஏனெனில் இது எங்கள் பரஸ்பர வாடிக்கையாளர்களுக்கு வருடாந்த சந்தாவில் கூட சேமிக்க உதவுகிறது. SLASH இல் வருடத்திற்கு ரூபா 5,000 தொகையைச் செலவழிப்பதன் மூலம், எங்களின் அனைத்து சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் மூலம் ரூபா 1.8 மில்லியன் பெறுமதியான சேமிப்பை நீங்கள் பெற முடியும் என்பதைக் குறிப்பிடுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இப்போது அந்த தொகை மதிப்பு ஈடுஇணையற்றதாக உள்ளது!,” என்று குறிப்பிட்டனர்.

அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் நிறுவனமானது இலங்கையில் காப்புறுதியின் (தகாஃபுல்) தனித்துவமான எண்ணக்கருவுக்கு முன்னோடியாக திகழ்ந்தது. இது வாடிக்கையாளர்களை மையப்படுத்திய மற்றும் தொழில்சார் நெறிமுறை நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டதுடன், இன்று இலங்கையில் ஒரு முழுமையான காப்புறுதி நிறுவனமாக மாறியுள்ளது. அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் நிறுவனம் 1999 ஆம் ஆண்டில் ஒரு பொது நிறுவனமாக கூட்டிணைக்கப்பட்டதுடன், 2006 ஆம் ஆண்டு முதல் கொழும்பு பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ளது. அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் இலங்கை முழுவதும் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு 35 இற்கும் மேற்பட்ட கிளைகளுடன் புவியியல்ரீதியான தனது அடிச்சுவட்டை விரிவுபடுத்தியுள்ளது. ISO 9001 தரச்சான்று அங்கீகாரம் பெற்ற நிறுவனமான அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ், 2005 ஆம் ஆண்டு முதல் மாலைதீவில் தனது வெளிநாட்டு செயல்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறது. இது ஒரு சுயாதீனமான பொது நிறுவனமாக அங்கு கூட்டிணைக்கப்பட்டு, 2011 ஆம் ஆண்டில் மாலைதீவு பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டது. அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் நிறுவனம் முழுமையான ஆயுள் மற்றும் பொதுக் காப்புறுதி தீர்வுகளை வழங்கி வருவதுடன், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் ஒட்டுமொத்த மருத்துவ சுகாதாரத் தேவைகளுக்கு ஏற்றவாறு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மருத்துவ சுகாதாரக் காப்புறுதித் திட்டங்களையும் வழங்கி வருகின்றது.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: