அவுஸ்திரேலிய BOI முயற்சியான Autogroup International சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்த எத்தனிக்கின்றது

Share with your friend

Autogroup International நிறுவனமானது இடது பக்க இயக்க வாகனங்களை வலது பக்க இயக்க வாகனங்களாக மாற்றியமைப்பதில் நிபுணத்துவமிக்க, 100% அவுஸ்திரேலியருக்குச் சொந்தமான நிறுவனமாகும். இந் நிறுவனமானது, இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிறைந்த சூழல் மற்றும் அரசாங்க அதிகாரத்துவம் இருந்த போதிலும் இலங்கையில் ஒரு குறிப்பிடத்தக்க புதிய தொழிற்சாலை விரிவாக்கத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பல சவால்களுக்கு முகம் கொடுத்த இந் நிறுவனத்தின் தலைவர் Peter Hill வலது பக்க இயக்க வாகனங்களை மாற்றியமைக்கும் வணிகத்தை 30 வருடங்களுக்கு முன் அவுஸ்திரேலியாவில் நிறுவினார். இடது பக்கம் இயங்கும் American SUV, Muscle Cars மற்றும் Pickup Trucks  ஆகியவற்றை வலது பக்கம் இயங்கும் வாகனங்களாக மாற்றும் இவ் வணிகத்தை அவர் 20 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் முதலீட்டு வாரிய (BOI) வணிகமாக நிறுவினார்.


கடந்த இரண்டு தசாப்தங்களாக அடிமட்டத்திலிருந்து சீரான வளர்ச்சி அடைந்து, இலங்கையில் ஒரு வணிகத்தை வளர்க்க முயற்சிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளராக பல சவால்களை எதிர்கொண்டு, மிக திறமையான மற்றும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, சர்வதேச தரத்திற்கு நிகரான நிபுணர்களைக் கொண்ட ஒரு வெற்றிகரமான நிறுவனமாகும்.

தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணைத்தலைவர்  Rob Hill- இன் உத்வேகமான தலைமைத்துவத்தின் கீழ் கடந்த 3 வருடங்களில் COVID-19 நோய்த்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற சவால்களிலிருந்து மீண்டு,  AGI புதிய குழு உறுப்பினர்களை வேலைக்கு அமர்த்தும் அதே வேளை குழுவின் திறன் மேம்பாட்டையும் அறிவு ரீதியான மேம்பாட்டையும் ஊக்குவித்து வணிகத்தில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றது. 

நிறுவனம் ஆற்றல்மிக்க மூத்த தலைமைத்துவக் குழுவைக் கொண்டுள்ளதுடன், நிறுவனத்தின் மக்களை மையமாகக் கொண்ட பணியிடக் கலாச்சாரம் மற்றும் சமூக மதிப்புகளில் தாராள மனப்பான்மைகளைக் கொண்டுள்ளது. 

Autogroup International ISO 9001:2015 தரச்சான்றிதழ் பெற்ற உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். இது வாகனங்களை ADR-க்கு (Australian Design Rules) இணக்கமாக வாகனங்களை உற்பத்தி செய்கின்றது. 

நிறுவனம் 30 க்கு மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் நன்கு அனுபவம் வாய்ந்த 170 க்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்த தயாரிப்புக் குழு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் மேம்பட்ட 3D Scanning, 3D Printing மற்றும் Reverse Engineering தொழில்நுட்பங்களால் ஆதரிக்கப்படுகின்றன.

நிறுவனமானது GMC Yukon Denalli, Hammer EV, Lincoln Navigator மற்றும் Toyota Sequoia போன்ற சொகுசு SUVகள் உள்ளடங்கலாக அனைத்து வகையான அமெரிக்க வாகனங்களினதும், GMC Sierra, Ford F Series, Toyota Tundra மற்றும் Dodge RAM உள்ளிட்ட அமெரிக்க Truck குகளினதும் Dodge Challenger, Dodge Charger மற்றும் Chevrolet Camaro போன்ற Muscle Car களினதும் இயக்கு பக்க மாற்றுகையில் நிபுணத்துவம் பெற்றதாகும்.


இதுவரையிலான தனது பயணம் குறித்த தனது எண்ணங்களை ‘Autogroup International நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணைத் தலைவருமான Rob Hill வெளிப்படுத்துகையில், “கடந்த 20 வருடங்களாக ஆயிரக்கணக்கான உயர்தர, பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ இணக்கமான வலது பக்க இயக்க மாற்றங்களை வாகனங்களுக்கு வழங்கியுள்ள எங்கள் நம்பமுடியாத, உலகத் தரம் வாய்ந்த இலங்கைக் குழுவினரைப் பற்றி நான் பெருமிதமடைகின்றேன்.” எதிர்காலத்தைப் நோக்கும் போது, ​​வாகனங்களுக்கான உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்ய AGI விரிவுபடுத்தப்படல் வேண்டும் என்று அவர் கூறினார். “எங்கள் திறனை மேலும் விரிவுபடுத்துவதற்கும், ஒரு பெரிய புதிய தொழிற்சாலையை உருவாக்குவதற்கும் எங்களிடம் ஆர்வமான ‘இரகசியத் திட்டங்கள்’ உள்ளன. ஒரு வெளிநாட்டு முதலீட்டாளராக நாம் அடிக்கடி எதிர்கொள்கின்ற சவாலான அதிகாரத்துவம் மற்றும் ஆதரவு இன்மை காணப்பட்ட போதிலும், எங்களின் புதிய தொழிற்சாலை இலங்கையில் இருக்கும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகின்றோம்.”

AGI இல் உள்ள அனைத்து இடது பக்க இயக்க வாகனங்களும் வட அமெரிக்காவிலிருந்து கவனமாகப் பெறப்பட்டு, இலங்கையில் உள்ள அதன் உலகத் தரம் வாய்ந்த நிலையத்திற்கு அனுப்பப்படுகின்றன, அங்கு மிகவும் சிக்கலான பொறியியல் மற்றும் உற்பத்தி உட்பட முழு மாற்றும் செயல்முறையும் நடைபெறுகின்றது. 3- 6 வார மாற்றச் செயன்முறையைத் தொடர்ந்து வாகனங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலகளவில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வலது பக்க இயக்க வாகனங்களின் கேள்வியை உறுதிசெய்து, இணையற்ற புதுமைகளுடன் இணைந்து, மிக உயர்ந்த தரம் மற்றும் பாதுகாப்புத் தரங்களுக்கு ஏற்ப வாகனங்களைத் தயாரித்து விநியோகிப்பதென்பது நிறுவனம் கடினமாகச் சம்பாதித்த உலகளாவிய நற்பெயராகும்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply