இலங்கையர்கள் இப்பொழுது Coke Zeroவின் சுவையைநண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

Home » இலங்கையர்கள் இப்பொழுது Coke Zeroவின் சுவையைநண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
Share with your friend

இலங்கையில் Coca-Cola இன்னும் சுவையான மற்றும் புத்துணர்ச்சியூட்டிடும் செய்முறையில், அழகிய புதிய பக்கேஜிங்கில், தனித்துவமிக்க கிளசிக் Coke இற்கு நுகர்வோரை அழைத்துச் செல்லும் வகையில், தமது புதிய Coca-Cola Zero வினை அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் இலங்கையின் நுகர்வோர் தற்பொழுது சீனி மற்றும் கலோரிகள் அற்ற புதிய Coke Zero வினை அனுபவித்திட முடியும். 

Coca-Cola Zero, 2005ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் தொடங்கப்பட்டது. அத்துடன் 2017 இல் சுவை மறுசீரமைக்கப்பட்டு Coca-Cola வின் உன்னதமான பழைமையான சுவைக்கு அண்மித்த வகையில் தயாரித்தது. பட்டியலிடப்பட்ட அனைத்து உள்ளடக்க பொருட்களும் ஊட்டச்சத்து தகவல்;களும் ஒரே மாதிரியாக இருக்கும் போது புதிய Coca-Cola Zero செய்முறையானது மேலும் அவ்விடைவெளியைக் குறைத்து Coke பிரியர்களுக்கு தங்களுக்கு மிகவும் பிடித்த பானத்தை அனுபவிக்கவும் சீரான வாழ்க்கை முறையைத் தழுவிக் கொள்ளவும் உதவுகிறது. 

Coca-Cola Beverages Sri Lankaவின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. மயாங்க் அரோரா கருத்து தெரிவிக்கையில்,

“Coke Zero வின் சுவை இலங்கையிலும் மற்றும் உலகளாவிய ரீதியிலும் சிறந்த வெற்றியைத் தந்தது. சில வருட காலங்களுக்கு முன்னர் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து கிடைக்கப்பெற்ற உறுதியான நுகர்வோர் பிரதிபலிப்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு சீரான வாழ்க்கை முறையை தேடும்  இன்றைய இளைஞர்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவைப் பற்றி கவலைப்படாமல் நுகரக்கூடிய ஒரு சிறந்த பானம் ஆகும். அதிக விருப்பத்தேர்வு மற்றும் மாறுபாடுகளை எதிர்ப்பார்க்கும் இளம் வயதினருக்கு இது மிகவும் ஏற்றது ஆகும். இது அவர்களின் பிஸியான வாழ்க்கை முறையை பூர்த்தி செய்வதுடன் அவர்கள் தங்கள் நண்பர்கள், குடும்பங்கள் மற்றும் சக ஊழியர்களுடன் தங்கள் வாழ்க்கையை அவர்கள் விருப்பப்படியே அனுபவிக்கின்றனர். இப்புதிய Coke Zero வின் அறிமுகத்துடன் நுகர்வோருக்கு கிளசிக் கோக் சுவைக்கு இன்னும் நெருக்கமான சுவையைக் கொண்ட பானத்தினை நாம் வழங்குகிறோம்.” எனத் தெரிவித்தார்.

Coca-Cola Zero வைப் பற்றி Coca-Coca Sri Lanka Private Limited இன் முகாமைத்துவப் பணிப்பாளரான பங்கஜ் சிங்ஹா கருத்து தெரிவிக்கையில்,

“Coca-Cola நிறுவனத்தின் மூலோபாயம் பல்வேறு சுவைகள் மற்றும் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ற வகையிலான பானங்களின் பரந்த தெரிவினை வழங்குவதாகும். எமது டயட்ஸ் மற்றும் லைட்ஸ் வகைகளின் தொடர்ச்சியான வளர்ச்சியை தொடர்ந்தும் கொண்டு செல்ல, ஏனைய தனித்துவமான வர்த்தகநாமங்கள் போலவே புத்தாக்கம்மிக்க வேறுபாடுகளைக் கொண்டவர்களாக இருந்திட நமக்கு நாமே சவால்விட வேண்டும்.  நுகர்வோர் வடிவமைப்பு எப்போதும் மாறிய வண்ணம் இருக்கும். அதன் பொருள் நாம் எப்போதும் அதற்கேற்ற விதத்தில் மாற்றமடைந்து முன்னேறிச் செல்ல வேண்டும். நுகர்வோர் தங்களது சீரான வாழ்க்கை முறையை அடைய புதிய Coca-Cola Zero, மாற்றத்தினை ஏற்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” எனத் தெரிவித்தார். 

Coca-Cola Zero தற்பொழுது நாடு முழுவதும் உள்ள அனைத்து சுப்பர்மார்க்கட்களிலும், விற்பனை நிலையங்களிலும் 400மி.லி. போத்தல்களில் கிடைக்கப்பெறும். 


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: