இலங்கையின் நெருக்கடி பற்றி MAS Holdings விடுக்கும் அறிக்கை

Home » இலங்கையின் நெருக்கடி பற்றி MAS Holdings விடுக்கும் அறிக்கை
Share with your friend

அமைதி வழி ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றுவதற்கும், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கும் இலங்கைப் பிரஜைகள் கொண்டுள்ள உரிமைகளை ஆதரிக்கும் விதத்தில், MAS ஆனது கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி அறிக்கையொன்றை விடுத்தது. 

அதன் தொடர்ச்சியாக நிகழும் சம்பவங்களுக்கு மத்தியில், சமகால சமூக, பொருளாதார நெருக்கடியை அமைதியாகவும், நிலைபேறான வகையிலும் தீர்ப்பதற்கு துரிதமானதும், தீர்க்கமானதுமான நடவடிக்கையின் அவசியத்தை MAS மீள வலியுறுத்துகிறது. ஒரு பொறுப்புள்ள ஸ்தாபனம் என்ற ரீதியில், மாற்றத்திற்கும், நல்லாட்சிக்காகவும் விடுக்கப்படும் அழைப்பை நிபந்தனையின்றி ஆதரிப்பதோடு, சட்டத்தையும், அரசியல் யாப்பிற்கு உட்பட்ட நடைமுறைகளையும் மதிப்பதுடன், மக்களின் குரலுக்கு கண்ணியம் கொடுத்து, அதற்கமைய நடவடிக்கை எடுக்குமாறு தேசத்தின் தலைவர்களிடம் அக்கறையுடன் கேட்டுக் கொள்கிறோம். 

இலங்கையின் தனியார்த்துறையில் ஆகக்கூடுதலானவர்களை வேலைக்கு அமர்த்திய, ஆகக்கூடுதலாக ஏற்றமதி செய்யும் நிறுவனமென்ற ரீதியில், நாட்டின் பொருளாதார ஸ்திரநிலையைப் பேணுவதில் எமக்குள்ள வகிபாகத்தையும் MAS நுண்மையாக புரிந்து கொண்டுள்ளது. இந்த விடயத்தில், எமது வாடிக்கையாளர்களுக்கான கடப்பாடுகளை தங்குதடையின்றி நிறைவேற்றி, எமது சகாக்கள் 92,000 பேரினதும், அவர்களது குடும்பத்தவர்களதும், நாட்டினதும் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதன் மீது கவனம் செலுத்துவது முக்கியமானது. 

எமது வரலாற்றின் மிகவும் கொந்தளிப்பான, முக்கியமான தருணங்களில், ஆடையுற்பத்தித் துறையானது இலங்கைப் பொருளாதாரத்திற்கு உயிரூட்டுவதாகத் திகழ்ந்துள்ளது. நாம் ஒன்றாக இருந்து, இந்த நெருக்கடியில் இருந்து மீண்டெழுந்து, எமது நாட்டை மென்மேலும் சிறப்பானதாகக் கட்டியெழுப்பக் கூடிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எமக்குத் தொடர்ந்தும் உண்டு. எப்போதும் போல, இந்தக் கடினமான சந்தர்ப்பத்தில், நெருக்கடியின் மூலம் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக் கூடிய சமூக நலத் திட்டங்கள் ஊடாக எமது சமூகங்களுக்கு MAS குழுமம் உதவி செய்து வருகிறது. 

திடமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு சகல இலங்கையர்களையும் வாழ்த்துகிறோம். 

மாற்றம் என்பது ஊக்கமாகும். 

இப்படிக்கு 

MAS Holdings


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: