உலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு

Share with your friend

இலங்கையின் மாபெரும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மனித வளங்கள் ஆற்றல் அபிவிருத்தி பயிற்சி வழங்குநரான ​Trainocate Holdings, 2021 ஆம் ஆண்டின் Microsoft பயிலல் பங்காளராக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பெருமைக்குரிய கௌரவிப்பைப் பெற்றுக் கொண்ட ஆசியாவின் முதலாவது நிறுவனமாக Trainocate Holdings திகழ்கின்றது.

புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான தீர்வுகளை Microsoft தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறுவும் பங்காளர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் Microsoft இன் வருடாந்த சர்வதேச விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகின்றது. 100 க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த பங்காளர்களின் சிறந்த பங்களிப்புகளை கௌரவிப்பதுடன், இதில் பல பிரிவுகள் அடங்கியுள்ளன. பங்காளர் திறமைகள், cloud to edge தொழில்நுட்பங்கள், தொழில்முயற்சியாளர் முயற்சி, மற்றும் சமூகத் தாக்கம் போன்றனவும் அடங்குகின்றன. இந்த ஆண்டில் காணப்பட்ட பல சவால்களுக்கு மத்தியிலும், Trainocate தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்ததுடன், இந்த விருதுகளுக்காக கிடைத்திருந்த 4400 க்கும் அதிகமான விண்ணப்பங்களிலிருந்து Trainocate தெரிவு செய்யப்பட்டிருந்தது.

Trainocateஸ்ரீ லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி சஃபாருல்லா ஹாஷிம் கருத்துத் தெரிவிக்கையில், “வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தில், இந்தப் பெருமைக்குரிய கௌரவிப்பைப் பெற்றுக் கொண்ட ஆசியாவின் முதல் நிறுவனம் மற்றும் நாடு எனும் பெருமையை நாம் பெற்றுள்ளமை உண்மையில் எமது கடின உழைப்பு மற்றும் Trainocate அணியினரின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கு கிடைத்த கௌரவமாக அமைந்துள்ளது. Microsoft உடன் கைகோர்த்து, எமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு நிறுவனசார் வெற்றிகரமான செயற்பாடுகளை எய்துவதற்கு உதவிகளை வழங்குகின்றோம். Microsoft அடிப்படையிலான பயிற்சித் தீர்வுகள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு எமது அர்ப்பணிப்பை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் இந்த விருது அமைந்திருப்பதுடன், முன்னணி Microsoft பங்காளராக எமது சேவை வலையமைப்பை விஸ்தரிப்பதற்கு உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.

1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Trainocate நிறுவனம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தனது ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்து, நவீன தொழில்நுட்பம் மற்றும்  துறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாடவிதானம் மற்றும் சான்றிதழ் கற்கைகளில் பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. தற்போது 14 நாடுகள் மற்றும் 26 அமைவிடங்களில் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ள நிறுவனம், Analytics, Artificial Intelligence, Big Data, Cloud Computing, Data Science, Dev Ops மற்றும் Machine Learning போன்றவற்றில் நிபுணர்களுக்கு தொழில் வாய்ப்புகளையும் திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவியாக அமைந்திருந்தது.

Axiata Digital Labs இன் மனித வளங்கள் – பயிலல் மற்றும் விருத்திப் பிரிவின் தலைமை அதிகாரி ரித்மி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “Axiata Digital Labs (ADL) இந்த ஆண்டின் முற்பகுதியில் Trainocate இல் பங்காண்மையை ஏற்படுத்தியிருந்தது. ஐந்து மாதங்களினுள் 200 க்கும் அதிகமான ADL ஊழியர்களுக்கு Microsoft Azure சான்றைப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. Trainocate என்பது நிபுணத்துவமான சேவை வழங்குநராக அமைந்திருந்ததுடன், எமக்கு பரிபூரண பயிற்சித் தீர்வுகளை வழங்கி எமது தேவைகளையும், நோக்கத்தையும் நிவர்த்தி செய்து கொள்ள பங்களிப்பு வழங்கியிருந்தது. பங்குபற்றுநர்களிடமிருந்து நாம் தொடர்ச்சியாக சிறந்த விமர்சனங்களைப் பெற்றிருந்ததுடன், அவர்களுடன் பணியாற்றுவது என்பது எந்தளவுக்கு இலகுவானது மற்றும் நெகிழ்ச்சியானது என்பதைப் பற்றி தொடர்ச்சியாக தெரிவித்திருந்தனர்.” என்றார்.

துறையில் 25 வருடங்களுக்கு மேல் அனுபவத்தைக் கொண்டுள்ள Trainocate அங்கீகாரம் பெற்ற பங்காளர் நிலையை அனுபவிப்பதுடன், முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநர்களான AWS, Cisco, CompaTIA, Google Cloud Platform, Microsoft, NetApp, IBM, Red Hat, Trend Micro, VMware மற்றும் பல நிறுவனங்களுடன் பங்காண்மையையும் பேணுகின்றது. Trainocate இன் துறையில் சான்றளிக்கப்பட்ட பயிற்சியில் 2000க்கும் அதிகமான கற்கைகள் அடங்கியுள்ளன. சில கற்கைகள் பரந்த செயற்பாட்டு சேவை வழங்குநர்களின் ஆற்றல்களுக்கமைய வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சேவை வழங்குநர்களுடன் தாமும் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்றனர். பயிற்சித் தேவை பகுப்பாய்வுகளுடன், Trainocate அதன் வாடிக்கையாளர்களுடன் பணியாற்றுவதுடன், ஒவ்வொரு வாடிக்கையாளரினதும் முழு ஆற்றல் திறமையை இனங்காண்பதற்கு உதவியாக அமைந்துள்ளது.

Trainocate பற்றி

முன்னணி பயிற்சிகள் சான்றளிப்புகளை வழங்கும் துறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறுவனமாக Trainocate திகழ்கின்றது. நிபுணர்களுக்கு தமது தொழில்நிலை முன்னேற்றத்தை துரிதப்படுத்திக் கொள்வதற்கு உதவுகின்றது. துறையில் 25 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளது. இலங்கையில் Microsoft இன் அங்கீகாரம் பெற்ற பயிற்சிப் பங்காளராக Trainocate திகழ்வதுடன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வியாபாரத் துறையில் தொழில்நுட்பப் பங்காளராகவும் அமைந்துள்ளது.

Trainocate ஐ on LinkedIn, Instagram மற்றும் Facebook இல் பின்தொடரவும்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply