கணினியியல் முன்னேற்றம் மற்றும் ஆராச்சியை ஊக்குவிக்கும் வகையில் பூர்த்தியடைந்த SLIIT ICAC 2022

Share with your friend

தேசிய பொருளாதார செழிப்பை நோக்கி கணினியியலின் முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பது என்ற சாதகமான குறிப்பிடன் கணினியியல் முன்னேற்றம் தொடர்பான 04வது சர்வதேச மாநாடு 2022 (ICAC) முடிவடைந்தது.

தொடர்ச்சியாக நான்காவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ICAC 2022 டிசம்பர் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்ததுடன், SLIIT இன் கணினிப் பீடம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. கணினி விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற களங்களில் சமீபத்திய கண்டுபிடிப்புக்கள், ஆராய்ச்சி வெளியீடுகளை முன்வைத்து தொழில் வல்லுனர்களுடன் கல்வியாளர்களுக்கு ஒரு திறந்த தளமொன்றை ஏற்படுத்துவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

இந்த நிகழ்ச்சியை உயிரூட்டும் வகையில் Center of Excellence in Cybersecurity Research, Education, and Outreach (CREO) இன் பணிப்பாளர் பேராசிரியர் ஹொசேன் சராஃப்சடேன், தற்போதைய உலகளாவிய விடயங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவமான விடயங்களில் காணப்படும் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், உலகளாவிய ரீதியில் காணப்படும் ஆபத்தைக் குறைப்பதற்கான ஆய்வுகள் பற்றி பிரதான உரை நிகழ்த்தினார். ‘சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல், வாய்ப்புக்கள் மற்றும் ஆய்வு, கல்வியில் சாதகமான சர்வதேச ஒத்துழைப்பு’ என்பது அவருடைய தலைப்பாக அமைந்தது. 

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் மற்றும் மின்னியல் பொறியியல் திணைக்களத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜனக பண்டார ஏகநாயக்க, ‘சூரிய எதிர்காலத்துக்கான தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு’ என்ற தலைப்பில் சூரிய சக்தியைக் கொண்ட எதிர்காலத்தில் காணப்படும் தடைகள், தீர்வுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் தீர்வுகள் பற்றி உரையாற்றினார். 

இந்த வருட மாநாட்டில் உள்நாடு மற்றும் சர்வதேச ஆய்வாளர்களிடமிருந்து 270 கையெழுத்துப் பிரதிகள் கிடைத்திருந்தன.

இந்தக் கையெழுத்துப் பிரதிகள் தகவல் விஞ்ஞானம் மற்றும் தகவல் மையான அணுகுமுறை, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்கை, கணினி எதிர்காலம், தொடல்பாடல் மற்றும் வலையமைப்பு சேவைகள், சைபர் பாதுகாப்பு,  தன்னியக்க நுண்ணறிவு இயந்திரங்கள் மற்றும் அமைப்புகள், தொழில்நுட்பம்-மேம்படுத்தப்பட்ட கற்றல், தகவல் அமைப்புகள் மற்றும் வணிகம் மற்றும் சமூகத்திற்கான கணினி போன்ற ஒன்பது விடயங்களில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. 

உள்நாட்டு மற்றும் சர்வதேச விடயங்களில் நன்கு அனுபவம் வாய்ந்த 150 மதிப்பாய்வாளர்களால் இந்த ஆய்வுப் பத்திரிகைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. மதிப்பாய்வு நடவடிக்கைகள் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டதுடன், ஆய்வுப் பத்திரிகைகளை மேலும் மெருகூட்டும் வகையில் மதிப்பாய்வாளர்கள் ஆய்வாளர்களுக்கு சிறந்த வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர். 

முதிப்பாய்வு நடவடிக்கையின் பின்னர் 85 கைப்பிரதிகள் மாநாட்டு தினத்தன்று வாய்மூல சமர்ப்பிப்பிற்காகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தன.

வினைத்திறனான செயலமர்வின் ஊடாக இந்த மாநாடு மேலும் கற்றும் வாய்ப்புக்களை வழங்கியிருந்தது. அனுபவம் மிக்க கல்வியியலாளர்களால் நடத்தப்பட்ட நான்கு இலவச செயலமர்வுகளின் ஊடாக மாநாட்டுத் தலைப்புத் தொடர்பில் தனித்துவமான கல்வி அறிவு வழங்கப்பட்டது.

இந்த மாநாடு வெற்றியடைவதற்கு மற்றும் ஆகியோர் அனுசரணை வழங்கியிருந்தனர். IEEE இன் இலங்கைக் கிளையும் இச்செயற்பாட்டுக்கு உதவியிருந்தது. 


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply