கொள்ளை நோய்க்குப் பின்னர் எதிர்காலம்; மருந்து துறையில் வேலை வாய்ப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன

Share with your friend

மருந்துத் துறையின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மருந்து நிறுவனங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றதுடன் புதிய விதிமுறைகளுக்கு ஏற்றவாறு அவர்களின் மருந்து முகவர்களின் பங்கை மறுபரிசீலனை செய்வதற்கு கொவிட்-19 தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட நிலைமைகள் மருந்து நிறுவனங்களை ஊக்கப்படுத்தியுள்ளன.

இலங்கையில் தற்போது 3,500க்கும் மேற்பட்ட மருந்து முகவர்கள் உள்ளனர், தற்போது அவர்கள் சுகாதார நிபுணர்களுக்கு மருந்து தயாரிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். புதிய மருந்து தயாரிப்புகளை சந்தையில் அறிமுகப்படுத்துவதில் அவர்கள் முக்கிய இடைத்தரகர்களாக பணியாற்றுகிறார்கள்.

கொவிட்-19 பரவுதல் குறைந்து வருவதற்கான அறிகுறிகளைக் காட்டாத நிலையில், பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தல்கள் காரணமாக இந்த ஆண்டு விதிக்கப்பட்ட பழைய விற்பனை மாதிரி அகற்றப்பட்டது என்பது தெளிவாகிறது, மேலும் விற்பனைப் முறைகள் அதற்கேற்ப மாற்றியமைக்க வேண்டும்.

Online தொழில்நுட்பத்தின் மூலம் தொடர்புகொள்வது புதிய இயல்பாக்கமாக மாறும்

உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் மருந்து நிறுவனங்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான சவால் சுகாதார நிபுணர்களுடன் நேருக்கு நேர் சந்தித்திப்பதற்கான தொடர்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதனால் ஆகும்

சன்ஷைன் ஹெல்த்கேரின் தலைமை நிர்வாக அதிகாரி சாந்த பண்டார கூறுகையில், ஒரே நாளில் ஒருவரையொருவர் சந்திப்பதற்கும் பதிலாக Online இணைப்புகளுடன் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பல நிறுவனங்களில் அவரது நிறுவனமும் ஒன்றாகும்.

“சுகாதார சேவை வழங்குநர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான கட்டுப்பாடுகள் மருந்து விற்பனையாளர்கள் வகிக்கும் பங்கில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு முன்னர் இருந்த விதத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் இலகுவாக இருந்த போதிலும் மருந்து துறையைச் சார்ந்தோர் அதற்கேற்ற விதத்தில் தங்களை மாற்றிக்கொள்வது அவசியம் என கொவிட்-19 தொற்றுநோய் உறுதிப்படுத்தியுள்ளது.” என பண்டார தெரிவித்தார்.

சுகாதார பிரிவு நிபுணர்களுடனான மட்டுப்படுத்தப்பட்ட தொடர்பு காரணமாக விற்பனையின் நேரடி பாதிப்பு குறித்து பண்டாரா கூறுகையில், பிரதேச ரீதியிலான தனிமைப்படுத்தல் மக்களின் வாழ்க்கைமுறையில் மாற்றத்தைக் ஏற்படுத்தியுள்ளதுடன், மேலும் மருந்துகள் ஒரு முக்கிய காரணியாகும் என்பதையும் தெளிவாக்கியுள்ளது.

“கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் இருந்தபோதிலும், தற்போதுள்ள நாட்பட்ட நோய்கள் மற்றும் அதற்கு உரிய மருந்துகளைப் பெற்றுக் கொள்ளும் பிரிவுகளில் மருந்து விற்பனையில் எந்த வீழ்ச்சியும் ஏற்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.” மற்றும் தொற்றுநோயற்ற நோய்களுக்கான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.”

ஒரு தொற்றுநோய்க்குப் பின்னர் எதிர்காலத்தில் மருந்து நிறுவனங்கள் எவ்வாறு வழமைக்கு திரும்ப முடியும்? கொவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர், உலகளவில் 64% மக்கள் சுகாதார நிபுணர்களுடன் தனிப்பட்ட சந்திப்புகளைக் கொண்டிருந்தனர். இது தற்போது பாதியாகிவிட்டது, அதற்கு பதிலாக அவை ஆன்லைன் தளங்களுக்கு மாற்றமடைந்திருப்பதாக தெரிகிறது.

“மருந்து முகவர்களின் பங்கு தனிப்பட்ட திறன்களை மட்டுமல்ல, தொழில்நுட்ப திறன்களையும் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அத்துடன் முக்கியமாக செய்யவேண்டிய நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக ஆபத்தான வர்த்தகச் சூழல்களுக்கு ஏற்றவாறு மாறுவது மற்றும் அதுகுறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கு தேவையான தலைமைத்துவ தகைமைகள் மூலம் அவர்கள் தயார் நிலையில் இருப்பது முக்கியம்.” என அவர் வலியுறுத்தினார்.

மருந்து நிறுவன முகவர்கள் மற்றும் தாதியர்கள் மற்றும் சுகாதார சேவை நிபுணர்கள் போன்ற முக்கிய பங்குதாரர்களிடையே B2B தொடர்புகளை அனுமதிக்கும் ஒரு அமைப்பை உருவாக்குவதன் மூலம் உறவை வலுப்படுத்த முடியும் எஎன பண்டாரா கூறினார். இந்த நோக்கத்திற்காக, சன்ஷைன் பார்மாசூட்டிகல்ஸ், அதன் விற்பனை பிரதிநிதிகளுடன் இணைந்து, இந்த அமைப்பை ஆதரிக்க அண்மையில் ‘I-order’ என்ற செயலியை (App) அறிமுகப்படுத்தியது.

மனித தொடர்புகளைப் பேண முடியாதுள்ளது

200 க்கும் மேற்பட்ட மருந்து முகவர்களைப் பயன்படுத்தும் CIC ஹோல்டிங்ஸின் கதையானது, நாட்டின் பல மருந்து நிறுவனங்களின் கதைகளைப் போலவே புதிய பொதுமைப்படுத்தலாக மாற்றப்பட்டு வருகிறது. மருந்துகள் மற்றும் சந்தைப்படுத்தல் பிராந்திய பணிப்பாளர் விராஜ் மனதுங்க கூறுகையில், இது நீண்ட காலமாக மாற்றத்தின் பயணமாக இருந்து வருகிறது, வெவ்வேறு சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வது போன்ற மாற்றங்கள் இடம்டபெற வேண்டும். ஆனால் அதை எவ்வாறு திறம்பட செய்வது என்பதுதான் பிரச்சினை என தெரிவித்தார்.

“மருந்து முகவர்களின் பங்களிப்பை டிஜிட்டல் தளங்களின் பயன்பாட்டால் எளிதில் மாற்ற முடியாது, ஏனெனில் அவை சுகாதார அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடுமையான நோய்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் போன்ற இரு பிரிவுகளுக்கான புதிய மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் பற்றிய தகவல்களைப் வெளியிடுவதில் மற்றும் சிறந்த மருந்து தயாரிப்புக்களால் நோயாளியின் ஆரோக்கியம் எவ்வாறு இருக்கும் போன்ற தீர்மானம் மிக்க சேவையை வழங்கும் தனிப்பட்ட தொடர்புகளை கேந்திரமாகக் கொண்டே இது அமைகின்றது.” என மனதுங்க சுட்டிக்காட்டினார்.

“ஒரு நிறுவனம் என்ற வகையில், எங்களது உள்ளக நிர்வாக செயல்முறைகளை ஆன்லைனில் ஒருங்கிணைக்க முடிந்தது. இது எங்கள் செயல்முறைகளின் செயல்திறனையும் உற்பத்தித்திறனையும் அதிகரித்துள்ளதால் நாம் அடைந்த ஒரு பெரிய சாதனை. எவ்வாறாயினும், இரட்டை இயங்குதளத்தைப் பயன்படுத்தி சமீபத்திய சிகிச்சைகள் மற்றும் தயாரிப்புகள் குறித்து சுகாதார நிபுணர்களுக்கு தெளிவுபடுத்தும் போது ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதுடன் மேலும் இலங்கை அந்தத் துறையை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது என நான் நம்புகிறேன்.” என அவர் கூறினார்.

கலப்பு மற்றும் மேம்பட்ட வர்த்தக மாதிரிகளில் வித்தியாசத்தை ஏற்படுத்துதல்

மருந்துத் துறை ஒரு போட்டித் துறையாகும். அண்மையில் ராய்ட்டர்ஸ் நடத்திய கணக்கெடுப்பின்படி, சுகாதார நிபுணர்களின் பணிகளை விரைவாக டிஜிட்டல் மயமாக்குவது ஒரு மருந்து முகவரின் பங்கை டிஜிட்டல் மற்றும் நேருக்கு நேர் கலவையாக மாற்ற விரைவாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கண்டறியப்பட்டது. தொலைநிலை அல்லது தொலைபேசி அணுகல், வெபினார், ஆன்லைன் சந்திப்புகள், மின்னஞ்சல், retailer supplier automation மற்றும் விநியோக சங்கிலி நடவடிக்கைகளின் இறுதி கட்டங்கள் ஆகியவை தொற்றுநோயை சமாளிக்க மிகவும் பயனுள்ள வழிகள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து Baurs Life Sciencesன் இயக்குனர் கெஹன் செனவிரத்ன, “நாடு முழுமையாக முடக்கப்பட்ட ஆரம்பத்தில், நேருக்கு நேர் தொடர்புகளை பராமரிப்பது போன்ற பாரம்பரிய முறையில் இதைச் செய்யும் நபர்களின் பங்கை எவ்வாறு மாற்றியமைப்பது என்று நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம், அதன்படி, ஒரு மருத்துவரிடம் ஆலோசனையைப் பெறுவது மட்டுமன்றி ஒரு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை வாங்கவும் ஒரு நோயாளியை குணப்படுத்தக்கூடிய ஒரே தீர்வு டிஜிட்டலுக்கு செல்வதுதான் என்று இதன்போது தெளிவாகத் தெரிந்தது..” என அவர் கூறினார்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply