சுவிட்சர்லாந்தின் சேதன விவசாய நிபுணர்களுடன் அரசாங்க உயரதிகாரிகள் மற்றும் பெருந்தோட்டத் துறை அமைச்சர் கலந்துரையாடல்கள் முன்னெடுப்பு

Share with your friend

சேதன விவசாய நடவடிக்கைகளில் நிபுணர்களாக அறியப்படும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தூதுக்குழுவினர், இலங்கையின் பெருந்தோட்டத் துறை அமைச்சர் கலாநிதி. ரமேஷ் பத்திரன மற்றும் அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரன ஆகியோருடன் ஆகஸ்ட் 6 ஆம் திகதி சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின் போது, பெருந்தோட்டத்துறையை மேம்படுத்துவது தொடர்பான நாட்டின் நோக்கம், சேதன உர சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் தமது கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். 

இந்த அறிவுப் பகிர்வு அமர்வின் போது, பல வினாக்களை அமைச்சர் கேட்டதுடன், சேதன உரக் கட்டமைப்பை பின்பற்றுவதனால் எழக்கூடிய பிரதான சவால்கள் பற்றியும் குழுவினருடன் கலந்துரையாடியிருந்தார். நாட்டின் பொருளாதாரத்தின் பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த பயிர்கள் பெருமளவு பங்கை வகிப்பதுடன், ஏற்றுமதியிலும், ஊழியர்களிலும் அதிகளவு பங்கைக் கொண்டுள்ளது. தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு உற்பத்திகளுக்கான பிரதிப் பணிப்பாளர் கீர்த்தி எம்.மொஹொட்டி இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

திறன்கள் விருத்தி, தொழிற்கல்வி, ஆய்வு மற்றும் புத்தாக்கம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல மற்றும் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பொறியியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியருமான NIFS இன் இடைக்கால பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் ரஞ்சித் டி சில்வா ஆகியோருடன்  Zoom வாயிலாக மெய்நிகர் சந்திப்புகளையும் நிபுணர்கள் குழுவினர் அன்றைய தினம் மேற்கொண்டிருந்தனர்.

இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சில்வா, பாரம்பரிய உரப் பாவனையிலிருந்து சேதன விவசாய வழிமுறையைப் பின்பற்றச் செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகள் தொடர்பான விளக்கங்களை பகிர்ந்திருந்தார். இதில், இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம் தொடர்பில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட உரிய கால தீர்மானங்கள் பற்றிய விளக்கங்களும் அடங்கியிருந்தன.

சேதன உரத்தின் பாவனையை ஊக்குவித்தல் மற்றும் உற்பத்தி தொடர்பில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க மற்றும் மேலதிக செயலாளர் மஹேஷ் கம்மன்பில ஆகியோருடன் நிபுணர்கள் குழுவினர் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர். எதிர்வரும் பெரும் போகத்துக்காக பின்பற்றப்படும் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான கொள்கைகள் மற்றும் தந்திரோபாயங்கள் பற்றிய விளக்கங்களை உத்தியோகத்தர்கள் விளக்கங்களை வழங்கியிருந்தனர். சுபீட்சமான எதிர்காலம் எனும் தேசிய கொள்கையின் பிரகாரம், ஆரோக்கியமான தேசத்தைக் கட்டியெழுப்பும் பயணம் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளது.

உள்நாட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி மற்றும் விவசாய நிபுணரான சந்தன ஹேவாவசம் உடனும் அவர்கள் சந்திப்பை மேற்கொண்டிருந்ததுடன், இலங்கையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பிரதித் தூதுவர், GIZ ஸ்ரீ லங்கா அதிகாரிகளுடனும் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தனர். 

இந்த நிபுணர் குழுவினர் பத்து நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர்களை ஏ.பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட் ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வந்திருந்தது. நாட்டின் ஒட்டுமொத்த விவசாயக் கட்டமைப்பைப் பற்றி ஆராய்வது மற்றும் சேதன விவசாய முறைமையை பின்பற்றுவதற்கு விஞ்ஞான ரீதியில் தயார்ப்படுத்துவது மற்றும் வழிகாட்டல்களை வழங்குவது போன்றன இந்த நிபுணர் குழுவின் விஜயத்தின் நோக்காக அமைந்துள்ளன.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply