திறமையான கல்வியை வழங்குவது என்ற நோக்கத்தை தொற்றுநோய் சூழலில் தொடர்ந்தும் வழங்கி அடைந்துள்ள மைல்கல் சாதனயை அறிவிக்கும் SLIIT

Share with your friend

தொற்றுநோய் சூழல் உருவாகி பதினைந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், கொவிட்-19 இனால் தனித்துவமான சவால்கள் பல காணப்பட்டபோதும் 2020-2021 கல்வி ஆண்டில் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க வெற்றிகளை SLIIT இனால் பெருமையுடன் கொண்டாட முடியும்.

தேவையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி புதிய மெய்நிகர் சூழலை தழுவிக் கொள்வதற்கு SLIIT இன் ஒட்டுமொத்த சமூகத்தினரும் கடுமையாக உழைத்தனர். மாணவர்கள் வீடுகளிலிருந்து படிப்பதற்கும் பணியாளர்கள் வீடுகளிலிருந்து பணியாற்றுவதற்கும் அவசியமான கருவிகளின் ஊடாக அனைத்து பீடங்களும் தமது பாடநெறிகளை முழுமையாக நிகழ்நிலை அல்லது கலப்பு முறைக்கு மாற்றிக் கொண்டன.

சிறந்த கல்விக்கான அதன் நீண்டகால உறுதிப்பாட்டுடன், தொற்றுநோய் சூழலில் SLIIT புதிய பட்டப் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மனிதநேய மற்றும் விஞ்ஞான பீடத்தின் கீழ் உருவாக்கப்பட்ட SLIIT இன் புதிய கணிதப் பிரிவின் ஊடாக நிதியியல் கணிதம் மற்றம் பிரயோக புள்ளிவிபரவியலில் (FMAAS) இல் BSc பட்டம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக நிதித்துறையில் உள்ளவர்களுக்கு கணிதம் மற்றும் பிரயோக புள்ளிவிபரவியல் குறித்த நடைமுறை அறிவை வழங்குவதற்கும், நிதி மற்றும் முதலீட்டுத் துறையில் உள்ளவர்களை வெற்றிபெறச் செய்வதற்கும் இந்தப் பட்டப் பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே இலங்கையில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான முதலாவது பட்டப் பாடநெறியாகும்.

தொற்றுநோய் சூழலில் அடையப்பெற்ற மற்றுமொரு மைல் கல்லாக SLIIT இன் புதிய கல்வியியல் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா அமைந்துள்ளது. கல்வித்துறையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இத்துறையில் சிறந்த முன்னேற்றத்தைக் கொண்டுவருவதற்கான கருவிகள் மற்றும் திறன்களை இது வழங்குகிறது. இதற்கு மேலதிகமாக, SLIIT இன் கட்டடக்கலைப் பள்ளியால் ஐக்கிய இராச்சியத்தின் பெருமைக்குரிய Liverpool John Moore University (LJMU) பல்கலைக்கழகத்துடன் இணைந்து உள்ளக வடிவமைப்புத் துறையில் BA பட்டத்தை அங்குரார்ப்பணம் செய்யவுள்ளது. இப்பாடநெறியானது இலங்கை மற்றும் இப்பிராந்தியத்தில் வளர்ச்சியடைந்துவரும் உள்ளக வடிவமைப்புத் துறையில் முன்னணியாளர்களாகத் திகழ்வதற்கான வர்த்தக ஆலோசனை மற்றும் காட்சிப்படுத்தல்களை வழங்கவும், உள்ளக வடிவமைப்புத் தொடர்பான திறன்களை மாணவர்களுக்கு வழங்கக்கூடியதாகவும் இருக்கும்.

ஆய்வுகளில் திறமையைக் காட்சிப்படுத்தும் நோக்கில் கணினியியல் முன்னேற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டை (ICAC 2020) கடந்த 2020 டிசம்பரில் SLIIT ஏற்பாடு செய்திருந்தது. உலகத்தின் புத்தாக்கத்துக்கு தம்மை வெளிப்படுத்த விரும்பும் ஆய்வாளர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தவும் உள்நாட்டிலும் உலகத்திலும் உள்ள தொழில்துறைகளுடன் தமது திறன்களைப் பகிர்ந்துகொள்ளவும் இது சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

புதிய சூழலுக்கு ஏற்ற வகையில் இந்த வருடம் மார்ச் மாதத்தில் SLIIT தனது 24வது பட்டமளிப்பு விழாவை நடத்தியது. கௌரவ நீதி அமைச்சர் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதனைவிடவும் மிகவும் பிரபல்யமான நபர்கள் பலரும் வருடாந்த பட்டமளிப்பின் ஏனைய அமர்வுகளில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர். சமூக இடைவெளி மற்றம் கொவிட் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

கம்பஸ் வாழ்க்கை மற்றும் சர்வதேச வெளிப்பாடுகளுக்கான அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் மெய்நிகர் அனுமதிப்பு தின தொடரொன்றை SLIIT ஏற்பாடு செய்திருந்தது. இங்கு காணப்படும் பாடநெறிகள் மற்றும் கல்விசார் ஊழியர்களை மெய்நிகர் முறையில் சந்திப்பதற்கு இது வாய்ப்பாக மைந்தது. பட்டதாரிகளுக்கான அனுமதிப்பு தினம், Curtin பல்கலைக்கழகத்தின் அனுமதிப்பு தினம், பட்டப்பின்படிப்புக்கான அனுமதிப்பு தினம் ஆகியவற்றைக் கொண்டதாக இவை அமைந்தன.

தொற்றுநோய் சூழல் காணப்பட்டாலும் இயற்கை அறிவியல், சட்டம், கல்வி, ஆங்கில மொழி மற்றும் இலக்கியம், தாதியியல் மற்றும் உளவியல் ஆகிய துறைகளில் சர்வதேச ஆராய்ச்சியாளர்களை குறிவைத்து, பலதரப்பட்ட ஆராய்ச்சிகளைக் காண்பிக்கும் மனிதநேயம் மற்றும் விஞ்ஞான பீடத்தின் தொடக்க ஆண்டு ஆராய்ச்சி மாநாடு, மாணவர்களினால் சிறந்த மென்பொருள்கள் தயாரிக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட் போட்டியான Codefest 2020 மற்றும் SLIIT இன் வர்த்தக பள்ளியால் மேற்கொள்ளப்பட்ட Soft Skills+ 2021சமூக கூட்டுப்பொறுப்புத் திட்டம் என்பன முன்னெடுக்கப்பட்டன. இரண்டாம் நிலை பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த தனிநபர்கள் தங்கள் மென்மையான திறன்களை மேம்படுத்த, குறிப்பாக நேர்மறையான சிந்தனை, படைப்பாற்றல், பகுப்பாய்வு சிந்தனை, தலைமைத்துவ திறன்கள், சிக்கலைத் தீர்க்கும் திறன், தகவல் தொடர்பு திறன் மற்றும் குழுப்பணி ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்ட Soft Skills+ சிறந்த நிகழ்ச்சியாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது.

தீவு முழுவதிலும் உள்ள இளம் மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையில் ‘சிப் சவிய’ என்ற தலைப்பில் நூதனமான பாடசாலை அடைவுத் திட்டத்தை SLIIT முன்னெடுத்திருந்தது. மாணவர்களின் எதிர்கால துறைசார் பயணத்துக்குத் தேவையான திறன்களை முன்னேற்றும் வகையில் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களின் ஈடுபாடை அதிகரிக்க கொவிட் காரணமாக தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை SLIIT அதியுச்ச அளவில் அதிகரித்திருந்தது. சிப் சவிய திட்டத்தின் ஊடாக 25,000 மாணவர்கள் மெய்நிகராக இணைந்தனர்.

ஐக்கிய இராச்சியத்தின் Liverpool John Moore பல்கலைக்கழகத்துடன் பட்டப்பின்படிப்பு மெய்நிகர் மாலையொன்றை SLIIT இன் சர்வதேச கல்வி வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. தொற்றுநோய் காரணமாகப் பல்வேறு தடைகள் மற்றும் சவால்கள் காணப்பட்டாலும் ஐக்கிய இராச்சியத்தில் உயர்கல்வியைத் தொடரவேண்டும் என்ற மாணவர்களின் கனவைத் தொடச்செய்வதே இதன் பிரதான நோக்கமாக அமைந்தது.

SLIIT இன் வர்த்தக பள்ளியின் நான்கு மாணவர்கள் கணக்கியல் மற்றும் நிதியியல் ஆகியவற்றில் உலகின் பெயர்பெற்ற சஞ்சிகைகளில் இரண்டு கட்டுரைகளைப் பிரசுரித்திருந்தமை எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ‘நாள்பட்ட நோய்கள் மற்றும் வறுமை ஆகியவை கைகோர்த்துச் செல்கின்றனவா? ‘மற்றும் நாட்பட்ட நோய்கள்: நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வருமானம் மற்றும் செலவீனத்துக்கு இது மேலதிக சுமை’ என்ற தலைப்புக்களில் இவை அமைந்திருந்தன. இது இளங்கலை மட்டத்தில் சாதனையாக அமைகிறது.
மாணவர்களின் திறனை மேலும் வளர்ப்பதற்கு இன் வர்த்தகப் பள்ளி தொடர்ச்சியாக சிறப்பு பிரதிநிதிகளின் விரிவுரைகளை மெய்நிகர் முறையில் ஏற்பாடு செய்திருந்தது. தமது துறைகளில் பிரசித்தி பெற்றவர்களே இந்த விரிவுரைகளை வழங்கியதுடன், தமது அனுபவம் மற்றும் படிப்பினைகளை மாணவர்கள் கேட்பதற்கு வழிகோலியிருந்தது.

COVID-19 காரணமாக SLIIT ற்கும் உலகளாவிய ரீதியில் உள்ள ஏனைய மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் எதிர்பார்க்கமுடியாத ஆண்டாக 2020ஆம் ஆண்டு அமைந்திருந்தபோதும், அர்ப்பணிப்பு, படைப்பாற்றல் மற்றும் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரிடமும் காணப்பட்ட உணர்வு காரணமாக 2021ல் தொற்றுநோயின் சவாலை SLIIT வெற்றிகரமாக முகங்கொடுத்து வருகிறது. கடந்த வருடமும் 2021ஆம் ஆண்டின் ஆறு மாதங்களும் பல்வேறு வெற்றிக் கதைகளையும், குறிப்பிடத்தக்க மைல்கல்களையும் SLIIT இற்கு காண்பித்திருப்பதுடன், இதன்மூலம் உயர் கல்வியில் இதன் தலைமைத்துவம், புத்தாக்கம், சிறப்பு மற்றும் எதிர்வினையாற்றும் தன்மை என்பன பறைசாற்றப்படுகின்றன.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply