தொழில் வாய்ப்பு மற்றும் கல்விசார் குறிக்கோள்களை மேம்படுத்துவதற்கான கண்ணோட்டத்தை வழங்கிய முதுகலை SLIIT மெய்நிகர் அனுமதிப்பு தினம் 2021

Share with your friend

SLIIT முதுகலை மாணவர்கள் அவர்களின் தொழில்சார் திறமை மற்றும் தலைமைத்துவம் என்பவற்றுக்காக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அங்கீகாரங்களைப் பெற்றுள்ளனர். பல்வேறு பட்டதாரிகள் முன்னணியான கம்பனிகளில் புகழ்பெற்ற பிரதம நிறைவேற்று அதிகாரிகளாகவும், இலங்கையில் தமது களங்களில் முன்னணி தொழில்சார் திறமையாளர்களாகவும் விளங்குகின்றனர்.

மார்ச் பட்டமளிப்பு விழாவில் SLIIT முதுகலை டிப்ளோமாவில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தியவர்கள்.

நாட்டுக்கும் அதற்கும் அப்பால் சேவையாற்றுவதற்கு பலமான பகுப்பாய்வு, விமர்சன சிந்தனையான ஆய்வு மற்றும் புத்தாக்கம், தொடர்பாடல் திறன்களைக் கொண்ட பட்டதாரிகளை உருவாக்குவதற்காக SLIIT இன் முதுகலை பாடநெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

MSc, MBA, MPhil மற்றும் PhD ஆகிய முதுகலைப் பட்டங்கள் குறித்து தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குவதற்காக முதுகலை மெய்நிகர் அனுமதிப்பு தினம் 2021ஆம் ஆண்டு ஜுன் 12ஆம் திகதி நடத்தப்பட்டது, பட்டக் கல்வி மற்றும் ஆய்வுக்கான பீடத்தின் பீடாதிபதி, கல்விசார் இணைப்பாளர்கள் ஆகியோர் ஆர்வம்மிக்க விண்ணப்பதாரர்களுடன் இந்நிகழ்வில் இணைந்துகொண்டனர்.

வாழ்நாள் கற்றல் பாதைக்கான தகவலிறந்த முடிவுகளை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட பீடங்களுடன் ஊடாட்டம் மிக்க கலந்துரையாடல்களுக்காக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், மெய்நிகர் அனுமதி நாள் ணழழஅ தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது. பாடநெறிகள் குறித்த தகவல்களை அவர்கள் பெற்றுக் கொண்டனர். இதற்கு மேலதிகமாக பாடநெறிகளுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள் மற்றும் மெய்நிகர் சுற்றுப்பயணம் ஆகியவற்றையும் அறிந்துகொண்டனர்.

SLIIT இன் MSc, MBA முதுகலை பட்டத் தெரிவுகள் தொழில் வாய்ப்புகள் மற்றும் வேறுபட்ட திறன்களுடன் தங்களை நிலைநிறுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், புதுமைக்கான போட்டி காணப்படும் பகுதிகளில் புத்தாக்கமான தீர்வுகளை வழங்குவதற்கான ஆராய்ச்சி தலைப்புகளில் பணியாற்ற உதவும் வகையில் ஆPhடை மற்றும் Phனு பட்டங்கள் காணப்படுகின்றன. வழங்கப்படும் அனைத்து பட்டங்களும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சினால் அனுமதிக்கப்பட்டவையாகும்.

தகவல் தொழில்நுட்பம், தகவல் முகாமைத்துவம், தகவல் முறைமை, சைபர் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெறுவதற்கான தகவல் தொழில்நுட்பம், தொழில்துறைகளுக்கான செயலிகளைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெறுவதற்கான தகவல் தொழில்நுட்பம் ஆகிய விடயங்களில் MSc மற்றும் முதுநிலை டிப்ளோமாக்களையும், வணிக நிர்வாகத்தில் முதுநிலை (MBA) மற்றும் கணினி, பொறியியல் துறையில் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட Master of Philosophy (MPhil), மற்றும் Doctor of Philosophy (PhD) ஆகிய பட்டங்களையும் SLIIT வழங்குகிறது.

முதுநிலை பட்டங்கள் SLIIT இன் பட்டக் கல்விப் பீடத்தினால் ஒருங்கிணைக்கப்படுவதுடன், புத்தாக்கம் மற்றும் அர்ப்பணிப்பு நிறைந்த பணியாளர்களால் மாணவர்களுக்கு சிறந்த ஆராய்ச்சி மற்றும் கற்றல் சூழலை வழங்கும் வகையில் ஆராய்ச்சிகள் காணப்படுகின்றன.

உலகளாவிய ரீதியில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் PhD பட்டத்தைக் கொண்ட 75 பேரை உள்ளடக்கிய கல்விசார் குழுவும், சிறந்த கல்விப் பின்புலத்துடன் துறைசார் நிபுணத்துவத்தைக் கொண்ட 300 பேர் அடங்கிய பலமான கல்விப் பணியாளர்களும் காணப்படுகின்றனர். பல விரிவுரையாளர்கள் கல்வியில் மட்டுமல்ல, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, தரமான உத்தரவாதத்துடன் வணிக முன்னோக்கு மற்றும் சர்வதேச தரங்களின் கண்காணிப்பு வழிமுறைகள் போன்றவற்றிலும் அனுபவத்தைக் கொண்டுள்ளனர்.

முதுகலை டிப்ளோமா MSc பட்டப் பாடநெறிக்கான வெளியேறும் தகைமையாகச் சேவையாற்றும். இதற்கு மேலதிகமாக, MSc, MBA பட்டக் கல்வித் திட்டங்கள் சந்தையின் இயக்கவியலைப் பிடிக்கவும், கல்வி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் அதன் எல்லைகளை விரிவுபடுத்தவும் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகின்றன.

இளமானிப் பட்டத்தைப் பூர்த்தி செய்தவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட துறைசார் தகுதியுடன் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவத்தைக் கொண்டவர்கள் இந்தப் பாடநெறிகளைத் தொடர்வதற்கான தகுதியைப் பெறுவர்.

முதுகலை அனுமதிப்பு தினத்தில் இணைந்துகொண்டவர்கள் மொத்தக் கட்டணத்தில் 15ம% கழிவைப் பெற்றுக்கொண்டனர். இதனைவிடவும், குழு பதிவுகளுக்கு 20 % கழிவும் (ஒரே இல் குழுவொன்றில் ஆகக் குறைந்தது 04 உறுப்பினர்கள்) ஏற்புடையதாகும். ஏதாவது ஒரு பாடநெறிக்குப் பதிவுசெய்யும் SLIIT இன் பழையமானவர்களுக்கு 10 மூ கழிவும் ஏற்புடையதாகும்.

முதுகலை பட்டங்கள் தொடர்பான மேலதிக தகவல்களை SLIIT இன் MSc மற்றும் MBA இணைப்பாளர்களிடமிருந்து (0777 6050 77/ 076 497 1716) அல்லது www.sliit.lk/gradute-studiesresearch என்ற இணையத்தளத்துக்கு விஜயம் செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply