நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையைச் சார்ந்த பெண்களுக்கு வலுவூட்டுகின்றது DFCC வங்கி

Share with your friend

நாட்டில் சொந்தக்காலில் நிற்கின்ற மற்றும் கடினமாக உழைக்கும் பெண்களுக்கு உரிய இனங்காணல் அங்கீகாரத்தை வழங்கி, அவர்களைப் போற்றும் ஒரு முயற்சியாக, DFCC வங்கியானது நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு வலுவூட்டும் நோக்குடன் பல்வேறு ஈடுபாட்டு தொடர் நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. தேயிலைச் செய்கை, அழகு பராமரிப்பு நிலைய முகாமைத்துவம், கறவைப்பசு வளர்ப்பு மற்றும் பொதுவான பயிர்ச்செய்கை போன்ற பல துறைகளில் கவனம் செலுத்தியுள்ள இந்த நிகழ்ச்சித்திட்டங்கள், அந்த துறைகளுடன் தொடர்புபட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு வலுவூட்டி, ஊக்குவித்து மற்றும் மேம்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டன.

DFCC வங்கியானது அந்தந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களின் துணையுடன் இந்த நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. தேயிலைச் செய்கைத் துறையில் ஈடுபட்டுள்ள பெண்கள் தேயிலை சிறுதொழில் அபிவிருத்தி அதிகார சபையின் வலய அபிவிருத்தி அலுவலரான திரு சிசிர பெரேரா அவர்கள் பகிர்ந்து கொண்ட நிபுணத்துவ ஆலோசனை மூலமாகப் பயனடைந்தனர். இலங்கையில் ஒரு புகழ்பூத்த அழகு பராமரிப்பு வல்லுனரான திருமதி நயனா கருணாரத்ன அவர்கள் அழகு பராமரிப்பு மையம் மற்றும் அழகுக்கலை சார்ந்த துறையில் ஈடுபட்டுள்ள பங்கேற்பாளர்களுடன் தனது அறிவைப் பகிர்ந்து கொண்டார்.

கறவைப்பசு வளர்ப்பில் ஈடுபடும் பெண்களைப் பொறுத்தவரை, நிதியியல் அறிவு மற்றும் வர்த்தக முகாமைத்துவம் தொடர்பில் DFCC வங்கியின் துணைத் தலைமை அதிகாரியும், பிராந்திய முகாமையாளருமான திரு. வஜிர புஞ்சிஹேவ அவர்கள் அமர்வொன்றை நடாத்தியிருந்தார். நான்காவதும், இறுதியுமான அமர்வில் பொதுவான பயிர்ச்செய்கை தொடர்பில் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நாயகமான செவ்வந்தி குணவர்த்தன அவர்கள் பங்கேற்பாளர்களுடன் பயன்மிக்க உள்ளார்ந்த அறிவைப் பகிர்ந்து கொண்டார்.

நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையின் வளர்ச்சிக்கான ஒரு உந்துசக்தியாக இலங்கையில் பெண்கள் வளர்ச்சி மாற்றம் கண்டு வருவதை இனங்கண்டுள்ள DFCC வங்கி, இந்த நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பெண்களை வலுவூட்டுதல் ஒரு முக்கியமான தேவை என்பதால், அனைவருக்கும் ஏற்ற வங்கியால் முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் ஆண் ஆதிக்க வரலாற்றை புரட்டிப் போடுவதில் வரவேற்கத்தக்க ஒரு முயற்சியாகும்.

பங்கேற்பாளர்கள் நிச்சயமாக இந்த அறிவுப் பகிர்வு அனுபவத்திலிருந்து பயனடைந்துள்ளனர் என்பதுடன், இந்த அமர்வுகளை நடத்திய தொழில்துறை தலைவர்களின் சிந்தனை வெளிப்பாடுகளையும் உள்வாங்கிக் கொள்ள முடிந்துள்ளது. இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்புக்கு மகத்தான பங்களிப்பை வழங்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளில் ஈடுபடும் பெண்களின் பங்களிப்பிற்கு இனங்காணல் அங்கீகாரமளிக்க DFCC வங்கிக்கு இது வாய்ப்பளித்துள்ளது.

DFCC வங்கி பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களின் மூலம் தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவளிக்க எப்போதும் முன்வந்துள்ளது, குறிப்பாக ‘DFCC Sahaya Hamuwa’ மற்றும் ‘DFCC Viyapara Athwela’ ஒன்லைன் நிகழ்ச்சித்திட்டம் போன்றவற்றின் மூலமாக திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. சலுகை கடன் திட்டங்கள் மற்றும் விலைமதிப்பற்ற ஆலோசனை வழிகாட்டுதலுடன் இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் அபிமானம் பெற்ற கடன் வழங்குனராக, எதிர்காலத்தில் இந்த வகையான இன்னும் பல நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துவதற்கு வங்கி ஆவலாக உள்ளது.

DFCC வங்கி தொடர்பான விபரங்கள்

DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இலங்கையில் Business Today சஞ்சிகையால் மிகச் சிறந்த 30 நிறுவனங்களில் ஒன்றாக இந்த வங்கியும் பெயரிடப்பட்டுள்ளதுடன், மேலும் 2021 ஆம் ஆண்டில் Brand Finance இன் மிகச்சிறந்த 100 மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமங்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply