பயனர்களுக்கான நேர மேலாண்மை மற்றும் நல்வாழ்வு அம்சத்தை அறிமுகப்படுத்தும் TikTok

Share with your friend

TikTok தனது பயனர்களுக்காக புதிய ‘நேரம் மற்றும் நல்வாழ்வு’ என்ற (Time and Well-being) அம்சத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இப்புதிய புதுப்பிப்பு விழிப்புணர்வுடன் டிஜிட்டல் பழக்கங்களை வளர்த்துக்கொள்ள வடிவமைக்கப்பட்ட பல்வேறு வசதிகளை வழங்குகிறது. இந்த முயற்சி நேர்மறையான மற்றும் சீரான ஆன்லைன் அனுபவத்தை வளர்ப்பதில் TikTok இன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

பாதுகாப்பு மற்றும் சமூக வழிகாட்டுதல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், TikTok தனது சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட Family Pairing அம்சங்கள் மற்றும் Time Away வசதியுடன் இளம் வயதினரின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை விரிவாக்கி வருகிறது. இந்த ஆண்டு இளைஞர்கள் இரவில் ஓய்வெடுக்கும்போது அவர்களுக்கு ஆதரவாக தியான வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது விழிப்புணர்வை பயிற்சி செய்யவும், ஓய்வு பெறவும், ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கங்களை வளர்க்கவும் சிறப்பு கருவிகளுடன் மேலும் பல அனுபவங்களை வழங்குகிறது.

நேர்மறை டிஜிட்டல் பழக்கங்களை உருவாக்குதல்

பங்களாதேஷ் முழுவதும் மக்கள் #JournalTok மற்றும் #NatureTok போன்ற சமூகங்களுடன் தங்கள் ஆர்வங்களை கண்டறியவும் தொடர்பு கொள்ளவும் TikTok-ஐ பயன்படுத்துகின்றனர். தற்போது புதிய ‘நேரம் மற்றும் நல்வாழ்வு’ அம்சம் சமூகத்திற்கு ஓய்வெடுக்கவும் மன அமைதி பெறவும் முன்பை விட எளிதாக்குகிறது. இது முந்தைய திரை நேர மேலாண்மை பக்கத்தை மாற்றி, பின்வரும் புதிய வசதிகளை வழங்குகிறது:

தினசரி நோக்கத்தை அமைக்க உதவும் உறுதிமொழி நாட்குறிப்பு, 120க்கும் மேற்பட்ட உறுதிமொழி அட்டைகளை பதிவிறக்கம் செய்யவோ பிறருடன் பகிரவோ முடியும்.

மழை, கடல் அலைகள் மற்றும் வெள்ளை ஒலி போன்ற ஒலிகளை கொண்ட இனிமையான ஒலி உருவாக்கி. கணக்கெடுப்பு தரவுகளின்படி, TikTok பயன்படுத்துபவர்கள் பயன்படுத்தாதவர்களை விட தூங்குவதற்கு அல்லது ஓய்வெடுக்க இசை கேட்பதில் 14% அதிகம் ஈடுபடுகின்றனர்.

பல்வேறு வகையான விழிப்புணர்வு சுவாச முறைகளை கொண்ட சுவாசப் பயிற்சிகள்.

டிஜிட்டல் நல்வாழ்வு மற்றும் மன அனுபவங்களை மேம்படுத்துதல்

TikTok புதிய ‘நேரம் மற்றும் நல்வாழ்வு’ அம்சத்தை நான்கு புதிய நல்வாழ்வு பணிகளுடன் வெளியிடுகிறது. இவை குறுகிய, ஈர்க்கக்கூடிய பணிகளின் தொடராகும். இது நீண்ட கால சீரான டிஜிட்டல் பழக்கங்களை வளர்க்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்கள் பணிகளை முடிக்கும்போது, விழிப்புணர்வு நடத்தைகளை ஊக்குவிக்கும் மற்றும் வலுப்படுத்தும் பேட்ஜ்களை (badges) பெறுகின்றனர்.

இந்த அம்சங்களில் எட்டு வார உறக்க நேர பணி அடங்கும். இதில் பயனர்கள் மெய்நிகர் ‘நல்வாழ்வு மரம்’ ((Well-being tree) வளர்க்கலாம். நிர்ணயித்த வரம்புகளுக்குள் இருப்பதற்கான தினசரி திரை நேர பேட்ஜ், மற்றும் தளத்தில் செலவழித்த நேரத்தை மதிப்பாய்வு செய்ய திரை நேர அறிக்கைகளை சரிபார்க்கும் வாராந்த பணி ஆகியவை அடங்கும்.

பயனர்கள் நல்வாழ்வு தூதர் பணி வசதியின் மூலம் இந்த அம்சங்களை அனுபவிக்க தங்கள் நண்பர்களையும் அழைக்கலாம்.

இந்தப் பணிகளை முடிப்பதன் மூலம், பயனர்கள் தங்கள் விழிப்புணர்வு ஈடுபாட்டை வெகுமதியளிக்கும் மற்றும் வலுப்படுத்தும் டிஜிட்டல் பேட்ஜ்களை பெறுகின்றனர். இந்தப் பணிகள் Digital Wellness Lab, TikTok ஆராய்ச்சி மற்றும் Youth Council இன் கருத்துகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவு கட்டுப்பாடுகளை விட நேர்மறை ஊக்குவிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஆய்வுகள் காட்டுவது என்னவெனில், மூன்றில் இரண்டு இளைஞர்கள் டிஜிட்டல் நேரத்தை நிர்வகிப்பதற்கான கருவிகள் பயனுள்ளதாக இருப்பதாக கூறுகின்றனர்.

நேரம் மற்றும் நல்வாழ்வு பிரிவில் அதிகமானோரை ஈடுபடுத்துதல்.

புதிய நேரம் மற்றும் நல்வாழ்வு அம்சத்தை சமூகத்திற்கு மேலும் அணுகக்கூடியதாகவும், தெரியக்கூடியதாகவும் ஆக்குவதே நோக்கம். இந்தக் கருவிகளை அன்றாட பயன்பாட்டின் செயலூக்கமான பகுதியாக மாற்ற TikTok மேலும் அம்சங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது, இதில் TikTok அனுபவம் முழுவதும் அவற்றை எவ்வாறு ஒருங்கிணைக்கலாம் என்பதை ஆராய்வதும் அடங்கும்.இது தொடர்பாக TikTok இன் உள்ளடக்க ஆலோசனைக் குழு உறுப்பினர் மற்றும் Stanford Psychiatry’s Center மனநல நிலையத்தின் இளைஞர் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான திட்ட பணிப்பாளர் டாக்டர் விக்கி ஹாரிசன் கூறுகையில், “TikTok இளைஞர்களின் கருத்துக்களை மேம்படுத்துவதற்கு மிகவும் சிறந்த அம்சங்களுடன் ஒருங்கிணைப்பது மிகவும் பாராட்டத்தக்கது. இந்த புதிய அம்சத்தின் மூலம் இளைஞர்கள் தங்கள் திரை நேரத்தை நிர்வகிக்கவும் தளத்தை மிகவும் சிந்தித்து பயன்படுத்தவும் உதவும்.” என்றார்.


Share with your friend