பிரைம் குழுமம் முதன்முறையாக இலங்கையின் காணி கட்டடத் துறைக்கான தனித்துவமான, புதிய முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

Share with your friend

  • 20% ஆரம்ப கொடுப்பனவு
  • 30 மாதத்திற்குள் 25%
  • வீட்டை ஒப்படைக்கையில் 55% முடிவான கொடுப்பனவு முறை
  • எவ்வித வட்டியும் அறவிடப்பட மாட்டாது
  • 2.5 வருடத்திற்குள் ஒட்டுமொத்த முதலீட்டில் 75 வீதத்தை வருமானமாக பெறும் வாய்ப்பு

நாட்டின் பாரிய சொத்து மேம்பாட்டு நிறுவனமான பிரைம் குழுமம், இலங்கையர்களின் பெரும் பகுதிக்கு அவர்களின் விதிவிலக்கான மற்றும் மாறுபட்ட வீட்டுத் திட்;டங்களை ஆரம்பிப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக, முதன்முறையாக அண்மையில் தொழிற்துறையில் வேறு எந்த வகையிலும் இல்லாதவாறு ஒரு புரட்சிகர கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மிகவும் கவர்ச்சிகரமான, தொழில்துறையின் முதலாவது சலுகை வாடிக்கையாளர்களுக்கு நிதி நெகிழ்வுத் தன்மையை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு மன நிறைவை உறுதிப்படுத்துகிறது மற்றும் அவர்களின் வசதிக்கேற்ப அவர்களின் கனவு இல்லத்தை சொந்தமாக்கவும் இது உதவுகிறது.

ஒப்பிடமுடியாத இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வீட்டின் மொத்த மதிப்பில் 20% ஆரம்பக் கட்டணமாகவும், 25%ஐ 30 மாதங்களில் எளிதான தவணைகளாகவும், மீதமுள்ள 55% வீடு அவர்களிடம் ஒப்படைக்கப்படும் போதும் கொடுப்பனவு செய்ய இந்த சிறந்த திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கவர்ச்சிகரமான கொடுப்பனவு முறையின் போது வாடிக்கையாளரிடமிருந்து எவ்வித வட்டியும் அறவிடப்பட மாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்போது அனைத்து முதலீட்டாளர்களும் தங்கள் ஆரம்ப முதலீட்டிற்காக 2.5 ஆண்டுகளில் 75%க்கும் அதிகமான உத்தரவாதமான மூலீட்டுக்கான ஆதாயத்தையும் மற்றும் ROIயையும் அனுபவிக்க முடியும்.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு அணுக முடியாத முதலீடுகளை அணுகவும், முன்பே அங்கீகரிக்கப்பட்ட Mortgageஐ பயன்படுத்தவும் இது அனுமதிக்கிறது. எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய இந்த திட்டம், பிரைம் குழுமத்தால் சொத்து துறையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த அனுபவத்துடன் கவனமாக நிர்வகிக்கப்பட்டது, நிதி ரீதியாக பல்வேறுபட்ட வாடிக்கையாளர்கள் அதிக அளவில் தங்கள் கனவு இல்லத்தை நனவாக்க முழு வசதியுடன் ஒரு சிறந்த முடிவை எடுக்க உதவுகிறது. நிறுவனத்தின் புதிய சலுகை முதன்முதலில் வீட்டுரிமையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது, இயற்கையான, பசுமையான சுற்றுப்புறங்களில் 88 Residence என்ற வீட்டுத்திட்டம் பிலியந்தளை, கஹதுடுவ, ஆகிய பகுதியில் தற்போது முன்பதிவுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

‘பிரைம் குழுமம் எப்போதும் சந்தை தேவைகளுக்கு ஏற்ப வீட்டுத் திட்டங்களை ஆரம்பிப்பதில் உறுதியாக உள்ளது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நெகிழ்வான புதுமையான கட்டண வசதிகளை வழங்குகிறது. எனவே, இந்த ‘தனித்துவமான காணி கட்டட விற்பனை வர்த்தக முதலீட்டுத் திட்டத்தை’ முதன்முறையாக இலங்கை நுகர்வோருக்கு அறிமுகப்படுத்துவதை இட்டு மிகுந்த மகிழ்ச்சியாகவுள்ளது. இந்த நிதித் திட்டத்தின் மூலம், இலங்கையர்கள் தங்கள் சொந்த வீட்டில் வசிக்கும் கனவை 30% குறைந்த ஆரம்பக் கட்டணத்துடன் நனவாக்க முடியும். இத்தகைய சவாலான பொருளாதார சூழலில், அத்தகைய வசதி இருப்பது நிச்சயமாக நுகர்வோரின் வாழ்க்கையிலும் சுபீட்சத்தைக் கொண்டுவரும்.

பிரைம் குழுமம் இந்த சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, வாடிக்கையாளர்களிடம் முதல் 2.5 வருடங்களில் 45% கொடுப்பனவை மட்டுமே வசூலிக்கும். மிகுதியான 55%ஐ வீட்டை அவர்களிடம் ஒப்படைக்கையில் வழங்க வேண்டும். இலங்கை வாழ் மக்களின் ஊதியம் பெறும் நிலைமையைக் கருத்திற் கொள்ளும் போது, முழு வீட்டுப் பெறுமதியையும் 2.5 ஆண்டுகளுக்குள் செலுத்துவது முடியாத விடயம். இதன் காரணமாக இந்த கொடுப்பனவு வசதி முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வீட்டின் மொத்த மதிப்பில் மீதமுள்ள 55% தொகையை செலுத்த வங்கிக் கடன் பெற முடியும் மற்றும் பிரைம் குழுமம் அந்த வசதிகளை செய்து கொடுக்க தயாராக உள்ளது. மிக முக்கியமாக, இந்த தனித்துவமான கட்டணத் திட்டத்துடன், வாடிக்கையாளர் இந்த வீட்டுத் திட்டத்தில் வீடு வாங்கிய 2.5 ஆண்டுகளில் வீட்டை விற்க விரும்பினால், வீட்டின் மதிப்பில் 75% நிச்சயமாக வாடிக்கையாளரின் முதலீட்டுக்காக கிடைக்கும் என இங்கு குறிப்பிட வேண்டும்.’

ஆகையால், பிரைம் குழுமத்தால் முதன்முறையாக இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தனித்துவமான இணை நிதித் திட்டத்தின் நன்மைகள் ஒரு பெரிய வாடிக்கையாளர் சமூகத்தை ஈர்க்கும் மற்றும் வாடிக்கையாளர் ஆடம்பர வாழ்க்கை முறையில் தங்கள் பொருளாதார நிலையை சம நிலைப்படுத்த முடியும் மற்றும் இலங்கை வாடிக்கையாளர் சமூகத்திற்கு பிரைம் வழங்கியுள்ள சவாலான பொருளாதார நிலையிலும் நிதி அழுத்தமில்லாமல் உங்களுக்கு வீடொன்றை சொந்தமாக்கும் கனவை அடைவதற்கான சிறந்த வழி அவ்வாறு செய்வது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.’ என பிரைம் குழுமத்தின் தலைவர் பிரேமலால் பிராக்மணகே கூறினார்.

பிலியந்தலை, கஹதுடுவ 88 Residence சொகுசு வீட்டுத் திட்டம் ருவன்புர நெடுஞ்சாலைக்கு அருகில், கஹதுடுவ நெடுஞ்சாலைக்கு 2 கிலோ மீற்றர் மற்றும் 120 மார்க்க போக்குவரத்து வீதியில் 900 மீற்றர் தொலைவில் பிலியந்தலை வயல் வெளிக்கு அருகாமையில் 4 விதமான வீட்டுத் திட்டங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அமைதியான 88 Residence சொகுசு வீட்டுத் திட்டத்தின் கீழ், 88 ஒற்றை மற்றும் இரண்டு படுக்கையறைகள் கொண்ட இரண்டு அல்லது மூன்று விசாலமான படுக்கையறைகள் கொண்ட வீட்டின் பெறுமதி, 14.5 மில்லியன் ரூபாவிலிருந்து ஆரம்பமாகின்றன. பிரைம் குழுமம் இந்த திட்டத்தை 2024ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மஹோகனி பிரதான கதவுகளுடன் கூடிய விசாலமான பால்கனி மொட்டை மாடிகள் பல்வேறு புதிய கட்டடக்கலை வடிவமைப்புகளுக்கு ஏற்ப கட்டப்பட்ட வீடுகளின் இணையற்ற சகவாழ்வை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். வீட்டின் சமையலறையில் அதிநவீன கிரானைட் மேற்பரப்புகள், Pantry Cupboards மற்றும் குளியலறைகள் மற்றும் ஊழியர்களுக்கான கழிவறைகள், குளியலறைகளில் வென்னீர் நீர் வசதிகள் உட்பட பல வசதிகள் உள்ளன. இதில் 24 மணி நேர பாதுகாப்பு, பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான நீச்சல் தடாகம், குழந்தைகள் விளையாட்டு மைதானம் மற்றும் பல்நோக்கு விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம், உள்ளக உடற்பயிற்சி கூடம் மற்றும் பல்நோக்கு மண்டபம் ஆகியவையும் இதில் அடங்கும்.

பிரைம் குழுமம்

இலங்கையின் காணி கட்டட விற்பனை துறையில் சர்வதேச கடன் தரமான ICRA [A-] நிதி நிலைத் தன்மையைப் பெற்ற ஒரேயொருரு குழுமமான பிரைம் குழுமம் காணி மற்றும் கட்டட மேம்பாட்டுத் துறையில் சுமார் 25 வருடகால அனுபவத்தைக் கொண்ட முழுமையான இலங்கை வர்த்தக குழுமமாகும். பிரைம் குழுமம் LMD சஞ்சிகையினால் 2019 ஆண்டில் நாட்டின் வர்த்தகங்கள் மத்தியில் கௌரவமான வர்த்தக நாமங்கள் அடங்கிய நிறுவனங்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது. அத்துடன் பிரைம் குழுமத்தின் தலைவர் மற்றும் அதன் துணை தலைவி ஆகியோரை LMD சஞ்சிகையினால் 2019ஆம் ஆண்டில் நாட்டின் சிறந்த 100 வர்த்தகங்களைச் சேர்ந்த ‘Realty Visionary’ and ‘Power Woman’இனால் மதிப்பீடு செய்யப்பட்டதுடன், பிரபலமான PropertyGuru Asia Property Awards விருது வழங்கும் நிகழ்வில் ‘Best Developer’ மற்றும் ‘Best Luxury Condo Development’ என்ற விருதுகளையும் வெல்வதற்கு பிரைம் குழுமத்திற்கு முடிந்தது. Asia One சஞ்சிகையினால் கௌரவிக்கப்படும் ஆசியாவின் விசேட இலச்சினைகளுக்குள் இடம்பிடித்துள்ளதுடன் 2018ஆம் ஆண்டு இலங்கைகயில் சிறந்த தொழில்முனைவோர் என்ற அந்தஸ்தையும் பிரைம் குழுமம் பெற்றது. அத்துடன் தனியார் நிறுவன குழுமமாக இருந்த பிரைம் குழுமத்தில் சேவை மற்றும் முதலீடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் Prime Lands Residencies பொதுப் பங்கு விநியோகம் (IPO) மேற்கொள்ளப்பட்டதுடன் சிறந்த ஒத்துழைப்புடன் முடிவடைந்த இந்த பங்கு விநியோகத்தின் மூலம் குழுமத்தின் பங்குரிமை தொடர்பில் முதலீட்டாளர்களில் பெரும்பாலானோருக்கு சந்தர்பம் வழங்கியதனால் சர்வதேச தரத்திற்கு கட்டட விற்பனை நிறுவனமாக உருவாகுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply