கடந்த தசாப்தத்தில், இலங்கையில் வருடம் தோறும் 1.59 மில்லியன் மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகளை தவறாக நிர்வகித்து வந்ததனால், இது கடைசியில் கடல்களில் கொட்டப்படுகிறது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள 12 நாடுகளில் இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளால் கணிசமாக மாசுபடுவதாகக் கருதப்படுகிறது. எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் (MV X-Press Pearl) கப்பலில் அண்மையில் கொள்கலன் வெடித்ததால் கடல் மாசுபாட்டின் சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது.
உலகப் பெருங்கடல் தினம் ஜூன் மாதத்தில் கொண்டாடப்பட்டாலும், இந்த சோகம் இலங்கையின் நிலையான இலக்குகளை அடைவதற்கான பயணத்தை பின்னோக்கி தள்ளியுள்ளது. இதன் காரணமாக, பிளாஸ்டிக் நுகர்வு பொறுப்புடன் ஊக்குவிப்பதும் அப்புறப்படுத்துவதும் மிகவும் கடினமாகிவிட்டது.
மீன்பிடித் தொழிலில் பிளாஸ்டிக் கழிவுகள் பற்றிய கவனம் செலுத்துதல்
இலங்கை மீன்வள துறைமுகக் கழகத்தில் தற்போது 4900 முதல் 5000 வரை பல மீன்பிடிக் கப்பல்கள் / ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மீன்பிடிக் கப்பல்கள் சுமார் 300-400 பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. சராசரியாக ஒரு நபர் சுமார் 15 பாட்டில்களை பயன்படுத்துகிறார், அதில் 5 லிட்டர் பாட்டில்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
‘1900களில், இந்த கப்பல்களில் நீர் தாங்கிகள் இருந்தன, அவை குடிப்பதற்கும் மீன்களை சுத்தம் செய்வதற்கும் தண்ணீரை எடுத்துச் செல்லக்கூடியவை. புதிய படகுகளிலும் இந்த வசதிகள் உள்ள போதிலும், மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது பிளாஸ்டிக் போத்தில்களில் தண்ணீரை எடுத்துச் செல்லவே விரும்புகிறார்கள். 2000ஆம் ஆண்டில், இது ஒரு போக்காக மாறியது.’ என இலங்கை மீன்வள துறைமுகக் கழகத்தின் பொது முகாமையாளர் எம். ஜனக பிரசன்ன தெரிவித்தார்.
இலங்கை மீன்வள துறைகக் கழகம், இலங்கை கடலோர காவல்படை (SLCG) மற்றும் மீன்வள மற்றும் நீர்வளத் துறை ஆகியவை கூட்டாக இணைந்து கடலுக்கு கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு பாட்டில் பற்றிய தகவல்களையும் கடலில் பிளாஸ்டிக் பாட்டில்களின் மோசமான விளைவுகளையும் பதிவு செய்கின்றன. மீனவர்கள் கடலுக்கு எடுத்துச் செல்லும் ஒவ்வொரு பாட்டிலையும் திருப்பித் தர வேண்டும். அல்லது அவர்கள் மீண்டும் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்படுவார்கள்.
பிளாஸ்டிக் அகற்றும் முயற்சிகளை ஊக்குவிக்கும் பொருட்டு பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்காக மீன்பிடி துறையில் மீள்சுழற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, ஈகோ ஸ்பிண்டில்ஸ் (இலங்கையின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிறுவனம்) கோகா கோலாவுடன் இணநை;து 10,000 முதல் 15,000 பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிப்பதற்கான கூடைகள் மற்றும் சேகரிப்பு மையங்களை அமைத்துள்ளது.
‘நாம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதனால் துறைமுகங்களை விட்டு வெளியேறும் மீனவர்களால் கடல் மாசடைவதை 75% குறைத்துள்ளோம். இதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை’ என்று அவர் கூறினார். மக்கள் திமிங்கலத்தைப் பார்ப்பது அல்லது படகுப் பயணம் அல்லது படகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடங்களில் மீன்பிடித்தல் போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சிந்தித்துப் பாருங்கள். அப்படியானால், நீங்கள் எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளைத் திருப்பிக் கொண்டுவந்து பொருத்தமான தொட்டிகளில் போட வேண்டும்.’ என எம். ஜனக்க பிரசன்ன மேலும் கூறினார்.
கடலைப் பாதுகாக்க ஒன்றிணையுமாறு கோரிக்கை
6வது சர்வதேச கடல்சார் குப்பைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட ஆய்வில், இலங்கையின் கடற்கரையோரத்தில் கொட்டப்படும் கழிவுகளில் 93% பிளாஸ்டிக் என தெரியவந்துள்ளது. நகரங்கள் மற்றும் ஆறுகளுக்கு அருகிலுள்ள கடற்கரைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன எனவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
‘பாரிய சீரற்ற காலநிலைகளின் போது பிராந்திய நாடுகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கை கரையோரங்களில் ஒதுங்குகின்றன. இது பருவமழை காலநிலை நிலவும் போது, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படும்.’ இலங்கை கடற்படை மற்றும் Green & Blue Domain Dockyard திட்டத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் கமாண்டர் கசுன் நுவரபக்ஷ கூறினார்.
இலங்கை கடற்படையின் கடல் பாதுகாப்பு கண்காணிப்பு பிரிவு சேகரித்த பிளாஸ்டிக் கழிவுகள் மீள்சுழற்சி செய்யப்பட்டு பாலியஸ்டர் நூல்கள் மற்றும் மோனோஃபிலமென்ட்களை உற்பத்தி செய்வதற்காக ஈகோ-ஸபென்டிஸூக்கு கொண்டு செல்லப்படுகின்றன. முன் கூடியிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க ஈகோ ஸ்பிண்டில்ஸ் திருகோணமலை கப்பல் தளம், கல்பிட்டி மற்றும் மன்னார் கடற்படை தளங்களில் அமுக்க இயந்திரங்களை நிறுவியுள்ளது.
மக்களும் வர்த்தகர்களும் பொறுப்பற்ற முறையில் பிளாஸ்டிக்கை அப்புறப்படுத்தினால் இலங்கை கடற்படை பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கடலைப் பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் தோல்வியடையும். இத்தகைய நிறுவனங்கள் கடல்வாழ் உயிரினங்களையும் கடல் வளத்தையும் பாதுகாக்க உதவும் பாதுகாப்பு திட்டங்களை நிறுவ அல்லது ஆதரிக்க வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது.
பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஒரு புதிய அர்த்தத்தை அளிக்கிறது
நாடு முழுவதிலுமுள்ள கடற்கரைகள், சேகரிப்பு மையங்கள் மற்றும் கடலில் இருந்தும் சுற்றுச் சூழலில் இருந்தும் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் ஈகோ-ஸ்பென்டில்ஸ் மீள்சுழற்சி மையத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த வசதி மாதத்திற்கு சுமார் 7,500,000 – 9,000,000 PET பிளாஸ்டிக் போத்தல் கழிவுகளை மீள்சுழற்சி செய்கிறது.
பிளாஸ்டிக் கழிவுகளை துண்டாக்கப்பட்ட பின்னர், அது வண்ணம் மற்றும் வகை பிளாஸ்டிக் மூலம் வரிசைப்படுத்தப்பட்டு, நெரிக்கப்பட்டு ஒரு இயந்திரத்திற்கு அனுப்பப்பட்டு பாட்டில் மூடிகள் மற்றும் லேபிள்களை அகற்றுகிறது, அங்கு அவை PET துண்டுகளாக மாற்றப்படுகின்றன.
‘பிளாஸ்டிக் துண்டுகளாக்கப்பட்டவுடன், அதை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறோம். ஒரு வகை ‘பிரீமியம் கிரேட்’ ஆகும், இது நூல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மிக உயர்ந்த தரமான பிளாஸ்டிக் துண்டுகள், மற்ற வகை மோனோஃபிலமென்ட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.’ ஈகோ ஸ்பிண்டில்ஸ் மீள்சுழற்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் உதவத்தே கூறினார். கடற்கரையிலிருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படும் நூல்களைப் பயன்படுத்த வர்த்தகர்கள் விரும்புகிறார்கள், ஏனெனில் இது கழிவுப் பிரச்சினையையும் கடலில் ஏற்படும் தாக்கத்தையும் குறைக்கிறது. எங்களிடம் ஈகோஸ் ஓசியானிக் உள்ளது, இது கடற்கரை சார்ந்த பிளாஸ்டிக் பாலியஸ்டர் நூல் தயாரிப்பு.’ என உதவத்த மேலும் கூறினார்.
ஈகோ ஸ்பிண்டில்ஸ் போன்ற மீசுழற்சி நிறுவனங்களும் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துகின்றன மற்றும் கடற்கரையிலிருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளின் அளவைக் கணக்கிடுகின்றன. ‘எங்கள் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பாளர்கள் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் அளவைக் கண்காணிக்கக்கூடிய ஒரு பயன்பாடு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கடல் மற்றும் பெருங்கடல்களில் இருந்து கழிவுகளை அதிக அளவில் அகற்றி வருகிறோம். குடிமக்களாகிய நாம் எப்போதும் கடலை சுத்தமாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும்.’ என உதவத்த சுட்டிக்காட்டினார்.