மனைகளைக் கொள்வனவு செய்ய எதிர்பார்ப்போருக்கு நிதித் தீர்வுகளை வழங்க ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் நடவடிக்கை

Share with your friend

கொழும்பில் நிர்மாணிக்கப்படும் TRI-ZEN residential development ஐச் சேர்ந்த மனைகளில் முதலீடு செய்ய எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ‘Freedom Mortgages’ கவர்ச்சிகரமான வீட்டுக் கடன் தீர்வுகளை கொமர்ஷல் வங்கி, DFCC வங்கி மற்றும் HNB ஆகியவற்றுடன் இணைந்து வழங்க ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் முன்வந்துள்ளது.

குறைந்த வட்டி வீதங்களுடன், முதலீட்டின் மீது நிலையான வருமான வாய்ப்புகளை வழங்கும் வகையிலமைந்த கொழும்பு நகர மத்தியில் ரியல் எஸ்டேட் என்பது பரந்தளவு முதலீட்டுத் தெரிவுகளை எதிர்பார்ப்போருக்கு கவர்ச்சிகரமான தீர்வாக அமைந்திருக்கும். முதலீட்டுத் திட்டம் என்பது புத்தாக்கமான நிதியியல் தீர்வு என்பதுடன், பல நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன் கைகோர்த்து கொள்வனவாளர்களுக்கு பல்வேறு தெரிவுகளில் தீர்வுகளை பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கும் துறையின் முதலாவது தீர்வாகவும் அமைந்துள்ளது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி மற்றும் இந்திரா டிரேடர்ஸ் (பிரைவட்) லிமிடெட் ஆகியவற்றுக்கிடையிலான அதிகளவு எதிர்பார்ப்புகள் நிறைந்த அபிவிருத்தித்திட்டமாக TRI-ZEN அமைந்துள்ளதுடன், 2023 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

‘Freedom Mortgages’ ஊடாக இரு வருடங்களுக்கு வட்டி விலக்கழிக்கப்படுவது உறுதி செய்யப்படுகின்றது. இதனூடாக, மனதுக்கு நிம்மதி கிடைப்பதுடன், சிக்கல்களில்லாத மற்றும் எளிமையான செயன்முறையும் கிடைக்கின்றது. வாடிக்கையாளர்கள் ஆரம்பத்தில் 20% கொடுப்பனவை மேற்கொள்ள வேண்டியுள்ளதுடன், அடுத்த இரு வருட காலத்துக்கு மேலதிகமாக எவ்வித கொடுப்பனவுகளையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. வட்டி வீதங்கள் வருடாந்தம் 7% ஆக அமைந்திருப்பதுடன், வீட்டு உரிமையாளர்களுக்கு பல கடன் திட்டங்களிலிருந்து தமக்குப் பொருத்தமானதை தெரிவு செய்து கொள்ளும் வாய்ப்பைக் கொண்டிருப்பதுடன், ஆகக்குறைந்த முற்பணத்தை செலுத்த வேண்டியுள்ளது. பரந்த கிளை வலையமைப்பையும், சிறந்த வாடிக்கையாளர் சேவைகளையும் கொண்ட மூன்று முன்னணி வங்கிகள் இந்தத் திட்டத்தில் கைகோர்த்துள்ளதுடன், தமக்கு பொருத்தமான நிதிச் சேவைகளை வழங்கும் வங்கியுடன் கைகோர்க்கும் தெரிவை வாடிக்கையாளர்கள் கொண்டுள்ளனர்.

ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் பிரிவுத் தலைமை அதிகாரி நயன மாவில்மட கருத்துத் தெரிவிக்கையில், “நபர் ஒருவரின் எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்கு கடன்களினூடாக அணுகல், தெரிவு மற்றும் சௌகரியம் போன்றன வழங்கப்படுகின்றது. ‘Freedom Mortgages’ என்பது புத்தாக்கமானதாக

அமைந்துள்ளது. கொழும்பு நாட்டின் பொருளாதார ரீதியில் மையப்பகுதியாக அமைந்துள்ளதுடன், கொழும்பு மத்தியில் தமக்கென வசிப்பிடமொன்றைக் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர். இலங்கையின் முன்னணி மற்றும் புகழ்பெற்ற நிதிச் சேவை வழங்குநர்களுடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைவதுடன், கொழும்பில் சகாயமான, தரமான குடியிருப்பை நிர்மாணிப்பதில் நாம் கொண்டுள்ள நோக்கத்தை புரிந்து கொண்டுள்ளனர். TRI-ZEN இல் சௌகரியம், சொகுசு மற்றும் இலகுத்தன்மை போன்ற அம்சங்கள் இணைந்துள்ளதுடன், நகர் மத்தியில் வசிப்பது எனும் கனவை பலருக்கு நனவாக்கும் வகையில் அமைந்துள்ளது.” என்றார். யூனியன் பிளேஸ், கொழும்பு 3 எனும் முகவரியில் அமைந்துள்ள TRI-ZEN இல் 53 அடுக்குகளில் சொகுசு குடியிருப்புத் தொகுதி அமைந்திருக்கும். மொத்தமாக 891 ஒரு, இரண்டு மற்றும் மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட தொடர்மனைகளைக் கொண்டிருக்கும். மதிநுட்பமாக வதிவிட உள்ளம்சங்களைக் கொண்டிருக்கும் என்பதுடன், சௌகரியம் தொடர்பான நவீன வசதிகளையும் கொண்டிருக்கும். பொதுப் போக்குவரத்து வசதிகள், அலுவலகங்கள் மற்றும் முன்னணி பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் விற்பனைப் பகுதிகள் போன்றவற்றை அண்மித்துக் காணப்படுவதுடன், நகர் மத்தியில் ஒப்பற்ற சௌகரியத்தை வழங்குவதாக அமைந்துள்ளது.

TRI-ZEN இன் சௌகரியம் மற்றும் சகாயமான சொகுசு மற்றும் ‘Freedom Mortgages’ இன் நெகிழ்ச்சித்தன்மை போன்றன வீட்டு உரிமையாளர்கள் மத்தியில் பெருமளவு எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் தோற்றுவித்துள்ளன. ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் விற்பனை தலைமை அதிகாரி நதீம் ஷம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “எமக்குக் கிடைத்த வரவேற்பு பெருமளவு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. ‘Freedom Mortgages’ என்பது முன்னணி கைகோர்ப்பாக அமைந்திருப்பதுடன், நகர் மத்தியில் வீடொன்றைக் கொண்டிருக்கும் கனவை பலர் மத்தியில் நனவாக்குவதாக உள்ளது. ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ், இலங்கையின் முன்னணி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து கொழும்பு மத்தியில் நிதி நெகிழ்ச்சித் தன்மையுடன் ரியல் எஸ்டேட் வாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ளமையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக அமைந்துள்ளது.” என்றார்.

ஜோன் கீ்ல்ஸ் புரொப்பர்டீஸ் தொடர்பான மேலதிக தகவல்களை +94702294294 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக பெறலாம் அல்லது www.trizen.lk எனும் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply