முதல் காலாண்டுக்கான முடிவுகள் HNBஇன் உறுதி மற்றும் பேண்தகைமையை உறுதிப்படுத்துகின்றது

Share with your friend

  • வலுவான CASA வளர்ச்சி, மேம்படுத்தப்பட்ட NPA, நெகிழ்ச்சியான முதல் காலாண்டு (Q1) செயல்திறனை செயல்படுத்துகிறது.
  • பொருளாதார மற்றும் வர்த்தக மறுமலர்ச்சி முயற்சிகளுக்கு ஆதரவளிக்க முழுமையாக உதவுகிறது

2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் HNB வரிக்கு பிந்தைய இலாபமாக (PAT) 4.7 பில்லியன் ரூபாவை பதிவு செய்திருந்தது, அதேநேரம் வரிக்கு முந்தைய இலாபமாக (PBT) 5.5 பில்லியன் ரூபாவை பதிவு செய்திருந்தது. குழு மட்டத்தில் வரிக்கு முந்தைய இலாபம் மற்றும் வரிக்கு பிந்தைய இலாபம் முறையே 5.9 பில்லியன் ரூபா மற்றும் 4.8 பில்லியன் ரூபாவாகும்.

தொற்றுநோயினால் பாதிப்படைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட கணிசமான பண தளர்வின் விளைவாக கடந்த 12 மாதங்களில் சராகரி எடையுள்ள அத்தியாவசிய கடன் விகிதம் (AWPLR) சுமார் 400 bpsஆல் வீழ்ச்சியடைந்தது. இதன்விளைவாக வட்டி வருமானம் 13% ஆண்டுக்கு-ஆண்டு குறைந்து 23.7 பில்லியனாக வீழ்ச்சியடைந்தது. வட்டி செலவுகள் 17.2% ஆண்டுக்கு-ஆண்டு குறைந்து 13.1 பில்லியனாக வலுவான CASA (நடைமுறைக் கணக்குகள் மற்றும் சேமிப்புக் கணக்குகள்) அணித்திரட்டலால் இயக்கப்படுகின்றன. CASA விகிதம் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 36.2% இலிருந்து 2021 முதல் காலாண்டின் (Q1) முடிவில் 39.7%ஆக அதிகரித்தது, ஏனென்றால் CASA அடிப்படை 30% ஆண்டுக்கு-ஆண்டு அதிகரித்து 395 பில்லியனாக அதிகரித்தது. இதன் விளைவாக 2021இன் முதல் மூன்று மாதங்களுக்கான வங்கியின் நிகர வட்டி வருமானம் (NII) 7.2% குறைந்து 10.6 பில்லியனாக குறைந்தது.

HNBன் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜொனதன் அலஸ்

வங்கியின் முதல் காலாண்டு முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ், “முன்னெப்போதும் இல்லாத வகையில் பல சவால்கள் நிறைந்த வருடத்தில் HNB பின்னடைவுகளை எதிர்கொண்டு, உறுதி மற்றும் ஸ்திரத் தன்மையை நிரூபித்துள்ளது. இந்த காலகட்டத்தில் எமது வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் முழுமையான நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கும் நாங்கள் நன்றிகூற கடமைபட்டுள்ளோம். அபாயகரமான சூழல்கள் இருந்த போதிலும் தொற்றுநோயின் பல அலைகளின் போதும் எமது வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதில் எமது ஊழியர்கள் காட்டிய அர்ப்பணிப்புக்கும் எனது ஆழ்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாம் முன்னுரிமை அளிப்பது தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு ஆதரவளிப்பது மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாகவே ஆகும்.” என தெரிவித்தார்.

“இலங்கை மத்திய வங்கி மற்றும் எமது சொந்த நிதியிலிருந்து செயற்பாட்டு மூலதன நிதியை வழகியதுடன் கடன்களுக்கு காலம்தாழ்த்தப்பட்ட வசதிகளை மூன்று கட்டங்களாக வழங்கினோம். கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட நிதி உதவிக்கு மேலதிகமாக, தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்போது வாடிக்கையாளர்கள் எமது அனைத்து சேவைகளையும் பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் அணுக முடியும் என்பதை உறுதிப்படுத்த எமது டிஜிட்டல் முன்மொழிவை மேம்படுத்தினோம். எங்கள் டிஜிட்டல் கட்டண தளமான SOLOவில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதும், எங்கள் புதிய HNB டிஜிட்டல் Appஇனை அறிமுகப்படுத்துவம் மற்றும் SME வாடிக்கையாளர்களுக்கான e-commerce திறன்களை அறிமுகப்படுத்துவதும் இதில் அடங்கும். நாங்கள் தற்போது இந்த வலுவான புதிய சேவைகளை மேலும் செம்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம், இது சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்காலத்தில் அனைத்து HNB வாடிக்கையாளர்களுக்கும் அதிக வசதியை வழங்கும்.”

HNB செயல் தலைவர் டொக்டர் ஹர்ஷ கப்ரால் பி.சி.

முதல் காலாண்டில் நிகர கட்டணம் மற்றும் தரகு வருமானம் 10.2% அதிகரித்து 2.3 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள் இருந்தாலும் கூட கிரெடிட் கார்ட் வர்த்தகம், சர்வதேச வர்த்தகம் மற்றும் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவதற்கான கட்டணங்கள் மூலம் அதிகரிப்புக்கு பெரும் பங்கைக் வகித்தன. டிஜிட்டல் வர்த்தக கட்டணங்கள் உள்ளடக்கிய பிற கட்டண ஆதாரங்கள் ஆண்டுக்கு-ஆண்டு 24.4%ஆக அதிகரித்துள்ளன.

இந்த காலகட்டத்தில் வெளிநாட்டு பரிமாற்ற வீதங்களின் நிலையற்ற தன்மை காரணமாக Swap மற்றும் முன்னோக்கி ஒப்பந்தங்களில் கணிசமான மறுமதிப்பீடு ஆதாயங்களுக்கு வழிவகுத்தன. டொலர் வட்டி விகிதங்களுக்கு ஏற்ப பண்டமாற்று தவணைகள் (Swap Premiums) குறைந்துவிட்டதால், Swap செலவுகள் 2020ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ஒப்பிடும்போது குறைவாக இருந்தன. அதன்படி, வங்கி நிகர பரிமாற்ற வருவாய் 1.9 பில்லியன் ரூபாவாக பதிவு செய்துள்ளது, இது 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது 53% வளர்ச்சியாகும். 2021ஆம் ஆண்டின் முதலீடுகளின் மொத்த ஈவுத்தொகை வருமானம் 2020ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 13 மில்லியன் ரூபாவுடன் ஒப்பிடும்போது 421 மில்லியன் ரூபாவாக இருந்தது, ஏனெனில் 2019 நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட ஈவுத்தொகை தொற்றுநோய் காரணமாக 2020ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் செலுத்தப்பட்டமையே ஆகும்.

2020ஆம் ஆண்டின் டிசம்பர் மாத இறுதியில் 4.31% உடன் ஒப்பிடும்போது வங்கியின் NPA விகிதம் 2021ஆம் ஆண்டின் முடிவில் 4.28%ஆக ஓரளவு மேம்பட்டது, ஏனெனில் முன்னர் தற்காலிகமாக காலம் தாழ்த்திய கடன்களை வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் அக்டோபர் 2020 முதல் திருப்பிச் செலுத்த தொடங்கினர். 2021 மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் கடன் மற்றும் ஏனைய நட்டங்களுக்கான பெறுமதிக் குறைப்புக் கட்டணம் 2.7 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது, இது 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 4.7 பில்லியன் ரூபாவாகும். 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான கடன் மற்றும் ஏனைய நட்டங்களுக்கான பெறுமதிக் குறைப்பு, ஏப்ரல் 2020இல் நடைமுறைப்படுத்தப்பட்ட சவரின் (Sovereign) தரமிறக்கத்தின் விளைவாக, சவரிங் (Sovereign Bonds) பத்திரங்களின் காரணமாக 708 மில்லியன் ரூபாவை வசூலித்தது.

உலக புகழ்பெற்ற பேங்கர் சஞ்சிகையினால் தரப்படுத்தப்பட்டுள்ள 1000 வங்கிகள் அடங்கிய பட்டியலில் HNB தரப்படுத்தப்பட்டுள்ளதுடன் Fitch Ratingஇனால் AA-(lka) மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய வங்கியாளர் சஞ்சிகை வழங்கிய சிறந்த சில்லறை வங்கிக்கான விருதை 11 தடவைகள் வென்ற இந்த வங்கி, CIMA, ICCSL மற்றும் Daily FTஇனால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘இலங்கையின் மிகவும் போற்றப்பட்ட கார்ப்பரேட்டுகள்’ விருது வழங்கும் நிகழ்வில் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக மிகவும் பாராட்டப்பட்ட முதல் 10 நிறுவனங்களில் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டது, மேலும், இலங்கை வர்த்தக சபை அதன் சிறந்த கார்ப்பரேட் குடிமகனுக்கான பேண்தகைமை விருதுகள் 2020 நிகழ்வில் இலங்கையின் சிறந்த 10 கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒருவராக HNB இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply