‘ரீலோட் பொறியில்’ இருந்து வாடிக்கையாளரை விடுவிக்கும் எயார்டெல் தொலைத் தொடர்பு துறையில் Freedom Packsகளுடன் மறுவரையறை செய்கிறது

Share with your friend

எயார்டெல் உலகத் தரம் வாய்ந்த, இடையூறுகள் அற்ற 4G வலைப்பின்னலில் ‘Freedom Packs’களை அறிமுகம் செய்வதன் மூலம் தொலைதொடர்பு நிலப்பரப்பை மாற்றியமைத்துள்ளது. ஒரேயொரு Reload மூலம், எயார்டெல் ‘Freedom Packs’ முழு மாதத்திற்கும் போதுமான மற்றும் சகல தரவு மற்றும் உரையாடல் நன்மைகளை வழங்குகின்றன. இதில் எந்த நிபந்தனைகளும் உட்படுத்தப்படவில்லை. இவை அனைத்தும் எயார்டெல்லின் உலகளாவிய தரம் வாய்ந்த, இடையூறு இல்லாத (Buffer-free) 4G வலைப்பின்னலில் சிறந்த அனுபவத்துடன் வருகின்றது.

இந்த ‘Freedom Packs’ மூலம், வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு பல முறை அதிக வெளிப்படைத்தன்மை, நிபந்தனையற்ற மற்றும் அதிக அழைப்பு நன்மைகளுடன் மீண்டும் Reload செய்ய வேண்டிய அவசியத்தை எயார்டெல் நீக்கியுள்ளது. கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக இணைய பயன்பாடும் கணிசமாக அதிகரித்துள்ளது. புதிய Packs வாடிக்கையாளர் புரிதலை அடிப்படையாகக் கொண்டது மற்றும் புத்தாக்கமான வாடிக்கையாளர் சேவையைப் பற்றிய எயார்டெல்லின் உட்பார்வையை எடுத்துக்காட்டுகிறது.

வௌ;வேறு பயன்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்றவாறு நான்கு வௌ;வேறு விதங்களில் இந்த Packsகள் வெளிவந்துள்ளன, மேலும் ஒப்பிட முடியாத வாடிக்கையாளர் அனுபவத்துடன் 5 மடங்கு அதிக மதிப்பை வழங்குகிறது. இந்த Pயஉமளகளில் ஒவ்வொன்றும் சமூக ஊடகங்கள், WFH> SFH உள்ளிட்ட எந்தவொரு இணையத் தேவைக்கும் பயன்படுத்தக்கூடிய தாராள அதிவேக தினசரி Dataவை உள்ளடக்கியது. உரையாடல் பயன்பாட்டிற்காக, அனைத்து Packsகளும் எல்லையற்ற எயார்டெல் அழைப்பு மற்றும் எந்தவொரு வலைப்பின்னல் அழைப்புக்கும் போதுமான நிமிடங்கள் மற்றும் SMS ஆகியவற்றை வழங்குகின்றன. அத்துடன் நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களுக்கு அப்பால் எந்தவொரு தொலைத்தொடர்புக்கும் அழைப்பை ஏற்படுத்தினால் அதற்கான ஏனைய வலைப்பின்னல் அழைப்பு கட்டணத்தை 66% எயார்டெல் குறைத்துள்ளது, இது ‘Freedom Pack’இன் மற்றொரு தனித்துவமான அம்சமாகும்.

எயார்டெல் தங்களது ‘Freedom Pack’ பயன்பாட்டிற்கு அப்பால் கூடுதலான Dataவைத் தேடும் வாடிக்கையாளர்களுக்காக சிறந்த விலையுடன் கூடிய Data Top-up  அட்டைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அனைத்து Data பயனர்களை மகிழ்விக்கும் ஒரு அம்சமாகும்.

cid:image002.png@01D78202.28CDF250

‘இந்த பிரம்மாண்டமான அறிமுகத்தின் மூலம், எயார்டெல் லங்கா தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்களுக்கு மிகவும் தேவையான எளிமையையும் சிறந்த மதிப்பையும் கொடுக்கிறது. பாவனையாளர்கள் இப்போது உலகத் தரம் வாய்ந்த 4G வலைப்பின்னலில், எந்தவொரு கட்டுப்பாடுகளையும் பற்றி கவலைப்படாமல், எங்களது ‘Freedom Packs’களை பயன்படுத்தி அதிக பயன் அடையலாம். இப்போது எயார்டெல்லுக்கு மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என எயார்டெல் ஸ்ரீலங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷீஷ் சந்திரா கூறினார்.

இலங்கையில் ஒரு நாளில் சுமார் 3 மில்லியன் ரீசார்ஜ்கள் மொத்தமாக பயன்படுத்தப்படுகின்றன. இது 14 மில்லியனுக்கும் அதிகமான வயது வந்தோருடன் ஒப்பிடும்போது ஒரு அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரமாகும். சந்தையில் கார்ட்களின் பெருக்கத்தால் இந்த போக்கு தீவிரமடைகிறது. இது பொதுவாக உரையாடல் மற்றும் Dataகளுக்கான சிறப்புப் Packsகள், பயன்பாட்டின் நேர நிபந்தனைகள், தரம் குறித்த நிபந்தனைகள் மற்றும் சமூக ஊடகங்களில் கவனம் செலுத்தும் தனித்தனி Packsகள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற அனைத்தையும் விரிவுபடுத்துகிறது. இதன் விளைவாக, பாவனையாளர்கள் அவர்கள் எதை செலவிடுகிறார்கள் என்பதையும், அவர்கள் அதற்கு ஈடாக வாங்குவதையும் கண்காணிக்க முனைகிறார்கள் – எப்போதும் மீண்டும் ரீலோட் பொறிமுறைக்கு செல்கிறார்கள்.

எயார்டெல் மூலம் ‘Freedom Packs’ பாவனையாளர்கள் இப்போது இந்த சுழற்சியை தவிர்க்க முடியும், மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே Reload செய்ய வேண்டும். பயன்பாட்டு கட்டுப்பாடுகள் இல்லாததால் ஒரு பாவனையாளர் தங்கள் மொபைல் தேவைகளை வழக்கமாக எடுத்துக்கொள்வதற்கு ஒரு தடவை Reload செய்வது போதுமானது. Packsகளின் வடிவமைக்கப்பட்ட  விலைப்புள்ளிகள் சராசரி  Prepaid பயனர்களின் மாதாந்திர செலவீனத்தின் மதிப்பை விட 5 மடங்கு வரை வழங்குகிறது.

2011ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதிலும் இலங்கையில் தொலைத்தொடர்பின் மிகப்பெரிய முதலீட்டாக ‘Freedom Packs’ கருதப்படுகின்றது. எயார்டெல்லின் நோக்கத்திற்காக கட்டப்பட்ட 4G வலைப்பின்னல் 99% இடையூறு இல்லாத Streaming, குறிப்பிடத்தக்க வகையில் விரைவாக பதிவேற்றல் (Loading) நேரங்கள் மற்றும் 4G சமிக்ஞைகளைக் கொண்ட மேம்பட்ட உட்புற கவரேஜ் உள்ளிட்ட சிறந்த பாவனையாளர் அனுபவத்திற்கும் உறுதியளிக்கிறது.

பாரதி எயார்டெல் லங்கா நிறுவனம் தொடர்பாக:

2009 ஜனவரி 12ஆம் திகதி இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் (எயார்டெல் லங்கா) நிறுவனம் தற்போது ஒருமில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும். தமது வணிக செயற்பாடுகளை ஆரம்பித்த 2009ஆம் ஆண்டிலிருந்து 3 வருட குறுகிய காலப்பகுதிக்குள் எயார்டெல் நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்த சேவையை வழங்கியதோடு இன்று நாடு முழுவதிலும் தமது சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு வலயமைப்பு சேவைகள் மற்றும் நிறுவன ரீதியான தீர்வுகள் உட்பட டிஜிட்டல் தொலைத்தொடர்பு சேவைகள் பலவற்றையும் வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு www.airtel.lk என்ற இணையத்தளத்தை பார்வையிடவும்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply