இலங்கையில் உறைய வைக்கப்பட்ட கிறிஸ்பி சிக்கன் முன்னோடிகளாக நியு அந்தனீஸ் ஃபார்ம்ஸ் திகழ்கின்றது

Share with your friend

ஆரோக்கியமான தேசத்துக்கான போஷாக்கான இறைச்சி வகைகளை வழங்குவதில் கீர்த்தி நாமத்தைக் கொண்டுள்ள, இலங்கையில் கோழி இறைச்சி உற்பத்தியில் முன்னோடிகளாகத் திகழும் நியு அந்தனீஸ் பார்ம்ஸ் (பிரைவட்) லிமிடெட், உறைய வைக்கப்பட்ட கிறிஸ்பி சிக்கன் சந்தையில் தனது பிரசன்னத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக தனது விநியோக தந்திரோபாயத்தை விரிவாக்கம் செய்து, இந்தப் பிரிவில் தனது நிலையை மேலும் உறுதி செய்துள்ளது.

கிறிஸ்பீஸ் எனும் வர்த்தக நாமத்தின் கீழ் சந்தைப்படுத்தப்படுவதுடன், தங்கப் பழுப்பு நிறத்திலான இந்த சிற்றுணவு, ஹரித சிக்கன் தரச் சான்றிதழின் கீழ் பசுமையாகவும், பாதுகாப்பாகவும் உற்பத்தி செய்யப்பட்டு, போஷாக்கு நிறைந்ததாகவும், அன்ரிபயோடிக் அற்றதாகவும் அமைந்துள்ளது.

நியு அந்தனீஸ் ஃபார்ம்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் சுரவீர கருத்துத் தெரிவிக்கையில், “பாவனையாளர்கள் உடனடியாக தயாரித்துக் கொள்ளக்கூடிய தரமான சிற்றுணவை நுகர்வது நோக்கி தம்மை மாற்றி வரும் நிலையில், உறைய வைக்கப்பட்ட இறைச்சி வகைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.” என்றார். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், நேர்த்தியான நிலைப்பாட்டை நியு அந்தனீஸ் ஃபார்ம்ஸ் கொண்டுள்ளது. 

அண்மைய மாதங்களில் பெருமளவான வளர்ச்சியை இறைச்சி உற்பத்தியாளர் பதிவு செய்திருந்தது. உற்பத்தி மற்றும் விநியோகத் தொடர் ஆற்றல்களில் பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டிருந்ததுடன், சர்வதேச சந்தைகளில் செயற்பாடுகளை விஸ்தரிப்பது தொடர்பிலும் தனது வெற்றிகரமான ஏற்றுமதி தந்திரோபாயத்தில் உள்வாங்கியுள்ளது.

உள்நாட்டைப் பொறுத்தமட்டில், 2022 என்பது, நியு அந்தனீஸ் ஃபார்ம்ஸ் நிறுவனத்துக்கு பல முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் சாதனைகளை ஏற்படுத்தியிருந்தது. தளம்பல்களுடனான தொழிற்துறை சூழ்நிலைகளில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்திருந்தது. பத்தரமுல்லயில் அதிகளவு இடவசதிகளுடன், நவீன இறைச்சி சுப்பர்மார்க்கெட்டான அந்தனீஸ் மீட்லரியை திறந்திருந்தது. இது விரைவில் விற்பனைத் தொடராக வளர்ச்சியடையும். தொரகடபலிய எனும் தனது ஒன்லைன் இறைச்சி விற்பனை நிலையத்தினூடாக, நாடு முழுவதிலும் இலவச விநியோக சேவையை மேற்கொள்வதுடன், ஹரித சிக்கன் தெரிவுகளுக்கு 100சதவீதம் கொம்போஸ்ட் செய்யக்கூடிய பொதியிடல் தீர்வுகளை வழங்குவதற்கும் தன்னை மாற்றியிருந்தது.

உள்நாட்டவர்களின் சுவைகளை தொடர்ச்சியாக நிவர்த்தி செய்வது மற்றும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை விஞ்சுவது போன்றவற்றுக்கமைய, தனது வர்த்தக நாமங்களில் ஹரித ஹரி, கிறிஸ்பீஸ், சிக்கோ, ஸ்பைசிடைசி, அந்தனீஸ் ப்ரீகட் மற்றும் சிக்கன்என்ட்ஸ் ஆகியனவும், சொசேஜ்கள், கோல்ட் கட்ஸ், முட்டைகள், வாசனைத் திரவியங்கள் மற்றும் சோஸ் வகைகள் போன்றனவும் அடங்கியுள்ளன.

நியு அந்தனீஸ் ஃபார்ம்ஸ், கோழிப் பண்ணைகளுக்கு மூலப் பொருட்களை தெரிவு செய்வது முதல், அவற்றை பதப்படுத்தி பேணுவது வரையில், தனது முழு விநியோகத் தொடரிலும் கடுமையான கொள்கைகள் மற்றும் செயன்முறைகளைக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய சிக்கன் சம்மேளனத்தின் (NCC) விலங்கு நலன்புரி விதிமுறைகளையும் பின்பற்றுகின்றது. இதர சான்றிதழ்களில் GMP, HACCP, ISO 22000, உள்நாட்டு மற்றும் சர்வதேச ஹலால் சான்றிதழ்கள் போன்றன அடங்கியுள்ளன. பச்சை இல்ல வாயு வெளியேற்றங்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் உயிரியல்ரீதியில் உக்கும் பொதியிடல் தீர்வுகள் போன்றவற்றுக்கான ISO 14064-1:2018 தேவைப்பாடுகளை பூர்த்தி செய்துள்ள ஒரே கோழி இறைச்சி உற்பத்தியாளராகவும் திகழ்கின்றது. நிறுவனத்தின் இதர முயற்சிகளில் பூஜ்ஜிய கழிவு வெளியேற்றச் செயற்பாடுகள் மற்றும் உயர்மட்ட கழிவுநீர் வழிகட்டல் வசதி போன்றனவும் அடங்கியுள்ளன.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply