உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழகத்தில் வணிக மற்றும் பொறியியல் பட்டங்களை மாற்றுவதற்கான வாய்ப்பினை வழங்கும் SLIIT

Share with your friend

இலங்கை மற்றும் பிராந்தியத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமது பட்டக் கல்வியை அவுஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற எட்டுப் பல்கலைக்கழக குழுமத்தில் (Go8) ஒன்றான உலகின் முன்னணியான குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழகத்தில் மாற்றிக் கொள்வதற்காகு SLIIT 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் அரிய வாய்ப்பை வழங்கவுள்ளது. SLIIT நிறுவனம் குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழகத்துடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டாண்மையின் ஊடாக தெற்காசியாவிலேயே சர்வதேச ரீதியிலான பட்டங்களை வழங்குவதில் முன்னணியாளர் என்ற ஸ்தானத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தனித்துவமான வாய்ப்பானது இலங்கை மற்றும் இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஏனைய மாணவர்கள் செலவுச் சுருக்கமான முறையில் முன்னணி ஆய்வு, கற்பித்தல் நிறுவனத்தில் தமது பட்டங்களைப் பெற வழிவகுக்கிறது. 

தற்பொழுது 134 நாடுகளிலிருந்து 50,000ற்கும் மேலதிகமான மாணவர்கள் அங்கு தங்கியிருந்து கல்வியைப் பெற்று வருவதுடன், 2022 கியூஎஸ் உலகப் பல்கலைக்கழக தரப்படுத்தலுக்கு அமைய குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழகம் உலகில் 47வது சிறந்த பல்கலைக்கழகமாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்களைவிட குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழகம் பல தேசிய கற்பித்தல் விருதுகளை வென்றுள்ளமை பெருமைக்குரியதாகும். மூன்று கம்பஸ்கள் மற்றும் 40 கற்பித்தல் மையங்கள் ஊடாக 100ற்கும் அதிகமான ஆய்வு நிலையங்கள் மற்றும் Siemens, Boeing, Rio Tinto, Pfizer, Baosteel போன்ற 400ற்கும் அதிகமானவற்றுக்கு உலகளாவிய ரீதியிலான உலக ஆய்வுப் பங்காளர்காளக இணைய மாணவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குகிறது. அவுஸ்திரேலியாவிலேயே அதிக ஈடுபாடுகளைக் கொண்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பல்கலைக்கழகம் என அங்கீகரிக்கப்பட்டுள்ள குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழகம், நாட்டில் உயர்ந்த பட்டதாரிகளை உருவாக்கி மாணவர்களின் திருப்தி தொடர்பான மதிப்பீடுகளிலும் பெயர்பெற்றுள்ளது. இதுபோன்ற காரணங்களாலேயே சர்வதேச மாணவர்கள் மத்தியில் குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழகத்துக்கு சிறந்த கேள்வி காணப்படுகிறது.

உயர்ந்த திறமை கொண்ட பணியாளர்களின் ஊடான சிறப்பான கற்பித்தல் மற்றும் கற்றலுக்காக இன் நீண்டகால அர்ப்பணிப்புடன், குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழகத்தின் பட்டக்கல்வியில் இணையும் அனைவருக்கும் திறன் மற்றும் ஊக்குவிக்கக்கூடிய கற்பிப்பதலுக்கான அணுகல் காணப்படுகிறது.

பொறியியல்துறை மாணவர்கள், இளங்கலை பொறியியல் (ஹார்னஸ்), சிவில், இளங்கலை பொறியியல் (ஹார்னஸ்), இலத்திரனியல், இளங்களை பொறியியல் (ஹார்னஸ்) அல்லது இயந்திரவில் ஆகிய பாடங்களைத் தெரிவுசெய்யலாம். அதேநேரம், வணிகப் பட்டத்தைத் தெரிவுசெய்யும் மாணவர்கள் வணிக நிர்வாக இளமாணி, வணிக இளமாணி, பொருளாதார இளமாணி ஆகிய பட்டப் பாடநெறிகளைத் தெரிவுசெய்யலாம். இந்தப் பொறியியல் மற்றும் வணிகத் துறைத் திட்டங்களில் தமது கல்வி கற்றலை குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழகத்துக்கு மாற்றுவதற்கு முன்னர் இரண்டு மற்றும் ஒரு வருடங்கள் SLIIT இல் கல்வியைத் தொடரவேண்டும். குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழகப் பட்டத் திட்டங்களுக்கு மாணவர்கள் நேரடியாக SLIIT இற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதுடன், குயின்ஸ்லான்ட் பல்கலக்கழகத்தில் தமது கற்றலை மாற்றுவதற்கு உதவி செய்ய அர்ப்பணிப்புடான பணியாளர்கள் உள்ளனர். 

உலக வணிகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் பங்களிப்புச் செலுத்தவல்ல தலைமைத்துவம் மிக்க பட்டதாரிகளை உருவாக்குவதில் குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழகம் நன்மைதிப்பைக் கட்டியெழுப்பியுள்ளது. குயின்ஸ்லான்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள் அவர்களின் கடுமையான மற்றும் விடாமுயற்சியுடன் கூடிய வேலை அணுகுமுறை காரணமாக பணியிடங்களில் அவர்கள் பெறுமதிமிக்க சொத்துக்களாக விளங்குகின்றனர்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply