ஒரு பாரமுயர்த்தியின் கதை: பவர் தனது 80 வருட கால பாரம்பரிய சுவிஸ் பாரமுயர்த்திக்கு பிரியாவிடை வழங்கியது

Share with your friend

தினசரி எமது பணியிடங்களில் இலகுவாக பணிபுரியும் தளத்துக்கு செல்வதற்கான நடமாடல் தேவையை நிவர்த்தி செய்யும் பாரமுயர்த்திகளின் (எலிவேற்றர்) முக்கியத்துவத்தைப் பற்றி நாம் அதிகம் சிந்திப்பதில்லை. ஆனாலும் அவற்றின் பல தசாப்த கால வரலாற்றை எடுத்துப்பார்த்தால், அவற்றினுள் நாம் மேற்கொண்ட சந்திப்புகள், பெறுமதி வாய்ந்த உரையாடல்கள் மற்றும் ஏற்படுத்திக் கொண்ட புதிய நட்புகள் போன்றன மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்திருக்கும். சிறிய, நெருக்கமான பகுதியாக அமைந்திருந்தாலும், வாழ்க்கையில் அது அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கியிருக்கும்.

பாரமுயர்த்தியுடன் ஆழமான உணர்வுபூர்வ பிணைப்பை நாட்டிலுள்ள பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான பவர் கொண்டுள்ளது. அவ்வாறான சுமார் 80 வருட கால வரலாற்றைக் கொண்ட பாரமுயர்த்திக்கு அண்மையில் பவர் பிரியாவிடை வழங்கியிருந்தது.

பவர் நிறுவனத்தின் கொள்முதல் மற்றும் நிர்வாக பொது முகாமையாளர் ஷேன் பீற்றர்ஸ், சுவிஸ் எலிவேற்றர் வர்த்தக நாமமான டிரேட் Schindler இன் இலங்கையில் 33 வருடங்களுக்கு மேலாக பிரதிநிதிகளாக செயலாற்றும் பிரமோட்டர்ஸ் லிமிடெட் இணை முகாமைத்துவ பணிப்பாளர் அனோமால் டி சொய்ஸா உடன் பவரின் பாரமுயர்த்தியில் இறுதியாகப் பயணம் மேற்கொண்டனர். 2022 ஜனவரி 31ஆம் திகதி காலை 10.18 எனும் சுபவேளையில் புத்தம் புதிய Schindler பாரமுயர்த்தி பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

“elevator whisperer” என செல்லமாக அழைக்கப்படும் பீற்றர்ஸ், இந்த பாரமுயர்த்தியின் பராமரிப்பு பணிகளை கடந்த 24 வருடங்களாக மேற்கொண்டிருந்தார். பவர் நிறுவனம் தனது பழமையான பாரமுயர்த்திக்கு பிரியாவிடை வழங்கும் அதே காலப்பகுதியில், பெப்ரவரி மாத இறுதியில் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு பீற்றர்ஸ் தீர்மானத்துள்ளமையும் விசேட அம்சமாகும். இவருக்கும் பாரமுயர்த்திக்குமிடையிலான உறுதியான பந்தம் பவர் வரலாற்றில் நீங்கா நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும்.

1941 ஆம் ஆண்டில் இலங்கை, சிலோன் என அழைக்கப்பட்ட காலப்பகுதியில், Schindler இன் முதலாவது வாடிக்கையாளராக பவர் திகழந்தது. தற்போது இலங்கையில் காணப்படும் மிகவும் பழமையான Schindler பாரமுயர்த்தியாக திகழ்வதாக நம்பப்படுகின்றது. 80 வருட கால சிறந்த சேவைக்கு பின்னர், பாரமுயர்த்தி மேலும் 80 வருடங்கள் வரையில் இயங்கும் திறன் படைத்ததாக காணப்பட்டாலும், துரதிர்ஷ்டவசமாக அதன் பராமரிப்புக்கு அவசியமான உதிரிப்பாகங்கள் உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 80 வருடங்களாக முழுமையாக இயங்கும் நிலையில் பவர் இந்த பாரமுயர்த்தியை பயன்படுத்தியிருந்தது.பவர் மற்றும் சுவிஸ் நாட்டின் பல்தேசிய நிறுவனமான Schindler இடையிலான நீண்ட கால உறவு என்பதனூடாக, நாளொன்றில் ஒன்றறை பில்லியனுக்கு அதிகமான மக்கள் நகர்த்துவதற்கு பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது. இரு நிறுவனங்களும் சுவிஸ் பாரம்பரியங்கள் மற்றும் பெறுமதிகளில் ஆழமான பிரசன்னத்தைக் கொண்டுள்ளன. புதிய Schindler பாரமுயர்த்தி, நவீன தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு உள்ளம்சங்களைக் கொண்டுள்ளதுடன், சிறந்த நகர்வுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தாம் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளிலும் நம்பிக்கை, தங்கியிருக்கும் திறன், தரம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுடன் 125 வருட கால புரட்சிகரமான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை பவர் கொண்டாடும் நிலையில், புதிய புறத்தோற்றத்தை வழங்குவதாகவும் அமைந்துள்ளது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply