டோக்கியோ சீமெந்து குழுமத்துடன் பேராதனை பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் பிரிவு கைகோர்த்து, ‘Industry–University Collaboration Day 2025’ நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. கல்விச் செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்துறை பங்காளர்களுக்கிடையே ஈடுபாட்டை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

ஜுலை 28 ஆம் திகதி இரத்மலான, நீர் மற்றும் துப்புரவுக்கான சிறப்பு மையத்தின் கேட்போர் கூடத்தில் எற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி. ஹரினி அமரசூரிய கலந்து கொண்டார். இதர விருந்தினர்களில் பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித், பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர். லிலந்த சமரநாயக்க மற்றும் சிவில் பொறியியல் பிரிவின் தலைமை அதிகாரி பேராசிரியர். குஷான் விஜேசுந்தர, சிரேஷ்ட பீட அங்கத்தவர்கள், புகழ்பெற்ற தொழிற்துறை நிபுணர்கள் மற்றும் கடந்த கால மற்றும் தற்போது பயிலும் பட்டதாரி மாணவர்கள் போன்றவர்களும் அடங்கியிருந்தனர்.

பிரதமர் கலாநிதி. ஹரினி அமரசூரிய தமது விசேட உரையின் போது, சர்வதேச நியமங்களுக்கு பொருந்தும் வகையில் STEM கல்வியை ஊக்குவிக்க, கல்வி மறுசீரமைப்பின் முக்கியத்துவம், தொழிற்துறையை மேம்படுத்தி, அவசியமான அபிவிருத்தி இலக்குகளை நிவர்த்தி செய்வதற்கு பல்கலைக்கழக ஆய்வின் நிலைப்பாடு மற்றும் தேசத்தின் எதிர்காலத்தை மாற்றியமைப்பதற்கு சமத்துவமான கல்வி வாய்ப்புகளின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இணைந்த பணிகள், நிஜ உலக பிரச்சனைகளை தீர்க்கும் திறன்களைக் கொண்ட மற்றும் தொழிற்துறையில் செயலாற்றக்கூடிய பட்டதாரிகளை தயார்ப்படுத்துகின்றமைக்காக பல்கலைக்கழகத்தின் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டுதல்களை தெரிவித்திருந்தார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் திணைக்களத்தின் இந்த வருடாந்த நிகழ்வின் போது, சிவில் பொறியியல் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் படைத்த பட்டதாரி மாணவர்களின் ஆய்வு திறன்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. பிரத்தியேகமான சிந்தனைகள் மற்றும் புத்தாக்கம் போன்றவற்றினூடாக தற்போதைய பொறியியல் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய யோசனைகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய கட்டமைப்பாக அமைந்திருந்தது. அரசாங்கம், அரச அதிகார அமைப்புகள், ஆய்வு நிலையங்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி அமைப்புகள் மற்றும் பொறியியல் மாணவர்கள் போன்ற பல தரப்பினரை ஒன்றிணைத்து, உறுதியான தொழிற்துறைசார்-கல்விக் கட்டமைப்பு கைகோர்ப்பை ஊக்குவித்திருந்தது.
சிவில் பொறியியலின் முழுமையான நிரலில் கட்டமைப்பு, புவியியல் தொழினுட்பம், போக்குவரத்து, நீர் வளங்கள் மற்றும் சூழல் பொறியியல், நிகழ்வில் உள்ளடக்கப்பட்ட போஸ்டர் கண்காட்சிகள், வாய்மூல விளக்கங்கள் மற்றும் கல்வி-தொழிற்துறைசார் பங்காண்மைகளின் நேர்வு பற்றிய ஆய்வுகள் போன்றன அடங்கியிருந்தன. இந்த நிகழ்வின் விசேட அம்சமாக, மாணவர்கள் இரண்டு நிமிடங்களினுள் தமது ஆய்வுத் திட்டங்கள் பற்றிய சுருக்கமான விளக்கங்களை வழங்கியிருந்தனர். துரிதமான விளக்கக்காட்சிகள் நடைமுறை பொறியியல் தீர்வுகளை வலியுறுத்தின, மாணவர்களுக்கு நிஜ உலகத் தேவைகளுடன் இணைந்த துறையின் அதிநவீன ஆராய்ச்சி திறன்களை முன்னிலைப்படுத்த வாய்ப்பளித்தன. மேலும், சிவில் பொறியியல் பிரிவின் பீட அங்கத்தவர்களால் ஆழமான தொழிற்துறை ஈடுபாட்டுக்கான வாய்ப்புகளை வழங்கியிருந்ததுடன், மாணவர்கள், கல்விமான்கள், தொழிற்துறை நிபுணர்கள் மற்றும் கொள்கை வடிவமைப்பாளர்கள் மத்தியில் அர்த்தமுள்ள உரையாடலுக்கு வழிகோலியிருந்தன.
சிவில் பொறியியல் பிரிவுடன் நீண்ட காலமாக டோக்கியோ சீமெந்து குழுமம் பேணும் பங்காண்மையை மேலும் தொடரும் வண்ணம், ‘Industry-University Collaboration Day 2025,’ இன் ஏக அனுசரணையாளராக இணைந்து வழங்கியிருந்த பங்களிப்பினூடாக, தொழிற்துறை தலைவர்களை எதிர்கால பொறியியலாளர்களாக தயார்ப்படுத்துவது மற்றும் பிரயோக ஆய்வை மேம்படுத்துவது போன்றவற்றை கவனம் செலுத்தியிருந்தது. டோக்கியோ சீமெந்தின் நவீன வசதிகள் படைத்த ஆய்வு மற்றும் விருத்தி ஹப் பகுதியான Construction Research Centre (CRC) க்கு, சீமெந்து மற்றும் கொங்கிரீட் போன்றவற்றில் புத்தாக்கங்களை வெளிப்படுத்த இந்த நிகழ்வு வாய்ப்பாக அமைந்திருந்தது. அதனூடாக மேம்படுத்தப்பட்ட, நிலைபேறான நிர்மாணத் தீர்வுகளை வழங்குவதில் நிறுவனம் கொண்டுள்ள தலைமைத்துவம் மேலும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. பேராதனை பல்கலைக்கழகத்துடன் கொண்டுள்ள நீண்ட கால பிணைப்பை இந்த நிகழ்வு மேலும் மேம்படுத்தியிருந்ததுடன், உலகத் தரம் வாய்ந்த அறிவு பகிர்வை மேற்கொண்டு, உள்நாட்டு நிர்மாணத்துறையை முன்னேற்றுவதை ஊக்குவிப்பதில் குழுமம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
படங்கள்:
பேராதனை பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் பிரிவின் பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு மாணவர்கள், தமது புத்தாக்கமான தீர்வுகளை நிகழ்வில் வெளிப்படுத்துவதை காணலாம்.