ஹேமாஸ் உடன் ‘Hoppers London’ இணைந்து நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பியவர முன்பள்ளி சிறுவர்களுக்கு போஷாக்கு பொதிகளை வழங்க நடவடிக்கை

Share with your friend

ஐக்கிய இராஜ்ஜியத்தின் புகழ்பெற்ற உணவகமான ‘Hoppers’, ஹேமாஸ் அவுட்ரீச் மையத்துடன் கைகோர்த்து, பியவர முன்பள்ளி மாணவர்களுக்கு போஷாக்கு உணவுப் பொதிகளை வழங்க முன்வந்துள்ளது. இதனூடாக இளம் பராய வளர்ச்சியின் போது எழும் மந்த போஷாக்குடன் தொடர்புடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த பல சிறுவர்கள் மற்றும் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மந்த போஷணை மற்றும் பட்டினி நிலை எழுந்துள்ளது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், ‘Hoppers’ உணவகம், ஹேமாஸ் அவுட்ரீச் மையத்துடன் இணைந்து பியவர முன்பள்ளிகளைச் சேர்ந்த சிறுவர்களின் போஷாக்குத் தேவைகளை தமது ‘Feeding the Future’ திட்டத்தினூடாக நிவர்த்தி செய்ய முன்வந்திருந்தன.

‘Feeding the Future’திட்டம் நாடு முழுவதையும் சேர்ந்த ஆரம்ப பருவ கால மற்றும் பராமரிப்பு விருத்தி (ECCD) அதிகாரிகளின் உதவியுடன் முன்னெடுக்கப்படுவதுடன், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மொனராகலை, மன்னார் மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மோசமாக பாதிக்கப்பட்ட 15 பியவர முன்பள்ளிகளைச் சேர்ந்த 367 குடும்பங்களுக்கு தலா 25 ஸ்ரேளிங் பவுண்கள் பெறுமதியான போஷாக்குப் பொதிகளை வழங்கும்.

‘Feeding the Future’ திட்டத்தின் குறுங்கால நோக்கம் என்பது, முன்பள்ளி சிறுவர்களுக்கு அவசியமான போஷாக்கை பெற்றுக் கொடுத்து, அவர்களின் விருத்திகள் முறையாக நிவர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. சிறுவர்கள் தமது ஆரம்ப பாடசாலைக் கல்வியை முறையாகத் தொடர்வதற்கும் அதனூடாக அவர்களின் ஆரம்ப பருவ கல்விச் செயற்பாடுகளைத் தொடர்வதற்கு ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. நீண்ட கால அடிப்படையில், நெருக்கடி சூழல் சீராகியதும், திட்டத்தினால் ஏனைய தேவைகள் குறித்து கவனம் செலுத்தப்படும்.

இந்தப் பங்காண்மை தொடர்பில் ஹேமாஸ் அவுட்ரீச் மையத்தினதும், AYATI Trust ஸ்ரீ லங்காவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷிரோமி மசகொரல கருத்துத் தெரிவிக்கையில், “மந்த போஷணை என்பது இலங்கையின் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு பாரிய பிரச்சனையாக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக, நெருக்கடியின் காரணமாக பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவிகளை வழங்க எதிர்பார்க்கின்றோம். ஹேமாஸ் அவுட்ரீச் மையத்தினால் எப்போதும் இலங்கையின் பின்தங்கிய நிலையிலுள்ள சிறுவர்களின் வாழ்க்கைக்கு ஆரம்ப சிறுவர் பராமரிப்பு மற்றும் விருத்தி நடவடிக்கைகளினூடாக, வளமூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக எம்முடன் Hoppers London இணைந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இதனூடாக இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் பியவர முன்பள்ளிகளைச் சேர்ந்த சிறுவர்களுக்கு அவசியமான போஷாக்கைப் பெற்றுக் கொடுக்கக்கூடியதாக உள்ளது.” என்றார்.

ஹேமாஸ் அவுட்ரீச் மையம் என்பது 2002 ஆம் ஆண்டு இலங்கையில் நிறுவப்பட்ட அனைவரையும் உலகத்தினுள் உள்வாங்கும் வகையிலமைந்த நலன்புரி நம்பிக்கை நிதியமாக அமைந்துள்ளது. நாடு முழுவதையும் சேர்ந்த பின்தங்கிய சிறுவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த முன்பள்ளிக் கல்வியைப் பெற்றுக் கொடுப்பது, உயர் தரம் வாய்ந்த சிகிச்சைசார் இடையீடுகளினூடாக மாற்றுத்திறன் படைத்த சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது மற்றும் மாற்றுத்திறனுடன் தொடர்புடைய மனப் பயத்தை இல்லாமல் செய்வது ஆகியன எமது இலக்குகளாக அமைந்துள்ளன.ஹேமாஸ் அவுட்ரீச் மையத்தின் தன்னேற்புத்திட்டம் என்பது, இலங்கையின் பின்தங்கிய சிறுவர்கள் மத்தியில் ஆரம்பக் கல்வி வழங்கல் மற்றும் பராமரிப்பினூடாக வாழ்க்கைக்கு வளமூட்டுவது என்பது அமைந்துள்ளது. So இதுவரையில் ஹேமாஸ் அவுட்ரீச் மையத்தினால் நாடு முழுவதையும் சேர்ந்த 70,000க்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது. பியவர (முன்பள்ளித் திட்டம்), AYATI (மாற்றுத்திறன் படைத்த சிறுவர்களுக்கான தேசிய நிலையம்) மற்றும் எக்க சே சலகமு (Down Syndrome இனால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மீது கவனம் செலுத்தல்) போன்றன ஹேமாஸ் அவுட்ரீச் மையத்தின் பிரதான திட்டங்களாக அமைந்துள்ளன.


Share with your friend