2021 ஆம் ஆண்டிற்கான டிஜிட்டல் இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய குளிரூட்டிகளை அறிமுகப்படுத்தும் சம்சுங்

Share with your friend

இலங்கையின் முன்னணி இலக்ட்ரோனிக்ஸ் பிராண்டுகளில் ஒன்றான சம்சுங் அண்மையில் 2021ஆம் ஆண்டிற்கான புதிய குளிரூட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இது டிஜிட்டல் இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஐந்து விதங்களாக மேம்படுத்தப்பட்டுள்ளது, இது மேம்பட்ட ஸ்மார்ட் நிர்வகிப்புகள் மற்றும் PM 1.0 ஃபில்டர்கள் மற்றும் எளிதில் மாறக்கூடிய ஃபில்டர்களுடன் கூடிய (5 in 1) குளிரூட்டி தொகுப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பொருத்தமான சுத்தமான காற்று, மின்சக்தி சேமிப்பு, பல்வேறு வசதிகள் மற்றும் குளிரூட்டும் மாதிரிகள் போன்ற ஒவ்வொரு குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக இந்த புதிய அளவிலான குளிரூட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதிவேக Wind-Free குளிரூட்டி

உங்கள் வாழ்க்கை முறை தேவைகளுக்கு ஏற்ப 2021ஆம் ஆண்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய தயாரிப்பு வரிசை இப்போது சொஃப்ட்லொஜிக், சிங்கர், சிங்ஹகிரி, தம்ரோ மற்றும் சம்சுங் இலக்ட்ரோனிக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். சம்சுங் 10 வருட உத்தரவாதத்துடன் டிஜிட்டல் இன்வெர்ட்டர் குளிரூட்டிகளை அறிமுகம் செய்துள்ளது. புதிய அளவிலான குளிரூட்டிகள் 1,34,990 ரூபா முதல் ஏனைய குளிரூட்டிகள் 510,999 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சம்சுங் இலங்கையின் முகாமைத்துவப் பணிப்பாளர் கெவின் சுங்க்சு யூ, ‘குளிரூட்டி இனி ஆண்டிற்கு ஒரு காலத்திற்கு மாத்திரம் பயன்படுத்துவதற்கான தயாரிப்பு அல்ல. மக்கள் வேலை செய்யும் மற்றும் வீட்டிலிருந்து கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் இடம் பெறும் இந்த கால கட்டத்திலும், அவர்களின் முக்கிய கவனமாக இருப்பது சுத்தமான காற்றைப் பெற்றுக் கொள்வதற்கான ஆற்றல் கொண்ட செயற்பாட்டில் ஆகும். வாடிக்கையாளரை அடிப்படையாகக் கொண்ட அனைத்தையும் நாங்கள் செய்கிறோம், இந்த புதிய மாதிரிகள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறையின் மாற்றங்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. எங்களது புதிய குளிரூட்டிகள் PM 1.0 மற்றும் எளிதில் மாற்றக்கூடிய ஃபில்டர்கள் ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் உறுதி செய்கின்றன, அதே நேரத்தில் எங்கள் ஐந்து மாதிரிகளுக்கு மாற்றியமைக்கக்கூடிய (5 in 1) இன்வெர்ட்டர் குளிரூட்டிகள் ஆற்றல் திறன் கொண்டவை மற்றும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைகளுக்கும் ஏற்ப தனிப்பயனாக்கலாம். அண்மைய Wind-Free குளிரூட்டி மாடல்களில் ஸ்மார்ட் மற்றும் AI அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த புதிய தொகுப்பு குளிரூட்டிகள் இலங்கை குளிரூட்டி சந்தையில் எங்களது முன்னணி நிலையைத் தக்கவைக்க தொடர்ந்து உதவும் என்று நம்புகிறோம்.’ என அவர் தெரிவித்தார்.

ஐந்து மாதிரிகளுக்கு பயன்படுத்தக்கூடிய (5 in 1) குளிரூட்டிகள்

சம்சுங் குளிரூட்டி மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை

நுகர்வோரின் தற்போதைய முக்கியமான கவனமாக இருப்பது அவர்களது ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்துவதால் இந்த புதிய தயாரிப்புகள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இட்டுச் செல்கின்றன. Wi-Fi வசதியுடன் இயக்க முடிவதுடன், வேகமில்லாத Wind-Free குளிரூட்டி தொடரில் உள்ள PM 1.0 ஃபில்டர் வாடிக்கையாளருக்கு மிகச் சிறந்த தூசித் துகள்களைப் பிடித்து வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் கிருமி நீக்கம் செய்த பிறகு சுத்தமான மற்றும் புதிய காற்றை வழங்குகிறது. PM 1.0 ஃபில்டர், கழுவப்பட்டு மீண்டும் பயன்படுத்த முடியும், இது ஃபில்டர்களை மாற்றுவதற்கான கூடுதல் பராமரிப்பு செலவை வாடிக்கையாளர்களுக்கு சேமிக்கிறது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் சுத்தமான காற்றை அனுபவிக்க அனுமதிக்கிறது.

மேம்படுத்தப்பட்ட மின்சக்தி சேமிப்பு

இன்று, வீடு எல்லாவற்றிற்கும் ஒரு மையமாக மாறிவிட்டது. இந்த புத்தாக்க சாதனங்கள் மின்சாரத்தை சேமிப்பதோடு, குளிர்ச்சியான மற்றும் வசதியான சூழலையும் வழங்குகின்றன, அதே நேரத்தில் வீட்டிலிருந்து வேலை செய்தல் / கற்றல், புதிய வாழ்க்கை முறையின் தேவைகளுக்கு ஏற்ப 5 ஐந்து மாதிரிகளுக்கு (5-in -1) மாற்றவும் முடியும். வாடிக்கையாளர்களின் பொதுவான பயன்முறை – Party Mode (120%), இயல்பான பயன்முறை – Normal Mode (100%), இனிமையான பயன்முறை – Pleasant Mode (80%), சுற்றுச்சூழல் முறை – Eco Mode (60%) மற்றும் முகப்பு தனியாக பயன்முறை – Home Alone Mode (40%) மாதிரி போன்ற வௌ;வேறு செயல்திறன் நிலைகளைக் கொண்ட குளிhசாதனங்களின் 5 மாதிரிகளின் தேர்வு உள்ளது. இங்கே அறையின் வெப்பநிலைக்கு ஏற்ப எவ்வித தொடுகையும் இல்லாமல் தன்னியக்க முறையில் குளிரூட்டி செயற்படுவதோடு அறையை குளிர்ச்சியைப் பேணும். கூடுதலாக, டிஜிட்டல் இன்வெர்ட்டரினால் (Digital Inverter Boost) இயக்கப்படுவதுடன், வாடிக்கையாளர் தொடர்ந்து குளிரூட்டியை இயக்குவதன் மூலமும், விரும்பிய வெப்பநிலைக்கு ஏற்ப அணைக்காமல் பராமரிப்பதன் மூலமும் 41% வரை மின்சக்தியை சேமிக்க முடியும். 2021இல் இன்வெர்ட்டர் குளிரூட்டி மாதிரித் வரிசை சூழலுக்கு உகந்த R32 வாயு மற்றும் செப்பு மின்தேக்கிகள் உள்ளன.இப்போதெல்லாம், மக்கள் வீட்டில் அதிக நேரம் செலவிடுவதால் குளிரூட்டிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது, மேலும் சம்சுங் அறிமுகப்படுத்திய மின்சக்தி சேமிப்பு இன்வெர்ட்டர் குளிரூட்டிகளைப் பயன்படுத்துவதன் மூலமும், தங்கள் வீட்டிலிருந்து வேலை செய்தல், கற்றல் செயற்பாடுகளின் போதும் மின் கட்டணத்தை குறைக்க முடியும். கூடுதலாக, சம்சுங்கின் அண்மைய 5 in 1 திவேக Wind-Free குளிரூட்டிகள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறைகளுக்கு கவர்ச்சிகரமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply