99x மீண்டும் இலங்கையிலும் ஆசியாவிலும் பணி புரிவதற்கு சிறந்த இடமாக மதிப்பிடப்பட்டுள்ளது

Share with your friend

ஸ்தீரமற்ற இந்த காலகட்டத்தில், 99x ‘தனது வர்த்தகத்தை வழமை போல் தொடர்ந்து மேற்கொள்வதுடன் மற்றும் வாடிக்கையாளர்களுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செயற்படுகிறது. புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான 99x, இலங்கையின் பணி புரிவதற்கு சிறந்த இடமாக தொடர்ச்சியாக ஒன்பதாவது முறையாகவும், ஆசியாவில் ஐந்தாவது முறையாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆசியாவின் 100 சிறந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 99x நிறுவனம் 17வது இடத்தைப் பிடித்தது.

ஆசியாவின் மிகப்பெரிய ஊழியர்களின் அனுபவத்தை உடைய, ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள 16 நாடுகளில் 3.3 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்கள் இந்த பிராந்தியத்தில் பணிபுரிவதற்கான சிறந்த இடங்களைத் தீர்மானிக்க கணக்கெடுக்கப்பட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் செய்யப்பட்ட மதிப்பீடுகளில் இலங்கையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 14 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 99x கூட இடம்பிடித்திருந்தது.

‘பல ஆண்டுகளாக, திருப்தி மற்றும் மகிழ்ச்சியான ஊழியர்களின் தொகுதி உயர் வர்த்தக உற்பத்தித்திறனுக்கு வழிவகுக்கிறது என்பதை எங்களால் பார்க்க முடிந்தது. எங்கள் வாடிக்கையாளர்களை கவனிப்பதை விட எங்கள் ஊழியர்களை கவனித்துக்கொள்வது முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். 2020ஆம் ஆண்டில், கொவிட் தொற்றுநோய் எல்லாவற்றையும் முடக்கியபோது, எங்கள் நிறுவனம் வழக்கம் போல் வர்த்தகத்தை தொடர்ந்தது, ஏனெனில் எங்கள் பணியாளர்கள் பணியிட கலாச்சாரத்தால் நன்கு வழிநடத்தப்பட்டனர். Great Place to Work தரவரிசையில் ஒவ்வொரு ஆண்டும் 99xஇல் முதலிடத்தில் இருப்பது எங்களுக்கு ஒரு பெரிய சாதனையாகும், மேலும் இந்த ஆண்டு மீண்டும் பட்டியலிடப்பட்டதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.’ என 99x நிறுவனர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி மனோ சேகரம் கூறினார்.

The Great Place to Work ஊடாக பணியிட கலாச்சாரத்தை இரண்டு கண்ணோட்டத்தில் பார்க்கிறது: ஒன்று ஊழியர் கண்ணோட்டம். இது நம்பிக்கை குறியீட்டு கணக்கெடுப்பைப் பயன்படுத்தி ஊழியர்களின் பணி அனுபவத்தைப் பற்றிய உணர்வுகளை ஆராய்கிறது, மற்றொன்று நிர்வகிப்பாளர்களின் கண்ணோட்டமாகும். தனிப்பட்ட நடத்தை மூலம் நோக்கம் கொண்ட தொடர்புகளின் தரத்தை உறுதி செய்ய நிர்வாகத்தின் கலாச்சார தணிக்கை கருவியின் பயன்பாட்டை இது மதிப்பீடு செய்கிறது.

‘ஊழியர்களின் பிரதிபலிப்புக்களை பெறுவதன் மூலம், இந்த தரப்படுத்தலை வழங்குவதன் மூலம், தங்களை அடையாளம் காணும் வாய்ப்பைப் பெறுவது பற்றி நாங்கள் 99xக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றோம்.’ என Great Place to Workஇன் இலங்கைக்கான பிரதான நிறைவேற்று அதிகாரி க்ஷனிக்கா ரத்நாயக்க தெரிவித்தார். 99x உடன் வெலை செய்வதற்கு அல்லது வர்த்தகம் செய்ய தீர்மானிக்கும் எவருக்கும் குறிப்பிடத்தக்க தீர்மானம் மிக்க சிறந்த செயற்பாட்டு கலாச்சாரத்தை கொண்டிருக்கும் இந்த பட்டியலிடப்பட்டதற்குள் தமது ஊழியர்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய திறன் மற்றும் அர்த்தமுள்ள மதிப்பையும் சேர்க்கும். தொடர்ச்சியாகத் தலைவர்கள் மற்றும் மனித திறமையை அதிகபட்ச அளவீட்டுக்கான மேம்பாடு பணி புரிவதற்கான சிறந்த இடத்தை உருவாக்கும் தன்மையைக் கொண்டிருக்கும்.’ என அவர் மேலும் தெரிவித்தார்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply