Daraz Cares உடன்; LEADS அமைப்புக்கு உங்களது உதவிகளை வழங்கி பலதரப்பட்ட இம் முன்னெடுப்புக்களில் நீங்களும் இணைந்து, பாதிக்கப்பட்ட சமூகங்களில் உள்ள பிள்ளைகளின் வாழ்க்கையை உயர்த்திட பங்களியுங்கள்

Share with your friend

Daraz, தெற்காசியாவின் இலத்திரனியல் வர்த்தக முன்னோடியாக,  உலகின் நான்கு மிகப் பாரிய முன்னணி எல்லைப் பொருளாதாரங்களில் இலத்திரனியியல் வர்த்தக மற்றும் டிஜிட்டல்மயமாக்களுக்கு உந்துசக்தியை  வழங்குகிறது.  Daraz Cares மூலம் மேற்கொள்ளப்படும் Daraz CSR முயற்சிகள் மூலமாகவும் தொழில்நுட்பத்தின் ஊடாக சமூகங்களை மேம்படுத்த னுயசயண  தங்களது அர்ப்பணிப்பை வழங்குகிறது.

Daraz Cares என்பது, இலத்திரனியல் வர்த்தக சக்தி மூலம் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள Daraz தளத்தில் நன்னொடை முயற்சிகளை கொண்ட பிரிவாகும். LEADS நிறுவனத்திற்கு தொழில்நுட்பம் மற்றும் நன்கொடைகளை திரட்டுதல் மற்றும் இலங்கையில் LEADS செய்து வரும் ஆக்கபூர்வமான பணியை நிலைநிறுத்துதல் போன்றவற்றிற்காக Daraz Cares சமீபத்தில் LEADS Sri Lanka (LEADS)உடன் இணைந்துக் கொண்டது.

இக் கூட்டு முயற்சி மூலம், Daraz பாவனையாளர்கள் இணையத்தளத்திலும் Daraz மொபைல் பயன்பாட்டிலும் LEADS நன்கொடைகளை ஓர்டர் செய்யலாம்;. மீண்டும் பயன்படுத்தக்கூடிய சானிட்டரி நாப்கின்கள், பாடசாலை பைகள் மற்றும் பிள்ளைகளுக்கான புத்தகங்களுக்கு நன்கொடை அளிப்பது முதல், குழந்தைகளுக்கான சிகிச்சைப் பாதுகாப்புக்கு நன்கொடை அளிப்பது வரை, டுநுயுனுளு இனால் முன்மொழியப்பட்ட பல காரணங்களுக்காக நன்கொடைகளை ஓர்டர் செய்யலாம்;.

LEADS Sri Lanka (LEADS) என்பது, இலங்கையின் பிள்ளைகளுக்கான பாதுகாப்பான சூழலையும் பிரகாசமான எதிர்காலத்தையும் உருவாக்குவதற்காக 1983 இல் நிறுவப்பட்ட ஒரு தேசிய நிறுவனமாகும்,  LEADs இன் முக்கிய கவனம் பிள்ளைகள் பாதுகாப்பு மற்றும் பிள்ளைகளின் உரிமைகளை மேம்படுத்துதல்.

இவ் அமைப்பு சிறுவர் துஷ்பிரயோகத்தில் இருந்து மீண்டவர்களுக்கான  மறுசீரமைப்பு பராமரிப்பை வழங்குதல். மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய சமூகங்களில் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவுவதற்கான வழிகள் தொடர்பாகவும்  செயற்பட்டு வருகின்றது.

துஷ்பிரயோகத்தில் இருந்து மீண்டு வந்த பிள்ளைகளின் உளவியல் தேவைகளை வழங்குவதற்காக மனநலப் பயிற்சியாளர்கள் மற்றும் சேவைகளை வழங்க தேவையான கருவிகளை கொண்டுள்ள பராமரிப்பாளர்களின் சிறப்புக் குழுவுடன் LEADS சமூகத்திற்கு சேவை செய்கிறது. அவர்கள் யாழ்ப்பாணம், பதுளை மற்றும் கொழும்பில் உள்ள LEADS மையங்கள் மூலம் குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத சிகிச்சைப் பராமரிப்பை எளிதாக்குவதன் ஊடாக மீண்டு வந்த இளம் பருவத்தினர் முழுமையான சிறந்த பராமரிப்பினை பெறுவதனை உறுதி செய்கின்றனர்.

LEADS சட்டச் செயன்முறைகள் முழுவதும் சட்ட உதவி மற்றும் வழிகாட்டுதலை வழங்குகிறது, பிள்ளைகளை ஆதரிப்பது மற்றும் துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பிய பிள்ளைகள் மீண்டும் பாதிக்கப்படுவதைக் குறைக்கும் நோக்கத்துடன். பிள்ளைகளின் குடும்பங்களுடன் பின்தொடர்தல் ஆலோசனைகளை நடாத்துகிறது, அதனால் அதிலிருந்து மீண்டு வந்தவர்கள் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான சூழலுக்குத் திரும்ப முடியும், மேலும் சரியான மறு ஒருங்கிணைப்பு ஆதரவுடன், LEADS பிள்ளைகள் பாடசாலைக்கு திரும்புவதன் மூலமோ அல்லது தங்களுக்கான சிறந்த எதிர்காலத்தினை உருவாக்கத் தேவையான தொழில் பயிற்சியைப் பெறுவதன் மூலமோ இயல்பு நிலைக்குத் திரும்புவதை உறுதி செய்கிறது. 

பிற LEADS திட்டங்களில் பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் இலங்கையில் பிள்ளைகளின் கல்வி மற்றும் ஊட்டச்சத்து தேவைகளுக்கு நிதி திரட்டுவது ஆகியவை உள்ளலடங்கும்.

Daraz Cares அதன் பாவனையாளர்கள் மற்றும் பிள்ளைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆர்வத்துடன் இருக்கும் அனைத்து நபர்களையும் இப்போதே LEADS முன்னெடுப்புக்களில் கைக்கோர்க்கவும், 

Daraz Cares இல் அதன் பல்வேறுபட்ட காரணங்களை ஆதரிக்கவும் அழைக்கிறது. LEADS பற்றிய மேலதிக தகவல்களுக்கு, https://www.leads.lk/ இணையதளத்தைப் பார்வையிடவும்;.

இன்றே உங்களின் நன்னொடைகளை வழங்கி, சிறுவர்களின் வாழ்க்கையை மாற்றுங்கள், மாற்றத்தை ஏற்படுத்துங்கள்!


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply