DFCC வங்கி Most Trusted Retail Banking மற்றும் Best Customer Service Banking வர்த்தகநாமம் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளது

Share with your friend

இலங்கையின் முதன்மையான வணிக வங்கியான DFCC வங்கியானது  அனைவருக்கும் ஏற்ற வங்கி என்ற தனது அந்தஸ்தை தொடர்ந்தும் உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் ஐக்கிய இராச்சியத்தின் Global Brands Magazine சஞ்சிகையால் 2021 ஆம் ஆண்டிற்கான “வங்கிச்சேவை மற்றும் நிதி” என்ற தரப்படுத்தலின் கீழ் ‘மிகவும் நம்பிக்கைமிக்க சில்லறை வங்கிச்சேவை வர்த்தகநாமம்’ (Most Trusted Retail Banking Brand) மற்றும் ‘இலங்கையிலுள்ள மிகச் சிறந்த வாடிக்கையாளர் சேவை வங்கி வர்த்தகநாமம்’ (Best Customer Service Banking Brand in Sri Lanka) ஆகிய விருது அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது.  

இந்த பாராட்டுக்கள், அனைத்து பங்குதாரர்களையும் உள்வாங்கும் வகையில் மதிப்பை தோற்றுவிப்பதற்கான வங்கியின் தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துக்காட்டுவதுடன், இலங்கையை மீண்டு எழும் திறன் கொண்டதாக மாற்றி, கட்டியெழுப்புவதில் அதன் அர்ப்பணிப்பையும் புலப்படுத்துகின்றன. 2015 ஆம் ஆண்டில் வங்கி கூட்டிணைப்புச் செய்யப்பட்ட பின்னர் இந்த விருது அங்கீகாரங்கள் DFCC வங்கிக்கு முதன்முறையாக கிடைக்கப்பெற்றுள்ளமையால் இது வங்கியைப் பொறுத்தவரையில் ஒரு சாதனை இலக்காகவும் மாறியுள்ளது.

Global Brands விருதுகள் பல்வேறு துறைகளில் செயல்திறன் மற்றும் நற்பயனளிக்கும் நிறுவனங்களில் சிறப்பைக் கொண்டாடுவது மற்றும் முன்னிலைப்படுத்துவது என்ற முதன்மையான ஒரு நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டன. நிதி, கல்வி, விருந்தோம்பல், வாழ்க்கை முறை, மோட்டார் வாகனங்கள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் அசாத்தியமான வகையில் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களை இந்த விருது கௌரவிக்கிறது. மேன்மையை சிறப்பாக முன்னெடுத்து, தாம் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவர்கள் என்பதற்கான ஒரு மேடையை சிறப்பாக இட்டுக்கொள்கின்ற முக்கியமான தொழிற்பாட்டாளர்களை இவ்விருதுகள் இனங்கண்டு உரிய அங்கீகாரத்தை அவர்களுக்கு வழங்குகின்றன. தலைசிறந்த சேவை வழங்கலின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை இனங்கண்டுகொள்வதையும், அவர்களின் செயல்திறனை ஈற்றிலே உலகளாவிய அங்கீகாரத்துடன் அவற்றுக்கு வெகுமதி அளிப்பதையும் இந்த விருது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த சாதனை குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட, DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான லக்ஷ்மன் சில்வா அவர்கள் கூறுகையில், “இந்த விருதுகள் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்க DFCC வங்கி முன்னெடுக்கும் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும், அதே சமயம் இப்போது ஈடுஇணையற்ற ஒரு சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை உருவாக்குவதில் உலக மட்டத்தில் இனங்காணப்படுவதற்கான ஒரு வாய்ப்பும் இதன் மூலமாக கிடைத்துள்ளது. டிஜிட்டல் ரீதியாக தொழிற்படுகின்ற மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட ஒரு வங்கியாக, தேசத்திற்கு சேவையாற்ற புத்தாக்கமான, அனைவரையும் உள்ளடக்கிய, பொருந்தக்கூடிய செயல்முறைகள் மற்றும் கட்டமைப்புகளைப் பயன்படுத்துவது எப்போதுமே எங்களுக்கு மிக முக்கியமானது என்பதுடன், மேலும் அவ்வாறு செயற்படுவதில் நாம் அடைந்துள்ள வெற்றியை இந்த பாராட்டுக்கள் வெளிப்படுத்துகின்றன. மிகவும் நம்பகமான வங்கியாகவும், வாடிக்கையாளர் சேவையில் மிகவும் சிறந்து விளங்குவதாகவும் கொண்டாடப்படுவது, தொடர்ந்து நம்மை மேம்படுத்துவதற்கும், வரும் ஆண்டுகளில் வங்கி மற்றும் நிதித்துறையில் சிகரத்தை எட்டுவதற்கும் நம்மைத் தூண்டுகிறது. இது இலங்கையில் முதன்மையான வணிக வங்கியாக நிலைபேண்தகு மதிப்பை உருவாக்கத்திற்கான எங்கள் வாக்குறுதியின் ஒரு உள்ளார்ந்த அங்கமாகும்,” என்று குறிப்பிட்டார்.

தற்போது பரவி வருகின்ற தொற்றுநோயால் பல வணிகங்கள் முன்னர் எப்போதும் முகங்கொடுத்திராத சவால்களை எதிர்கொள்ளும் போதிலும், இதனால் ஏற்பட்ட எதிர்மறையான சமூக-பொருளாதார விளைவுகளை எதிர்த்துப் போராடுவதில் DFCC வங்கியின் ஊழியர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அயராது உழைத்துள்ளனர். Global Brands Magazine Awards விருதுகள் போன்ற சர்வதேச மட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் சேவை மேன்மை அங்கீகாரத்தைப் பெற்றக்கொள்ளும் திறன் தொடர்பில் DFCC வங்கி பெருமிதம் கொள்வதுடன், தமது பிரதான விழுமியங்கள் மற்றும் இலக்குகளை தொடர்ந்தும் சிறப்பாகக் கட்டிக்காத்து வருவதையும் இதன் மூலமாக வெளிப்படுத்தியுள்ளது. இந்த விருதுகள் இந்த சோதனைமிக்க காலகட்டங்களில் வங்கியின் நிலைபேண்தகு மதிப்பு உருவாக்கத்தை முன்னிலைப்படுத்த உதவுவதுடன், வாடிக்கையாளர்களின் சீவனோபாயங்களை அவர்களின் தனது மூலோபாயத்தின் கருப்பொருளாகப் பேணி, எதிர்வரும் தலைமுறைகளுக்கு ஒரு நிலைபேண்தகு எதிர்காலத்தை உருவாக்கி பாதுகாப்பதற்கான தனது பயணத்தை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது. 


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply