Engineering Nexus இன் 07வது பதிப்பில் ‘Clear the Mist: The Cloud Revealed’ என்ற தலைப்பில் அண்மையில் நடைபெற்ற ஒன்றுகூடலில் Sysco LABS Sri Lanka வின் சிரேஷ்ட மென்பொருள் நிர்மாணிப்பாளர் க்ரிஷான் செனவிரத்ன நிபுணத்துவப் பேச்சாளராகக் கலந்துகொண்டார்.
தொழில்நுட்ப வல்லுனர்களிடையே திறன்களைப் பகிர்ந்துகொள்வதற்கான தளத்தை உருவாக்குவதற்கும், மென்பொருள் பொறியியல் சிந்தனைத் தலைமைத்துவத்தை இத்தொழில்துறை முழுவதும் பெருக்கும் நோக்கிலும் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான Sysco LABS, WSO2, LSEG Technology மற்றும் Pearson Lanka ஆகியவற்றின் சிரேஷ்ட தொழிலநுட்ப வல்லுனர்களின் எண்ணக்கருவில் உருவானதே Engineering Nexus தொடராகும்.
Cloud ற்கு சொந்தமான மென்பொருள் தயாரிப்பு என்ற தொனிப்பொருள் குறித்து 07வது ஆராய்ந்திருந்ததுடன், இதில் தகவமைப்புக் கொண்ட Cloud கலாசாரத்தை உருவாக்கல், Cloud ஐ பயன்படுத்தி மரபு அமைப்புக்களை நவீனப்படுத்தல், Cloud கருவிதொகுதிகள் மற்றும் உட்கட்டமைப்பில் உள்ளடங்குபவை குறித்த பரிந்துரைகள் போன்ற உபதலைப்புக்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன. Cloud, WSO2 இன் உப தலைவரும் பிரதி CTO வுமான அஃப்ஹாம் அசீஸ், LSEG Technology இன் மென்பொருள் நிர்மாணிப்பாளர் சமில லியனகே, Pearson Lanka இன் தொழில்நுட்ப நிபுணரும், விண்ணப்பங்களுக்கான பொறியியலாளருமான ருமேஷ் அதுகோரல ஆகியோர் இந்த அமர்வில் நிபுணர்களாகக் கலந்துகொண்டனர்.
Cloud ற்கு சொந்தமானதை நோக்கிய பயணம்’ என்ற தலைப்பில் கலந்துரையாடிய க்ரிஷான் செனவிரட்ன குறிப்பிடுகையில், Cloud ற்கு சொந்தமானதை நோக்கிய பயணத்தில் தொழில்நுட்பத்துக்கு அப்பால் மேலும் சில விடயங்கள் முக்கியமானவையாகக் காணப்படுகின்றன என்றார். அவர் மேலும் வலியுறுத்துகையில், “Cloud native என்பது Micro-services மற்றும் Kubernetes ஆகியவற்றுக்கும் அப்பால்பட்டது என்பதுடன் இது தொழில்நுட்பம் அல்லது கருவித் தொகுதி என்பதற்கும் மேலானது. Cloud native ஒரு திட்டவட்டமான பதிலைக் கொண்டிருக்காவிட்டாலும், மேலிருந்து கீழ் நோக்கிப் பணியாற்றுவதற்கான புதிய வழிகளைத் தழுவுகையில் ஊடழரன கம்பியூட்டிங்கின் முழுமையான நன்மையையும் பயன்படுத்தி விண்ணப்பங்களை அமைப்பதற்கான தத்துவம் அல்லது அணுகுமுறையைப் பின்பற்றுகிறது” என்றார்.
செனவிரட்ன மேலும் விபரிக்கையில் : “Cloud native நோக்கி முன்னோக்கிச் செல்வதற்கானவற்றை சிரேஷ்ட தலைமைத்துவம் கொள்முதல் செய்வதுடன், மேலிருந்தான சீரமைப்பு முக்கியமானது இல்லாவிட்டால் இது வெற்றியளிக்காது. நேரம் மற்றும் முயற்சியை எடுப்பதாக இந்தப் பயணம் அமையும் என்பதுடன் தலைமைத்துவம் இதற்கு ஒரு காரணியாக இருக்க வேண்டும்.” நிறுவனங்களுக்கு அவர் தனது ஆலோசனையைப் பகிர்ந்துகொள்கையில், “Cloud இல் நீங்கள் எந்தளவு உட்செல்கின்றீர்கள் என்பதைவிட, உங்கள் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதற்கு முக்கியமான மக்கள், செயற்பாடு மற்றும் கலாசாரம் என்பவற்றுக்குத் தேவையான முதலீடுகளை மேற்கொள்ளுங்கள்” என்றார்.
நிபுணர்த்துவம் மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட குழு உறுப்பினர்களிடம் பார்வையாளர்கள் முன்வைத்த கேள்விகளுக்கான விடைகளை வழங்கும் அமர்வுடன் இந்த நிகழ்வு முடிவுக்கு வந்தது.
கடந்தகால Nexus நிகழ்வைப் பார்வையிட, எதிர்கால Engineering Nexus நிகழ்வுகளில் பங்கெடுப்பதற்கான பதிவுகளை மேற்கொள்ள www.engineeringnexus.lk என்ற இணையத்தளத்துக்கு விஜயம் செய்யவும்.