Flash Charging இற்கு அடுத்தது என்ன? OPPO அறிமுகப்படுத்தும் பாதுகாப்பான, சிறந்த, ஸ்மார்ட், புதிய தலைமுறை Flash Charging தொழில்நுட்பம்

Share with your friend

பயனர் அனுபவ மையக்கருவின் அடிப்படையிலான OPPO VOOC Flash Charge தொழில்நுட்பம்: வேகம், பாதுகாப்பு, நுண்ணறிவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.

உலகளாவிய முன்னணி ஸ்மார்ட் சாதனங்களின் தரக்குறியீடான OPPO தனது “What’s Next for Flash Charging?” (அதிவேக சார்ஜிங்கிற்கு அடுத்த கட்டம் என்ன?) என்பது தொடர்பான ‘OPPO Flash Charge Open Day’ எனும் திறந்த கலந்துரையாடல் தினத்தை அண்மையில் நடாத்தியிருந்தது. வேகமான சார்ஜிங் தொழில்நுட்பம் குறித்த அதன் தற்போதைய ஆராய்ச்சியின் மிக சமீபத்திய அடைவுகளை OPPO இதன்போது வெளியிட்டது.

OPPO VOOC Flash Charge தொடர்பான பிரதான விஞ்ஞானி Jeff Zhang இது தொடர்பில் தெரிவிக்கையில், “OPPO இன் VOOC Flash Charge தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது, சார்ஜிங் அடப்டர், சார்ஜிங் கேபிள், மின்கலம், PMIC உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய முழு வேகமான சார்ஜிங் தொகுதியின் புத்தாக்கத்தினை அடிப்படையாகக் கொண்டது” என்றார். “பயனர்கள் கம்பியற்ற அல்லது கம்பியுடனான சார்ஜிங் தீர்வுகளை தெரிவு செய்த போதிலும், தற்போதைய நிலையில், இலத்திரனியல் சாதனங்களை சார்ஜ் செய்யும்போதான, மிக அவசியமான சூழ்நிலைகளில் கூட பலவிதமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனை VOOC Flash Charge தொழில்நுட்பம் கொண்டுள்ளது.”

Flash Charge தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில், செயல்திறனையும் பாதுகாப்பையும் OPPO எப்போதும் முன்னணியில் வைத்திருக்கிறது. இந்த எண்ணக்கருவின் அடிப்படையில், VOOC Flash Charge தொழில்நுட்பத்தில் பாதுகாப்பை மேம்படுத்த OPPO ஐந்து மடங்கு பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் புதிதாக சேர்க்கப்பட்ட பொருட்கள், செயற்கை நுண்ணறிவு வழிமுறைகள் (AI algorithms), சார்ஜிங் கட்டமைப்புகள் உள்ளிட்ட ஏனைய காரணிகளை எவ்வாறு புத்தாக்கமான முறையில் பயன்படுத்தலாம் என்பது தொடர்பிலும் அது ஆராய்ந்து வருகிறது.

Flash Charge இன் ஐந்து மடங்கு பாதுகாப்பு அமைப்பில் உள்ள உருகி (Fuse) ஆனது, மிகையான மின்சார விநியோகம் இடம்பெறும் வேளையில் அல்லது ஏனைய அசாதாரண விடயங்களின்போது உடனடியாக செயற்பட்டு மின்னை துண்டிக்கிறது. இதற்காக, பாரம்பரிய சிலிகான் ஆழிகளிலும் (Switch) பார்க்க இதில் பயன்படுத்தப்படும் கல்லியம் நைட்ரைட் (GaN) ஆழிகள் அதி வேகம் மற்றும் நம்பகத்தன்மையை வழங்குகின்றன.

A-series இரு-கல மின்கல வடிவமைப்பானது, ஒரே வலுவை வழங்கியவாறு, மின்சாரத்தை குறைத்து  வெப்பம் உருவாவதையும் குறைக்கின்றது. உட்பொதிக்கப்பட்ட AI வழிமுறைகளைக் கொண்ட OPPO இன் தனியுரிமம் கொண்ட மின்கல பாதுகாப்பை கண்டறியும் சிப் (Battery Safety Detection Chip), மின்கலம் வெளிப்புற சேதம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை நிகழ்நேரத்தில் மின்னழுத்த வீழ்ச்சியின் அடிப்படையில் கண்டறிகின்றது. OPPO இவ்வாறான அனைத்து அம்சங்கள் உடனான புதிய கலவை கொண்ட, மின்னோட்டத்தின் சேகரிப்பானின் அடிப்படையிலான ஒரு கூட்டு கட்டமைப்பு பாதுகாப்பு மின்கலத்தை உருவாக்கியுள்ளது.

Smart charging: சார்ஜிங்க வேகம் மற்றும் மின்கல ஆயுளின் சரியான சமநிலையின் அடிப்படையில் பேணப்படுகின்றது.

OPPO தனது புதிய ஸ்மார்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் இந்நிகழ்வின் போது வெளியிட்டது. இது சார்ஜிங் வேகத்தை பாதுகாப்பான வரம்பிற்குள் வைத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அதன் சார்ஜிங் தொழில்நுட்பம், மின்னோட்டத்தை வெவ்வேறு சார்ஜிங் நிலைமைகளில் புத்திசாலித்தனமாக கண்டறிவதன் அடிப்படையில் நிலைமைக்கு ஏற்ப தன்னியக்க முறையில் சரிசெய்கிறது.

எந்தவொரு கணத்திலும் மின்கலம் அதன் பாதுகாப்பின் அடிப்படையில் கொண்டிருக்கூடிய  உச்சபட்ச சக்திக்கு ஏற்ப குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப சார்ஜிங் வேகத்தை அதிகரிக்க முடிகின்றது. இது தவிர, முடிந்தவரை பாதுகாப்பானதாகவும், புத்திசாலித்தனமாகவும் VOOC Flash Charge இனை மாற்றுவதற்காக, மிகவும் குளிரான சூழல்கள் உள்ளிட்ட அதீத சூழ்நிலைகளில் வேகமாக சார்ஜ் செய்வதற்கான தொழில்நுட்பம் உள்ளிட்ட, பல்வேறு மேம்படுத்தல் வழிமுறைகளையும் OPPO ஆராய்ந்து வருகிறது.

2014ஆம் ஆண்டில் VOOC Flash Charge தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, பாதுகாப்பு, செயல்திறன், எளிதான பயன்பாடு ஆகிய மின்கலம் மற்றும் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் பங்களிக்கும் மூன்று முக்கிய பகுதிகள் தொடர்பில் OPPO வின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (R&D) பிரிவானது தொடர்ச்சியாக கவனத்தை செலுத்தி வருகின்றது. 2021 ஜூன் 30 வரை, வேகமாக சார்ஜ் செய்வது தொடர்பான 3,000 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப காப்புரிமைகளுக்கு OPPO ஏற்கனவே விண்ணப்பித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில், OPPO தனது புதிய திட்டமான ‘The Flash Initiative’ முன்முயற்சியை அறிமுகப்படுத்தியது. இது அதன் தனியுரிமம் கொண்ட VOOC தொழில்நுட்பத்தை வாகனங்கள், பொது இடங்கள் மற்றும் பல்வேறு வகையான சாதனங்களுக்குள் அதன் சிப்கள் மூலம் கொண்டு வந்தது.

OPPO Sri Lanka பற்றி

முன்னணி ஸ்மார்ட்போன் தரக்குறியீடான OPPO, அதன் முதலாவது ஸ்மார்ட் போனை 2008 இல் அறிமுகப்படுத்தியதில் இருந்து, அழகியல் திருப்தி மற்றும் புதுமையான தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்து இடைவிடாமல் தொடர்ந்து வருகிறது. இன்று, OPPO தனது வாடிக்கையாளர்களுக்கு Find மற்றும் Reno தொடர்களின் கீழான பரந்த அளவிலான ஸ்மார்ட் சாதனங்களை வழங்குகிறது, ColorOS இயங்குதளம், அதே போன்று OPPO Cloud மற்றும் OPPO + போன்ற இணைய சேவைகள். OPPO, 40 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் இயங்குகிறது. உலகளாவிய ரீதியில் 6 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 5 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அத்துடன் லண்டனில் ஒரு சர்வதேச வடிவமைப்பு மையத்தையும் கொண்டுள்ளது. OPPO இன் 40,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாழ்வியலை உருவாக்க அர்ப்பணித்துள்ளனர். 

2015 இல், இலங்கையில் செல்பி மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் நுண்ணறிவு மென்பொருள்களுக்காக, OPPO அதன் எல்லைகளை விரிவுபடுத்துவதோடு, அதன் முதன்மை ‘F’ தொடர் மற்றும் பிரபலமான Reno தொடர் மூலம் பல மொடல்கள் மூலம், பரந்துபட்ட நுகர்வோர் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது. OPPO Sri Lanka ஆனது, அபான்ஸ், சிங்ககிரி, டயலொக், டாராஸ் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட OPPO விற்பனையாளர்களுடன் வலுவான கூட்டிணைப்பைக் கொண்டுள்ளதுடன், அவை OPPO நாடு முழுவதும் உள்ள இலங்கையர்களை சென்றடைய உதவுகின்றன.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply