2020-2024ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமீயர் லீக் (IPL) உத்தியோகபூர்வ உரிமையாளர்களான Innovative Production Group (IPG) FZE இனால் நன்மதிப்பு பெற்ற Island Nation T20 League போட்டித் தொடரில் Dambulla Giantsஇன் புதிய உரிமையாளராக லண்டனின் கெனரி வோர்ஃபின் பிரதான அலுவலகம் அமைந்துள்ள HAMROவின் தலைமை நிறைவேற்று அதிகாரி Q Khan இன்றைய தினம் புதிய அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடியாகவும், புகழ்பெற்ற தொழிலதிபராகவும் உள்ள Khan அவர்கள், விளையாட்டில் ஆர்வம் காட்டியதற்காக பாராட்டப்பட வேண்டும். அவர் உயர் மட்ட கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தொழில் நிபுணர்களுக்கு அனுசரணை வழங்குகிறார். கானின் வணிக அறிவு மற்றும் விளையாட்டு மீதான ஆர்வம் காரணமாக, அவர் ஆரம்பித்த விளையாட்டு அறக்கட்டளை ஏற்கனவே Lord Taverners, Essex Cricket Foundation, Surrey Cricket Foundation, MCC Foundation மற்றும் National Fast Bowling Academy போன்ற நிறுவனங்களுக்கு உதவ நடவடிக்கை எடுத்துள்ளார். வருங்கால கிரிக்கெட் வீரர்களுக்கு உதவுவதற்கும், இங்கிலாந்து முழுவதும் மற்றும் கிரிக்கெட் விளையாடும் அனைத்து அமைப்புகளுக்கும் குறிப்பிடத்தக்க நிதி திரட்டுவதற்கும் அவர் உறுதியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Innovative Production Group FZEஇன் நிறுவுனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அனில் மோகன் கூறுகையில், ‘விளையாட்டில் உண்மையான பற்றுகொண்ட Q Khanனின் சிறந்த தொழில் வாழ்க்கையின் மற்றுமொரு பக்கத்திற்காக நானும் மற்றும் IPG குழுவும் அவரை வாழ்த்துவதுடன் அவருடன் இணைந்து பணியாற்ற நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்.’
IPG குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜவாத் குலாம் ரசூலினால் Dambulla Giantsஇன் புதிய உரிமையாளராக QKhanஐ ஏற்றுக் கொள்கையில் அவர் இவ்வாறு கூறினார். ‘கான் அவர்கள் உண்மையிலேயே கிரிக்கெட் விளையாட்டிற்கு ஆர்வம் காட்டும் ஒருவர். அவருடன் இணைந்து வேலை செய்வதற்கும் அவரது அனுபவத்தினால் நாம் பல விடயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்பதே எனது கருத்தாகும்.’
கடந்த 20 ஆண்டுகளாக அவர் கிரிக்கெட் தலைமை அதிகாரியாகவும் மற்றும் விளையாட்டுக் கழகத்தின் உப தலைவராகவும் இணைந்த Buckhurst கிரிக்கெட் கழகம் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாத்ததில் பாகிஸ்தானில் நடைபெற்ற வரலாற்று புகழ் பெற்ற MCC சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டார் மற்றும் அதன் முக்கிய ஆதரவாளராக பணியாற்றினார்.
புதிய உரிமையைப் பற்றி கூறுகையில், திரு கான் கூறினார்: ‘இந்த தனித்துவமான வாய்ப்பைப் பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன், Dambulla Giants LPLஇல் ஒரு சிறந்த அணியாக மாற்றியதில் எனது தொழில் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள நான் எதிர்நோக்குகிறேன்.’
தெளிவான தலைமைத்துவத்தை வலியுறுத்துதல், ஒரு குழுவாக பணியாற்றுவது, விளையாட்டுக்கு மரியாதை மற்றும் விளையாட்டை அனுபவித்தல் ஆகிய விடயங்களை கவனத்தில் கொண்டு Q Khan மற்றும் அவரது குழுவினரின் இறுதி இலக்கு Dambulla Giantsஐ போட்டித் தொடரின் வெற்றியாளர்களாக ஆக்க வேண்டும் என்பதாகும்.HAMRO அறக்கட்டளையின் கருத்தானது விளையாட்டின் மூலம் விளையாட்டு வீரர்களின் முழுமையான திறமைகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் இளைஞர்களின் கனவை நனவாக்குவதற்கு போன்றே தலைமைத்துவம் மற்றும் அணி குறித்த உணர்வை மேம்படுத்துவதற்கும் ஒத்துழைப்புக்களை வழங்குவதாகும்