சமீபத்தில் மக்கள் விருதை வென்ற பின்னர் மீண்டும் குறுகிய காலத்தில் கிடைக்கப்பெற்ற மற்றுமொரு அங்கீகாரம் சந்தையில் வர்த்தகநாமத்தின் தசாப்த கால மகத்துவத்தை உறுதிப்படுத்துகிறது
இலங்கையில் மிகவும் இனங்காணல் அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ள சீமெந்து வர்த்தகநாமமான INSEE சங்ஸ்தா, Brands Finance (ஐக்கிய இராச்சியம்) தொகுத்து வெளியிடுகின்ற நாட்டில் உள்ள வர்த்தகநாமங்கள் தொடர்பான மிகவும் விரிவான வருடாந்த பகுப்பாய்வுகளில் ஒன்றான LMD Brands Annual வெளியிட்டுள்ள இலங்கையில் உள்ள மிகவும் அபிமானம் பெற்ற 100 வர்த்தகநாமங்கள் பட்டியலில் தனக்கே உரித்தான ஸ்தானத்தை சம்பாதித்துள்ளது. SLIM Nielsen People’s Awards எனப்படுகின்ற மக்கள் தெரிவு விருதுகளில் தொடர்ச்சியாக 10 ஆவது ஆண்டாக சாதனை படைத்து, 2021 ஆம் ஆண்டிற்கான மக்களின் அபிமானத்தை வென்ற வீடமைப்பு மற்றும் கட்டுமான வர்த்தகநாமமாக அண்மையில் சங்ஸ்தா ஈட்டியுள்ள வெற்றியின் பரபரப்பு ஓய்வதற்குள் தற்போது இந்த இனங்காணல் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளமை, கடந்த பல ஆண்டுகளாக சங்ஸ்தாவால் கட்டியெழுப்பப்பட்ட ஈடுஇணையற்ற நுகர்வோர் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.
“நாட்டின் மிகவும் அபிமானம் பெற்ற சீமெந்து வர்த்தகநாமமாக நாங்கள் மீண்டும் பெயரிடப்பட்டுள்ளதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைவதுடன், இது எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு INSEE சங்ஸ்தா வர்த்தகநாமம் வழங்கிய வாக்குறுதியை நிலைநாட்டுவதில் எங்கள் அர்ப்பணிப்புக்கு சான்றாகும்,” என்று INSEE Cement இன் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் புத்தாக்கத்திற்கான நிர்வாக துணைத் தலைமை அதிகாரியான ஜான் குனிக் அவர்கள் குறிப்பிட்டார். “சவால்மிக்க ஒரு ஆண்டில், நுகர்வோர் பல ஆண்டுகளாக அவர்கள் அறிந்த மற்றும் நேசித்த வர்த்தகநாமங்களின் பால் ஈர்க்கப்படுவதை எங்களால் அவதானிக்க முடிந்தது. INSEE சங்ஸ்தா போன்ற வர்த்தகநாமங்கள், விரைவாக மாறிவரும் நுகர்வோர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் தரத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் சிறப்பாகச் செயற்பட்டுள்ளதுடன், இலங்கையின் முதற்தர வீடமைப்பு கட்டுமானம் மற்றும் தொழில்ரீதியான துறைக்கான சீமெந்து வர்த்தகநாமமாக எங்கள் ஸ்தானத்தைத் தொடர்ந்தும் கட்டிக்காக்கும் எங்கள் உறுதிப்பாட்டிற்காக எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கப்பெறுவதில் பெருமிதம் கொள்கிறோம்,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
INSEE சங்ஸ்தா ஒரு அதிசிறந்த கலவைச் சீமெந்து என்பதுடன், இலங்கையில் SLS 1253 தரத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படுகின்ற முதன்முதலான கலவைச் சீமெந்து தயாரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை பசுமை கட்டிட சபையின் பசுமை அடையாளச் சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், இலங்கை கட்டட நிர்மாணிப்பாளர்கள் கற்கைநிலையத்திடமிருந்து பசுமை அடையாள தங்க விருதையும் (Green Mark Gold Awards) பெற்றுள்ள இலங்கையின் முதல் சீமெந்து தயாரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நிர்மாணிக்கப்படும் வீடுகள் மத்தியில் 3 க்கு 2 என்ற விகிதத்தில் INSEE சங்ஸ்தா சீமெந்தைக் கொண்டே நிர்மாணிக்கப்படுவதுடன், இந்த வர்த்தகநாமம் அதன் உயர்ந்த வேலைத்திறனுக்காகவும், பொறியியல்ரீதியில் மேம்படுத்தப்பட்ட விசேட துகள் வடிவ பண்புகளின் காரணமாக அதிசிறந்த முடிவு வேலைப்பாடுகளுக்காகவும் தனிப்பட்ட வீடுகளை நிர்மாணிப்பவர்கள் மத்தியில் சிறந்த தெரிவாக தொடர்ந்தும் நிலைபெற்றுள்ளது. இந்த துகள் வடிவ பண்புகள் கலவையை மேம்படுத்துகின்றன. இதன் விளைவாக கொங்கிரீட்டின் அமுக்கம் அதிகரிக்கப்படுவதுடன், அரிப்பு ஏற்படுத்தும் விளைவுகள் குறைக்கப்படுன்றன, இதனால் சங்ஸ்தா கட்டமைப்புகள் நீர்க்கசிவற்றவையாகவும், அதிசிறந்த சக்தி கொண்டதாகவும், மிகவும் நீடித்து உழைப்பனவையாகவும் காணப்படுகின்றன.
சமீபத்திய SLSI 1697 தரத்திற்கு அமைவாக, INSEE சங்ஸ்தா கலவைச் சீமெந்து என்ற புதிய கலவை மற்றும் மேம்பட்ட மாறுபாட்டுடன் INSEE சீமெந்து விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. புதிய தரநிலைகள் நிலைபேறுடனான, உயர் செயல்திறன் கொண்ட கொங்கிரீட்டுடன் சந்தைக்கு இன்னும் சிறந்த தயாரிப்பைக் கொண்டு வரும். INSEE சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பா, இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்படும் சந்தையில் ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்தவுள்ளதுடன், கட்டுமானத் துறையை மேலும் மேம்படுத்தவுள்ளது.
உள்ளூர் கட்டுமானத் துறையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் காபன் உமிழ்வைத் தணிப்பதற்கான INSEE Cement நிறுவனத்தின் ஆணைக்கு INSEE சங்ஸ்தா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. தொடர்ச்சியாக சிறப்புத்தேர்ச்சி அடைந்து வரும் உற்பத்தியாக நிலைபேறுடனான கட்டுமானத்திற்கான சிறந்த நடைமுறைகளை முன்னெடுத்துச் செல்வதுடன், INSEE சீமெந்து நாமத்தைக் கொண்ட கட்டமைப்புகளுக்கு நீண்டகால மதிப்பைச் சேர்ப்பிக்கிறது.
நிறுவனம் தொடர்பான விபரங்கள் – INSEE Cement, Sri Lanka
Siam City Cement (Lanka) என்ற பெயராலும் அறியப்படுகின்ற INSEE Cement, Sri Lanka நிறுவனம் தாய்லாந்தின் Siam City Cement Public Company Limited நிறுவனத்தின் ஒரு உறுப்பு நிறுவனமாகும். INSEE Cement, Sri Lanka மாத்திரமே நாட்டில் உள்ள ஒரேயொரு முழுமையாக ஒருங்கிணைந்த சீமெந்து உற்பத்தி நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்றது. இந்நிறுவனம் இலங்கையில் மிகவும் அபிமானம் பெற்ற வர்த்தகநாமங்களான INSEE சங்ஸ்தா கலவைச் சீமெந்து மற்றும் மகாவலி மெரின் சீமெந்து ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகின்றது. அதன் பிரதான வர்த்தகநாமமான சங்ஸ்தா சீமெந்து இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதன்முதல் கலவை சீமெந்து என்பதுடன், இலங்கை பசுமை கட்டிட சபையிடமிருந்து பசுமை அடையாள சான்று அங்கீகாரத்தைப் பெற்ற முதன்முதல் ‘பசுமை சீமெந்து தயாரிப்பும்’ ஆகும். சமீபத்தில், நிறுவனம் பேலியகொடையிலுள்ள உள்ள அதிநவீன INSEE கொங்கிரீட் உற்பத்தி ஆலையில் பிரத்தியேகமயமாக்கப்பட்ட கொங்கிரீட் அடிப்படையிலான தீர்வுகளை (ஏற்கனவே-கலவை செய்யப்பட்ட கொங்கிரீட்) உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளது. இந்த ஆலை சுற்றுச்சூழலுக்கு தீங்கிளைக்காத, பூச்சிய-உமிழ்வு கொண்ட ஒரு ஆலை என்பதுடன் திரட்டுகளையும் நீரையும் மீள்பாவனை செய்து வருகின்றது.
பேலியகொடையில் உள்ள INSEE i2i (புத்தாக்கத்திலிருந்து தொழில்துறைக்கு) கூட்டுப்பணித் தளமானது சந்தையில் வழங்கப்படும் ஆலைகளால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து கொங்கிரீட் மற்றும் சீமெந்துகளின் தொடர்ச்சியான உயர்தரத்தை உறுதிப்படுத்துவதுடன், மேலும் தொழிற்துறைக்கான புதிய தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வெளிக்கொண்டு வரும் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும்.
மேலும், INSEE Cement Sri Lanka நிறுவனம் தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மரத்திற்குப் பதிலாக உபயோகிக்கப்படுகின்ற சீமெந்து அடிப்படையிலான ஒரு பலமான உற்பத்தியான ‘Conwood’ ஐ தற்போது இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது. நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக Mahaweli Marine Cement (Private) Limited மற்றும் INSEE Ecocycle Lanka (Private) Limited ஆகியன இயங்கி வருகின்றன.
தொழில்துறையில் தனது தலைமைத்துவ ஸ்தானத்தையும் சுற்றுச்சூழல் நிலைபேறுக்கு தனது பங்களிப்பையும் சிறப்பாக வெளிப்படுத்தும் INSEE, ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் 2019 இல் இரட்டைத் தங்க விருதுகளைப் பெற்றுள்ளது. INSEE Cement இரசாயனவியல் கைத்தொழில் ஆலைகள் பிரிவில் தங்க விருதைப் பெற்றுள்ள அதேசமயம், INSEE Ecocycle திண்மக்கழிவு மீட்பு / மீள்சுழற்சி / அகற்றல் அல்லது செயலாக்க ஆலைகள் பிரிவில் தங்க விருதைப் பெற்றுள்ளது. மேலும், INSEE Cement ஆனது SLIM-Nielsen People’s Awards 2020 எனப்படும் மக்கள் தெரிவு விருதுகள் நிகழ்வில் தொடர்ச்சியாக பத்தாவது ஆண்டாக வீடமைப்பு மற்றும் கட்டுமான வர்த்தகநாமமாக முடிசூட்டப்பட்டது.
தாய்நிறுவனமான INSEE Group தொடர்பான விபரங்கள்
தாய் நிறுவனமான Siam City Cement (Public) Company Limited (SCCC) இப்பிராந்தியத்தின் கட்டுமானத் தேவைகளை நிறைவேற்றி வருகின்றது. தாய்லாந்தின் சராபுரியில் அமைந்துள்ள அதன் சீமெந்து உற்பத்தித் தொழிற்சாலையானது தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய சீமெந்து உற்பத்தித் தொழிற்சாலையாகக் காணப்படுகின்றது. SCCC பல தசாப்தங்களுக்கும் மேலாக ஈட்டிய நிபுணத்துவம் மற்றும் அறிவைக் கொண்டுள்ளதுடன், இலங்கை போன்ற பிராந்திய சந்தைகளை விரைவாக முன்னேற்றுவதில் முதலீடு செய்வதில் வலுவான கவனம் செலுத்தியுள்ளது. இது நிலைபேறு கொண்ட கட்டுமானத்தில் பெரும் வாக்குறுதியைக் காண்பிக்கின்றது. Siam City Cement Public Company ஆனது இலங்கைக்குப் புறம்பாக கம்போடியா, பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் தாய்லாந்தில் அதன் பிராந்திய சந்தை அடிச்சுவட்டைக் கொண்டுள்ளது. மேலும், அதன் தாய்நிறுவனமானது சிங்கப்பூர், மலேசியா, லாவோஸ், மியன்மார், இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, தென் கொரியா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுக்கும் கரிய ஓடு (கிளிங்கர்) மற்றும் சீமெந்தை ஏற்றுமதி செய்து வருகின்றது.