Roland-Garros உடன் மூன்றாவது ஆண்டைக் கொண்டாடும் OPPO

Share with your friend

பரிஸ் கிராண்ட்ஸ்லாம் 2021 இல் டென்னிஸ் இரசிகர்கள் Roland-Garros இற்கு திரும்புவதையும், OPPO இன் “Play With Heart” பிரச்சாரத்தின் ஆரம்பத்தை பார்வையிட வருவதையும் காண முடியும்

மே 30 ஆம் திகதி ஆரம்பமான, டென்னிஸ் விளையாட்டு Roland-Garros இற்கு திரும்புவதை OPPO கொண்டாடுகிறது. இவ்வாண்டின் போட்டித் தொடர், OPPO இன் பிரீமியம் கூட்டாளருடன் தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டு கொண்டாட்டத்தை குறிப்பதுடன், OPPO பரிஸ் கிராண்ட்ஸ்லாமில் முதல் ஸ்மார்ட்போன் கூட்டாளராகவும் முன்னிலைப்படுத்துகிறது.

இப்போட்டித் தொடரில், உலகின் உயர் மட்ட டென்னிஸ் வீரர்கள் பரிஸுக்கு திரும்புவதோடு மட்டுமல்லாது, டென்னிஸ் இரசிகர்கள் பிரபலமான பரிஸ் மைதானத்திற்கு திரும்புவதையும் குறிக்கிறது. புகழ்பெற்ற களிமண் டெனிஸ் மைதானங்களைச் சுற்றி பார்வையாளர்கள் வருவதை கொண்டாடும் வகையில், “Play With Heart” எனும் ஒரு புதிய பிரச்சாரத்தைத் OPPO ஆரம்பிக்கவுள்ளது,

இப்புதிய பிரச்சாரம் Roland-Garros இல் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, இது தொடர்பில் OPPO அனைத்து சமூக வலைத்தளங்களிலுமுள்ள இரசிகர்களை தங்களுக்கு பிடித்த விளையாட்டுக்கு கௌரவம் செலுத்த ஊக்குவிப்பதுடன், டென்னிஸ் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தும், தனித்துவமான காட்சிகளையும் உள்ளடக்கங்களையும் பகிருமாறு வேண்டுகின்றது. இப்பிரச்சாரம் உலகெங்கிலும் உள்ள சமூக ஊடக செல்வாக்குள்ளவர்களையும் படைப்பாளர்களையும் டென்னிஸ் மீதான தங்கள் அன்பை ஒளிபரப்பவும், பகிர்ந்து கொள்ளவதற்குமாக அழைப்பு விடுக்கிறது.

OPPO வின் Overseas CMO, Gregor Almassy இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில் “டென்னிஸின் மீதான அன்பு அவர்களது ஆத்மாவிலிருந்து வருகிறது, எனவே இப்பிரபஞ்சத்தின் மிக ஆர்வமுள்ள டென்னிஸ் இரசிகர்களுக்கு அவர்கள் அவ்விளையாட்டின் மீதான அவர்களது ஆர்வத்தைக் வெளிப்படுத்தவும், அதனை பகிர்ந்து கொள்ளவும் நாம் அழைப்பு விடுக்கிறோம்” என்றார். “2020 என்பது அனைவருக்கும், குறிப்பாக டென்னிஸ் பிரியர்களுக்கு ஒரு அசாதாரண மற்றும் வெறுப்பூட்டும் ஆண்டாக காணப்பட்டது, எனவே நாம் ‘Play With Heart’ (‘இதயத்துடன் விளையாடு’) எனும் பிரச்சாரத்தைத் ஆரம்பிக்கிறோம். வெற்றியைத் துரத்துவது போன்ற டென்னிஸில் மிகவும் துடிப்பான தருணங்களின் தனித்துவமான மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் விரும்பும் இரசிகர்களின் ஆர்வத்திற்கு புத்துயிரளிக்க நாம் விரும்புவதோடு, Roland-Garros இற்கு டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம்ஸின் வருகையை, இரசிகர்கள் உண்மையிலேயே கொண்டாடும் வகையில், உலகெங்கிலும் உள்ள இரசிகர்களுடன் அதிக அனுபவங்களை தேடி, உருவாக்கவும் நாம் ஊக்குவிக்கிறோம்” என்றார்.

பிரெஞ்சு டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் Gilles Moretton தெரிவிக்கையில், “OPPO உடனான எமது உறவைப் பற்றி நாம் மிகவும் பெருமிதம் கொள்கிறோம், மேலும் இதுபோன்ற சிக்கலான காலங்களிலும் அவர்களது தொடர்ச்சியான ஆதரவை நாம் மதிக்கிறோம். கடந்த ஆண்டுகளைப் போலவே, எமது கூட்டிணைவில், ஆர்வமும் புதுமையும் தொடர்வதுடன், ‘Play With Heart’ பிரச்சாரம் ஒரு பொதுவான DNA மற்றும் பகிரப்பட்ட நோக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், டென்னிஸ் இரசிகர்களை ஒன்றிணைப்பதற்கும், நாம் அனைவரும் அன்பு கொண்டுள்ள விளையாட்டின் மீதான ஆர்வத்தை காட்டவும் அதனை பகிர்ந்து கொள்ளவும் அழைக்கிறது” என்றார்.

‘Play With Heart’ பிரச்சாரத்தை உருவாக்கியுள்ளதன் மூலம், OPPO உலகம் முழுவதும் பல செயல்பாடுகளைத் ஆரம்பிக்கிறது. இதில் ஒன்றே, ‘Wall of Heart’ (‘இதயத்தின் சுவர்’), பரிஸ் மற்றும் இலண்டனில், டெனிஸ் மைதானத்திலிருந்து-சுவர்கள் வரை தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு இரசிகர்களை டென்னிஸ் மீது ஆர்வம் கொள்ள வைக்கிறது.

உலகின் 15ஆம் இடத்திலுள்ளவரும் OPPO பிராண்ட் நண்பரான Gael Monfils இது தொடர்பில் தெரிவிக்கையில், “OPPO உடனான எனது கூட்டிணைவு தொடர்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், டென்னிஸை மேம்படுத்துவதற்காக அவர்கள் செய்து வரும் அனைத்து பணிகளுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்றார். “பிளே வித் ஹார்ட் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன், இது அடுத்த தலைமுறை டென்னிஸ் வீரர்கள் மற்றும் இரசிகர்களுக்கு, இவ்வாண்டு உற்சாகத்திற்கு இட்டுச் செல்லும் என்று நான் நம்புகிறேன்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

‘Play With Heart’ பிரச்சாரம் டென்னிஸ் மற்றும் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்ய உதவுகின்ற, OPPO வின் நீண்டகால உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. Roland-Garros மற்றும் Wimbledon உடனான கூட்டு ஆனது, டென்னிஸ் கோர்ட்டில் சக்திவாய்ந்த தருணங்களுடன் விளையாட்டு மீதான அவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலம், உலகின் எதிர்கால தலைமுறை இரசிகர்களுடன் தொடர்ந்து இணைவதற்கான OPPO வின் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply