TRI-ZEN நிர்மாணப் பணிகள் உறுதியாக முன்னெடுக்கப்படுவதாக ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் அறிக்கை

Share with your friend

ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படும் வதிவிட அபிவிருத்தித் தொகுதியான TRI-ZEN இன் நிர்மாணப் பணிகள் உறுதியாக முன்னெடுக்கப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பு 2 பகுதியில் நிர்மாணிக்கப்படும் TRI-ZEN இன் நிர்மாணப் பணிகள் 2023 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நீடிக்கப்பட்ட சர்வதேச சுகாதார இடர்நிலை காணப்படும் சூழலில், முதலீட்டாளர்கள் மற்றும் தொழிற்துறையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொகுதி 1 இன் 25 ஆம் மாடி, தொகுதி 2 இன் 27 ஆம் மாடி மற்றும் யூனியன் பிளேஸை முகப்பாகக் கொண்ட தொகுதி 3 இன் 29 ஆம் மாடி ஆகியவற்றில் Structural work பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. உள்ளக நிர்மாணப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது தொகுதியின் 13 மற்றும் 14 ஆம் மாடிகள் வரை முன்னேறியுள்ளது. இதன் காரணமாக MEP பணிகளையும் முன்னெடுக்கக முடிந்துள்ளது. நீர் குழாய்கள், தீயணை கருவி கட்டமைப்புகள் மற்றும் மின் வயர் குழாய்கள் பொருத்தும் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. 

இந்திரா டிரேடர்ஸ் (பிரைவட்) லிமிடெட் மற்றும் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் ஆகியவற்றுக்கிடையிலான இணை அபிவிருத்தித் திட்டமாக TRI-ZEN திகழ்கின்றது. TRI-ZEN இன் ஒப்பந்தக்காரரும், சர்வதேச நிர்மாணங்களில் முன்னோடியுமான சீனா அரச நிர்மாண பொறியியல் கூட்டுத்தாபன லிமிடெட் (China State Construction Engineering Corporation LTD), இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியிலும் நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்துள்ளது.

ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் பிரிவுத் தலைமை அதிகாரி நயன மாவில்மட கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த ஆண்டு என்பது இலங்கையின் அனைவருக்கும் பெரிதும் சவால்கள் நிறைந்த காலமாக அமைந்திருந்தது. தொற்றுப் பரவல் காரணமாக பெருமளவு சிக்கல்கள் எழுந்திருந்தன. இந்த சவால்களுக்கு மத்தியிலும், TRI-ZEN நிர்மாணப் பணிகள் உறுதியாக முன்னெடுக்கப்படுகின்றமையை காண முடிகின்றமை பெரிதும் மகிழ்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. எமது அணியினரின் விடா முயற்சி மற்றும் அர்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக் காட்டாக எய்தப்பட்டுள்ள இந்த துரித முன்னேற்றத்தைக் குறிப்பிட முடியும்.” என்றார்.

நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்ததும், TRI-ZEN இல் மூன்று வதிவிட தொகுதிகள், 891 தொடர்மனைகளைக் கொண்டிருக்கும். இவை முறையே ஒன்று, இரண்டு மற்றும் மூன்று படுக்கையறைகளைக் கொண்டிருக்கும். இரண்டு படுக்கையறைகளை கொண்ட தொடர்மனை ஒன்றின் ஆரம்ப விலை 36 மில்லியன் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அலகிலும் உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் இல்ல தொழில்நுட்ப அம்சங்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்பதுடன், வசிப்போருக்கு உயர்ந்தளவு சொகுசை வழங்கும் நவீன உள்ளம்சங்களைக் கொண்டிருக்கும்.

TRI-ZEN இல் பெருமளவு வதிவிட வசதிகள் காணப்படும். பச்சைப் பகுதிகள், ஜொகிங் பகுதி, நீச்சல் தடாகம், உடற் தகைமை மற்றும் ஆரோக்கிய பகுதி மற்றும் விளையாட்டு அறை போன்றன இவற்றில் அடங்கும்.

இந்த தொடர்மனைத் தொகுதியை அதிகளவு கவர்ச்சிகரமானதாக திகழச் செய்வதில் அதன் அமைவிடம் முக்கிய அங்கம் பெறுகின்றது. குறிப்பாக கொழும்பு நகரின் பிரதான போக்குவரத்து மையம், வியாபார மையம், பாடசாலைகள், வைத்தியசாலைகள், களிப்பூட்டும் பகுதிகள் போன்றவற்றுக்கு இலகுவாக செல்லக்கூடிய தூரத்தில் அமைந்துள்ளது. ‘urban smart living’என்பதற்கு புதிய அர்த்தம் சேர்க்கும் வகையில் TRI-ZEN அமைந்துள்ளது.ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் தொடர்பான மேலதிக தகவல்களை +94702294294 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது www.trizen.lk எனும் இணையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply