புதிய OPPO A16 ஐ இலங்கையில் வெளியிடும் OPPO

Share with your friend

உலகளாவிய முன்னணி ஸ்மார்ட் சாதன வர்த்தகநாமமான OPPO, இலங்கையில் OPPO A16 ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. நேர்த்தியான அம்சங்களுடன், OPPO A16 ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் அன்றாட தேவைகளை எவ்வித விட்டுக் கொடுப்பும் இன்றி மேற்கொள்ளும் வகையில், ஸ்டைலான வடிவமைப்பை விரும்புகிறார்கள். OPPO A16 இன் பெரிய 6.52 அங்குல திரை, ஒருவர் தனது விருப்பமான பொழுதுபோக்கை வசதியாகப் பார்க்க உறுதி செய்கிறது. நீண்ட பாவனைக்குரிய 5,000mAh மின்கலம், இணையத்தில் உலாவ, அதன் மூன்று கெமரா மூலம் சிறந்த தருணங்களை மிகத் தெளிவாகப் படம்பிடிக்க வசதியாக எவ்வித தடங்கலுமின்றி செயற்பட உதவுகின்றது.

Xinda Lanka [OPPO Sri Lanka] பிரதான நிறைவேற்று அதிகாரி பொப் லி இது தொடர்பில் தெரிவிக்கையில், “OPPO A16 அதன் பாணி மற்றும் செயல்பாட்டு கலவையில் எவ்வித விட்டுக் கொடுப்புமின்றி உருவாக்கப்பட்டுள்ளது. நவநாகரீக வடிவமைப்பு காரணமாக, உங்களின் தேவைக்காக வெளியே எடுக்கும்போது மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் உயர்ரக மூன்று கெமராக்கள், மறக்கமுடியாத தருணங்களை கைப்பற்ற உதவுகின்றன. அதன் பாரிய 5,000mAh மின்கலம், OPPO A16 இனது எடையிலும் பார்க்க அதிக பெறுமதியை வழங்குகிறது, எனவே மின்கல ஆயுள் குறித்து தொடர்ந்து கவலைப்படாமல் உங்கள் நாளை அனுபவிக்க முடியும்” என்றார்.

190 கிராம் எனும் மிகக் குறைந்த எடையுடனான கச்சிதமான கட்டமைப்புடன், 163.8 மி.மீ. நீளம், 75.6 மி.மீ. அகலம் மற்றும் 8.4 மி.மீ. தடிப்பம் கொண்ட இச்சாதனம், ஒரு வேலைப்பழுமிக்க நாள் முழுவதும் பயன்படுத்த வசதியானது. OPPO A16 ஆனது, வெப்பத்தை கடத்தும் அலுமினிய மேற்புற மூடியை கொண்டுள்ளது. அதன் LCD திரை மற்றும் 5,000 mAh மின்கலம் இரண்டையும் தன்னகத்தே கொண்ட OPPO A16 இன் நடுவிலுள்ள சட்டகமானது, வியக்கத்தக்க வகையில் மெல்லியதாக காணப்படுகின்றது. வெள்ளி உட்செலுத்தப்பட்டு, வண்ணப்பூச்சு தெளிக்கப்பட்ட, சட்டமானது உலோகம் போன்ற பிரகாசம் கொண்டதாகும். இச்சாதனம் கறுப்பு, நீலம் (Crystal Black, Pearl Blue) எனும் இரண்டு வண்ணங்களில் வருகிறது.

OPPO A16 இன் LCD திரவப் படிக திரையானது, அதன் உயர் தெளிவுத்திறன் மற்றும் பிரகாசத்தை கொண்டுள்ளது. அதன் மிகப் பிரகாசமான ‘சூரிய ஒளி’ திரை மற்றும் பிரகாசம் குறைந் நிலையிலான ‘நிலவொளி’ திரை, தன்னியக்க முறையில் செயற்பட்டு, உரிய வெளிச்ச நிலைமைகளினல் அதனை பார்க்க வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. 88.70% திரை விகிதம் மற்றும் 1600 x 720 (HD+) தெளிவுத்திறன் காரணமாக, எந்தவொரு பஸ்ஸின் இருக்கையையும் தற்காலிக பொழுதுபோக்கு அறையாக மாற்றுகிறது. AI ஸ்மார்ட் பின்புல ஒளியானது பயனரின் பிரகாச பழக்கங்களைக் கற்றுக் கொள்வதுடன் ‘தனிப்பயனாக்கப்பட்ட’ ஸ்மார்ட் பின்புல ஒளி அனுபவத்தை வழங்கும்.

OPPO A16 ஆனது நவநாகரீக வடிவமைப்பு அம்சங்களைக் கொண்டிருந்தாலும், அதன் கிளாசிக் உயர்நிலை மூன்று கெமரா அம்சமே அதனை, ஒரு உயர் ரக தோற்றத்திற்கு இட்டுச் செல்கின்றது. A16 ஆனது 2MP Depth (Bokeh) மற்றும் 2MP Macro Camera மற்றும் 13MP பிரதான கெமராக்களைக் கொண்டுள்ளது. எளிதாக ஒளிச் செறிவு, பிரகாசம், வண்ண நிலைகளை கைமுறையாக சமநிலைப்படுத்துவதற்கான வசதியையும் கொண்டுள்ளது. அது தவிர Warm, Mist, Country, Travel, Food, Film, Autumn போன்ற 15 filters களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.  அதன் 8MP முன்புற கெமரா தெளிவான செல்பியை எடுக்க உதவும் அதே நேரத்தில் முன் மற்றும் பின் கெமராக்கள் இரண்டிலும் AI Beautification காணப்படுவதால், ஒரு புகைப்படத்தில் உள்ள அனைவரினதும் சரும நிறங்களை சரிசெய்து தனித்தனியாக அனைவரையும் அழகுபடுத்துகின்றது.

அதன் 100% மின்கலமானது, 34 மணிநேர அழைப்பு நேரத்தை அல்லது 21.02 மணிநேர Youtube வீடியோ பார்வையிடலை வழங்குவதுடன், OPPO A16 இன் Super Nighttime Standby ஆனது 8 மணி நேர (23:00 முதல் 07:00 வரை) இரவு நேர பயன்பாடற்ற நிலையை வழங்குகிறது, இதற்காக 1.21% மின் சக்தியை மாத்திரமே பயன்படுத்துகிறது. மின்கலம் 5% அல்லது அதற்குக் கீழே செல்லும் போது, Super Power Saving Mode மூலம் பயனரை 1.84 மணிநேரம் வரை தொலைபேசியில் சட் செய்ய அனுமதிக்கிறது. Optimized Overnight Charging மூலம், OPPO A16 பயனர்களின் தூக்க முறையை அறிந்து அதன் அடிப்படையில் சார்ஜிங் தீர்வை உருவாக்கி, புத்திசாலித்தனமாக 80% வரை சார்ஜ் செய்து, பின்னர் பயனர் தூக்கத்தை விட்டு எழும் முன் அதனை முழுமையாக சார்ஜ் செய்கின்றது.

ஸ்மார்ட் வெப்பநிலை கட்டுப்பாட்டு (Smart Temperature Control) ஆனது, வெப்பநிலை சென்சர் கண்காணிப்பானாக செயற்பட்டு, சார்ஜ் செய்யும் போது தொலைபேசியின் பின்புற மூடியின் வெப்பநிலையை கண்காணிக்கிறது. அத்துடன் வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது சார்ஜ் செய்யப்படும் மின்னோட்டத்தை குறைக்கிறது. OPPO A16 மற்றொரு மிகவும் வசதியான அம்சத்தையும் கொண்டுள்ளது. முந்தைய தலைமுறைகளில் பயன்படுத்தப்பட்ட Micro-USB இணைப்பிக்குப் பதிலாக Type-C இணைப்பானை அது கொண்டுள்ளது.

சமூக வாழ்க்கை முறையைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தச் சாதனம், Nearby Share செயல்பாட்டைப் பயன்படுத்தி மற்றவர்களுடன் இணைய அனுமதிக்கிறது.

பின்னணியில் இயங்கும் System Booster மூலம் OPPO A16 இல் பயனர் அனுபவம் தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது. முந்தைய தலைமுறைகளுடன் ஒப்பிடுகையில் இது இயக்க பின்னடைவை 18% இனால் குறைக்கிறது. System Performance Optimizer (உறுதிப்பாட்டை) அடைவதற்காக, பின்புலத்தில் அதன் செயல்திறனை மேம்படுத்த தொலைபேசியில் பத்துக்கும் மேற்பட்ட மேம்படுத்தல்கள் செயல்படுத்தப்படுகின்றன.

OPPO A16 ஆனது IPX4 நீர்புகா இயல்பு உள்ளிட்ட ஏனைய துல்லியமான தர சோதனைகளை கடந்து வருகிறது. ஆய்வக அமைப்பு நிலைமைகளின் கீழ் சாதனம் IPX4 நீர்புகா தொழில்துறை தரத்தை அடைகிறது.

OPPO A16 ஆனது, 3GB RAM + 32GB ROM உடன் ரூ. 33,990 எனும் விலையில், அனைத்து OPPO விற்பனை நிலையங்களிலும், நாடு முழுவதுமுள்ள அபான்ஸ், சிங்ககிரி, டயலொக் காட்சியறைகள், Buy Abans மற்றும் Daraz.lk உள்ளிட்ட ஒன்லைன் தளங்களிலும் கிடைக்கின்றன.


Share with your friend