தொலைத்தொடர்பு துறையில் பணியாளர்களில் மேம்பட்ட பெண்களின் பங்களிப்பைக் கொண்டுள்ள எயார்டெல்

Share with your friend

உலகளாவிய தொலைதொடர்பு சேவை வழங்குநரும், இலங்கையின் மிகவும் விரும்பப்படும் தொழில் வழங்குநர்களில் ஒருவருமான எயார்டெல், தொலைத்தொடர்பு துறையில் பணி புரியும் ஊழியர்களுக்குள் பெண் பங்களிப்பை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

Great Place to Work மூலம் 2019ஆம் ஆண்டில் ‘பெண்கள் பணிபுரிவதற்கான 10 சிறந்த பணியிடங்களில்’ ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது, மேலும் 63மூக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் நிர்வாக பதவிகளில் உள்ளனர், அனைத்து தொலைத்தொடர்புகளின் முக்கிய செயல்பாடுகளிலிருந்தும் வேலை செய்வதற்கும், பயிற்சியளிப்பதற்கும், பயனடைவதற்கும் எயார்டெல் தொடர்ந்து அனைத்து ஊழியர்களுக்கும் சமமான தளத்தை வழங்கியுள்ளது.

ஆண்களுக்கு கிடைக்கக்கூடிய அதே வாய்ப்புகளை பெண்களுக்கும் வழங்கினால், பெண்களும் தங்கள் அபிலாஷைகளையும் பிற மைல்கற்களையும் தாண்டி வெற்றிபெறும் ஆற்றலைக் கொண்டிருப்பதால் சீரான ஒரு தொழில்துறையை உருவாக்க முடியுமென எயார்டெல் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. எயார்டெல் தொழில்நுட்பத்தின் ஆற்றலில் உறுதியான நம்பிக்கை மற்றும் வாய்ப்புகளை உருவாக்க தொழில்நுட்ப தொடர்பான வேலைவாய்ப்பு மற்றும் இறுதியில் ஒரு மாறுபட்ட திறன் கொண்ட பணியிடத்தை உருவாக்குகிறது.

எயார்டெல் தொடர்ந்து தனது உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், உள்ளடக்கிய மற்றும் மாறுபட்ட பணியிடத்தின் ஊடாக ‘புதிய இயல்பை’ நிறுவுவதன் மூலம், தொலைத்தொடர்பு துறையில் பெருகிய முறையில் மாறுபட்ட வாடிக்கையாளர் தளத்திற்கு சேவைகளை வழங்க முடிந்துள்ளது. தொலைத்தொடர்பு துறையின் உலகளாவிய உந்துதலின் மையத்தில் இருக்கும் திறமையான ஆண்களையும் பெண்களையும் ஈர்க்கவும் தக்கவைக்கவும் பாலின-வேறுபட்ட ஊழியர் குழு கொண்டிருக்கிறது, இவர்கள் அனைவரையும் புறக்கணிக்க விடாது அனைவருக்கும் சமமான மற்றும் பயனுள்ள ஒரு பணியிடத்தை உருவாக்குவது முக்கிய விடயமாகும்.

சௌம்யா நரேன்

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக டெல்கோவின் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இருந்த எயார்டெல் லங்காவின் தலைமை சேவை அதிகாரி சௌம்யா நரேன், டெல்கோவின் அனைத்து பணியாளர்களுக்கும் நியாயமான, பக்கச்சார்பற்ற மற்றும் சமமான வெகுமதியளிக்கும் முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும். எயார்டெல்லின் வடிவமைப்பு புத்தாக்கம், செயல்முறை ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் ஆகியவற்றில் பணிபுரியும் குழுக்களை சௌம்யா நிர்வகிக்கிறார். அவரது வார்த்தைகளில் எப்போதும் கூறுவது, எதிர்காலத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி டிஜிட்டல், மற்றும் தொலைதொடர்பு துறையில் பெண்கள் வெற்றிபெற ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன என்றே ஆகும். குறிப்பாக எயார்டெல் போன்ற ஒரு நிறுவனத்தில் பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் மற்றும் தொழில் ரீதியாக வெற்றிபெற தேவையான இடத்தையும் ஆதரவையும் அளிக்கிறது, தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பில் பெண்களின் எதிர்காலம் வலுவாகும் என்று சௌம்யா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சமிலா சில்வா

பன்முகத்தன்மைக்கு எயார்டெல்லின் முக்கியத்துவம் நிறுவனத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் பிரதிபலிக்கிறது. இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, Intelligent Networkஇன் உதவி முகாமையாளராக பணியாற்றும் சமிலா சில்வா, இலங்கை முழுவதிலும் உள்ள நான்கு பெண் நிபுணத்துவம் கொண்ட வலையமைப்பு பொறியாளர்களில் ஒருவராவார். டெல்கோவின் முன்-கட்டண முறைகள் எப்போதும் தடையின்றி இயங்குவதை உறுதிசெய்ய அவர் 24 மணிநேரமும் செயற்பட வேண்டியுள்ளது. எயார்டெல் லங்காவின் வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் முன் கட்டண இணைப்புகளில் இளைஞர்களாக இருப்பதால், நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறனுக்கு சமிலாவின் பணி முக்கியமானது.

கயானி படவலராச்சி

எயார்டெல் லங்காவின் பயிற்சி நிறைவேற்று அதிகாரி கயானி படவலராச்சி, பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்காக, இலங்கை முதலாளிகளின் கூட்டமைப்பு (EFC) உடன் டெல்கோவின் கூட்டணியின் விளைவாக எயார்டெல்லுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். EFC உடன் ICTஇல் அவர் பெற்ற பயிற்சி அதிக வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுத்தது, தொழில்நுட்பத்தைப் பற்றி மேலும் அறிய எயார்டெல்லில் தனது நேரத்தைப் பயன்படுத்தவும், இறுதியில் இந்தத் துறையில் மேலும் கல்வித் தகுதிகளைப் பெறவும் முடியுமென கயானி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply