இலங்கையின் முன்னணி உயர் கல்வி நிறுவனமான SLIIT, புதிய இயல்பு நிலையில் தனது 2021 ஜுலை பட்டமளிப்பு விழாவை கடந்த ஜுலை 30ஆம் திகதி மெய்நிகர் முறையில் நிகழ்த்தி 600ற்கும் அதிகமான பட்டதாரி மாணவர்களின் சாதனையைக் கொண்டாடியது.
மைல்கல்லான இந்த நிகழ்வின் நேரடி ஒளிபரப்பில் வேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் எல்.ரத்னாயக, துணைவேந்தரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே, அனைத்துப் பீடங்களின் தலைவர்கள், இன் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள் மற்றும் பட்டதாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பங்குபற்றினர்.
பட்டம் பெறும் மாணவர்களிடையே, தகவல் தொழில்நுட்பம், தகவல் விஞ்ஞானம், சைபர் செக்கியூரிட்டி, தகவல் தொழில்நுட்ப பொறியியல், கம்பியூட்டர் சிஸ்டம் மற்றும் நெட்வேர்க் பொறியியல், மென்பொருள் பொறியியல் மற்றும் ஊடாட்டம் நிறைந்த ஊடகம் ஆகியவற்றில் சிறப்பைக் கொண்ட கௌரவ தகவல் தொழில்நுட்ப விஞ்ஞான இளமானிப் பட்டம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடாட்டம் நிறைந்த ஊடகத் தொழில்நுட்பத்தில் சிறப்பைக் கொண்ட தகவல் தொழில்நுட்ப விஞ்ஞான இளமானிப் பட்டம், மனித மூலதன முகாமைத்துவம், கணக்கீடு மற்றும் நிதி, சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் ஆகியவற்றில் சிறப்பைக் கொண்ட விசேட கௌரவ வணிக முகாமைத்துவ இளமானிப் பட்டம், சிவில் பொறியியல், மின்னியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல், இயந்திரப் பொறியியல், மெக்காட்ரானிக் பொறியியல் மற்றும் மெட்டீரியல் பொறியியல் ஆகியவற்றில் சிறப்பைக் கொண்ட கௌரவ பொறியியல் விஞ்ஞான இளமானிப் பட்டம் மற்றும் இயந்திர பொறியியல் முதுகலைமானி தத்துவஞானி ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டன.
பட்டதாரிகளை வரவேற்ற துணை வேந்தரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே பட்டதாரிகள் மற்றும் இன் சாதனை தொடர்பில் குறிப்பிடுகையில், “ நீங்கள் தற்பொழுது இந்த நாட்டின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்குத் தேவையான அவசியமான மனித வளத்தின் ஒரு பகுதியாகியுள்ளீர்கள். பல்வேறு சவால்களை நாம் எதிர்கொண்டுடிருந்த போதிலும், நீங்கள் கெழ்வு மனப்பான்மை மற்றும் சிறப்பான நோக்கத்தில் SLIIT உடனான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். போட்டியான உலக அரங்கிற்குத் தேவையான திறன்களையும் நீங்கள் பெற்றுள்ளீர்கள். புத்தாக்கமாகவும், வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், சவால்களைச் சமாளிக்கவும் கற்றலில் ஆர்வத்தைத் தொடரவும் இது எதிர்கால வெற்றிக்கு உதவியாக இருக்கும் என உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.
சிறப்பாக செயற்பட்ட மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. சஹான் சந்தருவன் வெல்லால, யசிறு ஜயசிங்ஹ, நிரோஷன் சஞ்சய பாலசூரிய, ஹேரத் முதியன்சலாகே நிமந்தி மனிஷா ஹேரத், ஜயசேன கந்தன லியனகே கெஹேம உப்சலா தஹாநஞ்சனி, கவிந்தி ரணசிங்ஹ, தெனுஷ மதுஷான் குரகே, நிம்னா ஜயவீர, குஷானி ஊர்மீலா ஹெட்டியாராச்சி, லுனுவில ஹேவகே சனோதி ஜீவனி டி.சில்வா, இசுறு தனஞ்சய சமரசேகர, உதுல விஜயரத்ன, விதானலாகே கவிஷ் கல்ஹார டி.மேல், எச்.எம்.உடாரக செனவிரத்ன, அஞ்செய் விஜயகுமார், ஒஷத தேவப்பிரிய கமகே, டபிள்யூ.ஏ.தமாஷா ரசாங்கி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பட்டமளிப்பு விழாவின் வெற்றி தொடர்பில் கருத்துத் தெரிவித்த SLIIT இன் கல்வி விவகாரப் பணிப்பாளர் யஷாஸ் மல்லவராச்சி கருத்துத் தெரிவிக்கையில், “நாம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தாலும் எந்தவித காலதாமதமும் இன்றி கல்வி செயற்பாடுகளை எம்மால் தொடர முடிந்துள்ளது. ஒரு நிறுவனமாக நாங்கள் இலங்கையின் உயர்கல்வித்துறையில் தொடர்ந்து அளவுகோல்களை அமைத்து வருகிறோம், நாட்டிற்கு சேவை செய்ய எங்கள் பட்டதாரிகள் தொழிலில் சேருவதைக் கண்டு நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்றார்.